தேஜஸ்வி பிரகாஷ்

தேஜஸ்வி பிரகாஷ் வயங்கங்கர் (பிறப்பு 11 ஜூன் 1993) என்பவர் இந்தி தொலைக்காட்சியில் தோன்றும் ஓர் இந்திய நடிகையாவார். இவர் ஸ்வராகினி - ஜோடேன் ரிஷ்தோன் கே சுர் (2015-16) என்ற தொடரில் ராகினி மகேஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார். 2020இல், இவர் ஃபியர் ஃபேக்டர்: கத்ரோன் கே கிலாடி 10 என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றார். 2021இல், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் பதினைந்தாவது பதிப்பில் பங்கேற்று பட்டம் வென்றார். தற்போது இவர் நாகின் தொடரின் ஆறாம் பருவத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தேஜஸ்வி பிரகாஷ்
2018இல் பிரகாஷ்
பிறப்புதேஜஸ்வி பிரகாஷ் வயங்கங்கர்
11 சூன் 1993 (1993-06-11) (அகவை 30)[1]
ஜித்தா, சவூதி அரேபியா[2]
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்இளங்கலை பொறியியல், மும்பை பல்கலைக்கழகம்[3]
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2012–தற்போது வரை
அறியப்படுவது
  • ஸ்வராகினி - ஜோடேன் ரிஷ்தோன் கே சுர்
  • ஃபியர் ஃபேக்டர் - கத்ரோன் கே கிலாடி 10
  • பிக் பாஸ் 15
நாகினி 6

மேற்கோள்கள் தொகு

  1. "This is how Tejaswi Prakash celebrated her birthday". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 11 June 2017. https://timesofindia.indiatimes.com/tv/news/hindi/this-is-how-tejasswi-prakash-celebrated-her-birthday/articleshow/59095499.cms. 
  2. "That's how they run a show". The Pioneer. 28 February 2015. பார்க்கப்பட்ட நாள் 13 April 2016.
  3. "You don't get these suji wala golgappas in Mumbai: Actress Tejaswi in Noida". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேஜஸ்வி_பிரகாஷ்&oldid=3742437" இலிருந்து மீள்விக்கப்பட்டது