தேஜஸ் விரைவுத் தொடருந்து
தேஜஸ் எக்ஸ்பிரஸ் (Tejas Express) இந்திய இரயில்வே முதலில் அறிமுகம் செய்த, முழுவதும் குளிரூட்டப்பட்ட இந்தியாவின் அதிவேக தொடருந்து ஆகும். இருக்கை வசதிகள் மட்டும் கொண்ட, நவீன வசதிகளுடன் கூடிய தேஜஸ் விரைவு வண்டியின் கதவுகள் தானியங்கும் வசதி கொண்டது.[1]இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 130 முதல் 180 கிமீ ஆகும்.
வரலாறு
தொகுமுதல் தேஜஸ் விரைவு வண்டி, 24 மே 2017 அன்று முதல் சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையத்திலிருந்து, 551.7 கிமீ தொலைவில் உள்ள கோவாவின், கர்மலி தொடருந்து நிலையம் [2] வரை இயக்கப்படுகிறது. இதற்கான இப்பயண நேரம் 8.30 மணிநேரம் ஆகும். [3][4]
தேஜஸ் விரைவு வண்டியில் வசதிகள்
தொகுதேஜஸ் விரைவு வண்டிகளில் பயோ கழிப்பறை, தொலைக்காட்சி பெட்டிகள், இலவச இணைய வசதிகள் கொண்டது. [5] சதாப்தி விரைவு வண்டிகளின் கட்டணத்தை விட, தேஜஸ் வண்டியின் கட்டணம் 20% முதல் 30% கூடுதலாக இருக்கும்.[6]
இவ்வண்டியில் பொதுவான இருக்கை வசதி 3 + 2 எனும் முறையில் இருக்கைகள் உள்ளது. சொகுசு இருக்கைகள் 2 + 2 என்ற வரிசையில் உள்ளது. பெட்டியின் அனைத்து கதவுகளும் தானியங்கியாக செயல்படுகிறது.[7]
சேவைகள்
தொகுதற்போது கீழ்கண்ட வழித்தடங்களில் தேஜஸ் விரைவு வண்டிகள் இயங்குகிறது.
வண்டி எண் | பெயர் | வாராந்திர சேவை நாட்கள் |
---|---|---|
22119/22120 | மும்பை - கோவா தேஜஸ் விரைவு வண்டி[8] [9] | 5 (திங்கள் & வியாழன் தவிர) |
22425/22426 | புதுதில்லி - சண்டிகர் தேஜஸ் விரைவு வண்டி [10] | 6 (புதன் தவிர) |
12585/12586 | லக்னோ - புது தில்லி தேஜஸ் விரைவு வண்டி[11] [12] | 5 (ஞாயிறு & வியாழன் தவிர) |
22671/22672 | சென்னை எழும்பூர்-மதுரை சந்திப்பு தேஜாசு விரைவுவண்டி[13][14] | 6 (வியாழன் தவிர) |
மேற்கோள்கள்
தொகு- ↑ Luxury train Tejas Express running without safety clearance, ibtimes.com, 27 July 2017
- ↑ Karmali railway station
- ↑ "Mumbai-Goa route gets Railways' premium train Tejas". dna. 30 September 2016. பார்க்கப்பட்ட நாள் 15 October 2016.
- ↑ Tejas completes journey ahead of schedule despite 3-hour delay, indiatimes.com, 12 June 2017
- ↑ "All about Tejas Express: Digital New Interiors, Yummy Catering Onboard - Orient Rail Journeys Blog". www.luxurytrainindia.org. Archived from the original on 2017-06-03. பார்க்கப்பட்ட நாள் 2019-01-01.
- ↑ "Travel On Tejas Trains To Be Costlier Than Shatabdi".
- ↑ "Tejas trains to give passengers feel of world class travel with personal video screens, Wi-Fi, coffee vending machines", தி எகனாமிக் டைம்ஸ், 10 July 2016
- ↑ https://indiarailinfo.com/train/-train-karmali-mumbai-csmt-tejas-express-22120/52238/1853/467
- ↑ https://indiarailinfo.com/train/-train-mumbai-csmt-karmali-tejas-express-22119/52237/12282/1853
- ↑ ABOUT NEW DELHI CHANDIGARH TEJAS EXPRESS 22425/26
- ↑ Train No:12586 - New Delhi - Lucknow Tejas Express
- ↑ Train No:12585 - Lucknow Jn.- New Delhi Tejas Express
- ↑ சென்னை - மதுரை தேஜஸ் அதிவிரைவு வண்டி
- ↑ Southern Railway announces timings of Madurai-Chennai Tejas Express Train Time Table