தேசிய வீரதீர விருது

இந்தியச் சிறாருக்கான தேசிய வீரதீர விருது (National Bravery Award for Indian Children) ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசும்[1] மற்றும் சிறார் நலத்திற்கான இந்திய மன்றமும் (ICCW) இணைந்து பல இடர்களின் இடையிலும் வீரமாகச் செயல் புரிந்த இந்தியச் சிறாருக்காக வழங்கப்படுகிறது.

தேசிய வீரதீர விருது
விருது குறித்தத் தகவல்
வகை குடியியல்
பகுப்பு 16 அகவைக்குட்பட்ட சிறுவர்/சிறுமியர்
நிறுவியது 1957
கடைசியாக வழங்கப்பட்டது 2011
மொத்தம் வழங்கப்பட்டவை 800 சிறார்கள் (568 சிறுவர்களும் 232 சிறுமியரும்)
வழங்கப்பட்டது இந்திய அரசு

பதினாறு அகவைக்குட்பட்ட 24 சிறாருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் 1978ஆம் ஆண்டு தங்களைக் கடத்தியவர்களுடன் போராடி உயிர்விட்ட சோப்ரா குழந்தைகள் நினைவாக ஓர் சிறுவனுக்குத் தரப்படும் சஞ்சய் சோப்ரா விருதும் ஓர் சிறுமிக்குத் தரப்படும் கீதா சோப்ரா விருதும் குறிப்பிடத்தக்கன.[2]. இந்த விருதுகளில் உயரியனவாக 1987ஆம் ஆண்டிலிருந்து கொடுக்கப்படும் பாரத் விருதும் 1988ஆம் ஆண்டிலிருந்து கொடுக்கப்படும் பாபு கயதானி விருதும் கருதப்படுகின்றன.

விருதுகள்

தொகு

ஒவ்வொரு விருதும் ஓர் பதக்கம், சான்றிதழ் மற்றும் நிதிப்பரிசு கொண்டவையாக உள்ளன. பாரத் விருது பெற்றோருக்கு தங்கப்பதக்கமும் ஏனையோருக்கு வெள்ளிப் பதக்கமும் வழங்கப்படுகிறது. [3][4] மேலும் அவர்கள் தங்கள் பள்ளிப் படிப்பை முடிக்க சிறார் நலத்திற்கான இந்திய மன்றத்தின் நிதிப்புரவலும் மருத்துவ,பொறியியல் போன்ற தொழில்முறைக் கல்விக்கு இந்திரா காந்தி படிப்புதவியும் வழங்கப்படுகின்றன.[5][6].

2009ஆம் ஆண்டிலிருந்து இந்திய அரசு மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இந்த விருது வென்றோருக்கு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது.[7]

விருதுகளின் பட்டியல்

தொகு
 1. பாரத் விருது, 1987 முதல்
 2. சஞ்சய் சோப்ரா விருது, 1978 முதல்
 3. கீதா சோப்ரா விருது, 1978 முதல்
 4. பாபு காயதானி விருது, 1988 முதல்
 5. தேசிய வீரதீர விருது, 1957 முதல்

வழங்குவிழா

தொகு

இந்த விருதுகள் நவம்பர் 14, சிறுவர் நாள், அன்று அறிவிக்கப்படுகின்றன; சில நேரங்களில் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் அறிவிக்கப்படுகின்றன. இந்தியக் குடியரசு நாள்|இந்தியக் குடியரசு நாளுக்கு முந்தைய நாள் இந்தியப் பிரதமர்|இந்தியப் பிரதமரால் வழங்கப்படுகின்றன. இதற்கு முன்னதாக இந்தியக் குடியரசுத் தலைவர் கொடுக்கின்ற விருந்து ஒன்றில் இவர்கள் ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றனர்[8]. குடியரசுத் திருநாள் பேரணியில் யானைமீது இவர்கள் பேரணியின் அங்கமாக உலா வருகின்றனர்[2][9].

மேற்கோள்கள்

தொகு
 1. National Bravery Awardஇந்திய அரசு Portal.
 2. 2.0 2.1 National Bravery Awards for 24 kids ரெடிப்.காம், 18 January 2007.
 3. R-Day honour for 26 brave children இந்தியன் எக்சுபிரசு, 14 November 2003.
 4. 26 children selected for Bravery Awards Sify.com, 13 November 2003.
 5. National bravery awards for 20 பரணிடப்பட்டது 2009-01-22 at the வந்தவழி இயந்திரம் தி இந்து, 18 Jan 2009.
 6. "21 children to get bravery awards". டெக்கன் ஹெரால்டு. 18 Jan 2010. http://www.deccanherald.com/content/47547/21-children-get-bravery-awards.html. 
 7. Govt reserves seats for National Bravery Award winners பரணிடப்பட்டது 2012-07-09 at Archive.today /indiaedunews.net, 19 January 2009.
 8. Rashtrapati Bhavan, New Delhi இந்தியக் குடியரசுத் தலைவர் Official website
 9. National Bravery Awards-2005 Press Release, Press Information Bureau (PIB), இந்திய அரசு.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_வீரதீர_விருது&oldid=3792529" இலிருந்து மீள்விக்கப்பட்டது