தேனீச்சிகிச்சை
தேனீச்சிகிச்சை (Apitherapy) என்பது தேன், மகரந்தம், புரோபோலிஸ், அரசகூழ்மம் மற்றும் தேனீ விஷம் உள்ளிட்ட தேனீ தயாரிப்புகளை மருந்தாக பயன்படுத்தும் மாற்று மருத்துவத்தின் வகைகளுள் ஒன்றாகும். தேனீச்சிகிச்சையின் ஆதரவாளர்கள் இதனுடைய சுகாதார நலன்களுக்காக உரிமைகோருகின்றனர். போதுமான அறிவியல் அடிப்படை ஆதரமில்லையாகையால் இம்முறை ஆதரிக்கப்படவில்லை.[1] [2]
வரலாறு
தொகுதேன் மற்றும் தேனீ வளர்ப்பில் கிடைக்கும் பொருட்களின் மருத்துவ பண்புகள் மற்றும் பயன்பாடுகள் குறித்த குறிப்புகளைச் சீன, கொரிய, உருசிய, எகிப்து மற்றும் கிரேக்கப் பாரம்பரிய மருத்துவ முறைகளில் காணலாம்.[3][4] ஹிப்போகிரேட்ஸ் மற்றும் கேலன் காலங்களிலிருந்து தேனீச்சிகிச்சை நடைமுறையில் உள்ளது. [5][6] தேனீ நச்சின் நவீன பயன்பாடு ஆஸ்திரியா மருத்துவர் பிலிப் டெர்க்கின் 1888ஆம் ஆண்டு கட்டுரையான "தேனீ குச்சிகள் மற்றும் வாத நோய்களுக்கு இடையில் ஒரு விசித்திரமான தொடர்பு" [7] அறியலாம். ஆனால் இவரது கூற்றுக்கள் முறையான மருத்துவ பரிசோதனைகளில் சோதிக்கப்படவில்லை.[8] அங்கேரி மருத்துவர் போடாக் எப் பெக் 1935ல் ”தேனீ நச்சு சிகிச்சை" எனும் சொல்லினை அறிமுகப்படுத்தினார்.[5] தேனீ வளர்க்கும் சார்லஸ் மிராசு (1905-1999) தேனீ நச்சுச் சிகிச்சையினை பயன்படுத்தினார்.[9] 1957ஆம் ஆண்டில் உருசிய சுகாதார அமைச்சகம் நிக்கோலே ஆர்டெமோவின் தேனீ விசச் சிகிச்சைக்கான வழிமுறைகளை” அனுமதித்தது. இவற்றைக் குறிப்பிட்ட சில நோய்களுக்கு ப்பயன்படுத்தவும் அனுமதித்தது.[10][11]
சுகாதார உரிமைகோரல்
தொகுதேனீச் சிகிச்சை மாற்று மருத்துவத்தில் பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. [12] இருப்பினும் இதன் பயன்பாடு குறித்த அறிவியல் தொடர்பான சான்றுகளால் ஆதரிக்கப்படவில்லை. தேனீ நச்சு அல்லது பிற தேனீ தயாரிப்புகள் புற்றுநோய்க்கான சிகிச்சை அல்லது தடுப்புக்குப் பயனற்றவை. பொதுவாக, காயம் சிகிச்சையில் தேனைப் பயன்படுத்துவதற்கான சான்றுகள் மிகவும் குறைவாக உள்ளதால் உறுதியான முடிவுகளை எடுக்க இயலவில்லை. [13] [14]
அபாயங்கள்
தொகுதேனீ நச்சுச் சிகிச்சைக்குப் பாதகமான எதிர்வினைகள் அடிக்கடி நிகழ்கின்றன.[15] நச்சினை அடிக்கடி பயன்படுத்துவது ஆர்த்ரோபதிக்கு வழிவகுப்பதாக உள்ளது.[16] ஒவ்வாமை உள்ளவர்களுக்குத் தேனீ நச்சுக் கலவைகள் ஒவ்வாமையினை ஏற்படுத்துகிறது. இது லேசானது முதல் கடுமையான எதிர்வினையான அனாபிலாக்டிக் அதிர்ச்சி அல்லது மரணம் வரை கூட நிகழலாம்.[17]
மார்ச் 2018 இல், 55 வயதான பெண் ஒருவர் "நேரடி தேனீக் குத்தூசி மருத்துவம்" பெற்ற பின்னர் இறந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டது. கடுமையான அனாபிலாக்டிக் தொடர்பிரச்சனைகளால் அவதிப்பட்டார். சில வாரங்களுக்குப் பிறகு பல உறுப்பு செயலிழப்பு காரணமாக ஏற்பட்ட சிக்கல்களால் இவர் இறந்தார். [18] இந்த வழக்கை ஆய்வு செய்த ஆய்வாளர்களின் கூற்றுப்படி, நேரடி தேனீக் குத்தூசி மருத்துவம் சிகிச்சை “பாதுகாப்பற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது” எனத் தெரிவித்தனர். [17]
மேற்கோள்கள்
தொகு- ↑ American Cancer Society Complete Guide to Complementary and Alternative Cancer Therapies.
- ↑ The Complete Guide to Complementary Therapies in Cancer Care: Essential Information for Patients, Survivors and Health Professionals.
- ↑ Silva, J; Monge-Fuentes, V; Gomes, F; Lopes, K; Dos Anjos, L; Campos, G; Arenas, C; Biolchi, A et al. (2015). "Pharmacological Alternatives for the Treatment of Neurodegenerative Disorders: Wasp and Bee Venoms and Their Components as New Neuroactive Tools". Toxins 7 (8): 3179–3209. doi:10.3390/toxins7083179. பப்மெட்:26295258.
- ↑ Russian Federation; In: WHO Global Atlas of Traditional, Complementary and Alternative Medicine, Part 2; page 136. World Health Organization. 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9241562867. பார்க்கப்பட்ட நாள் 8 September 2017.
- ↑ 5.0 5.1 Kim, Christpher M.H. (4 June 2013). "Chapter 4: Apitherapy — Bee Venom Therapy". In Grassberger, Martin; Sherman, Ronald A.; Gileva, Olga S.; Kim, Christopher M.H.; Mumcuoglu, Kosta (eds.). Biotherapy – History, principles and practice: A practical guide to the diagnosis and treatment of disease using living organisms. Springer. pp. 77–78. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-007-6585-6.
- ↑ Wilcox, Christie (9 August 2016). Venomous: How Earth's Deadliest Creatures Mastered Biochemistry. Farrar, Straus and Giroux. p. 186. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-374-71221-1.
- ↑ Terč, Philipp (26 August 1888). "Ueber eine merkwürdige Beziehung des Bienenstichs zum Rheumatismus" (in de). Wiener Medizinische Press (Urban & Schwarzenberg) 29 (35): 1261–1263. https://books.google.com/books?id=KNAcAQAAMAAJ&pg=PA1261.
- ↑ Wilson, Bee (June 2006) [2004]. The Hive: The Story of the Honeybee and Us (1st U.S. ed.). Thomas Dunne Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-34261-6 – via Internet Archive.
- ↑ "History of Apitherapy". Medicineworld.org. பார்க்கப்பட்ட நாள் 31 August 2016.
- ↑ Berenbaum, May R. (January 1995). Bugs in the System: Insects and Their Impact on Human Affairs. Helix Books. p. 175. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-201-62499-1.
- ↑ Palmer, D. J. (27 February 1964). "Collecting bee venom for research". New Scientist. Vol. 21, no. 380. London. pp. 546–547. பன்னாட்டுத் தர தொடர் எண் 0262-4079.
- ↑ Premratanachai, Pongsathon; Chanchao, Chanpen (May 2014). "Review of the anticancer activities of bee products". Asian Pacific Journal of Tropical Biomedicine 4 (5): 337–344. doi:10.12980/APJTB.4.2014C1262. பப்மெட்:25182716.
- ↑ Jull, Andrew B.; Cullum, Nicky; Dumville, Jo C.; Westby, Maggie J.; Deshpande, Sohan; Walker, Natalie (2015). "Honey as a topical treatment for wounds". Cochrane Database of Systematic Reviews (3): CD005083. doi:10.1002/14651858.cd005083.pub4. பப்மெட்:25742878. "Honey appears to heal partial thickness burns more quickly than conventional treatment (which included polyurethane film, paraffin gauze, soframycin-impregnated gauze, sterile linen and leaving the burns exposed) and infected post-operative wounds more quickly than antiseptics and gauze.".
- ↑ Majtan, J (2014). "Honey: an immunomodulator in wound healing". Wound Repair Regen. 22 (2 Mar–Apr): 187–192. doi:10.1111/wrr.12117. பப்மெட்:24612472.
- ↑ Park, Jeong Hwen; Yim, Bo Kyung; Lee, Jun-Hwan; Lee, Sangun; Kim, Tae-Hun (21 May 2015). "Risk Associated with Bee Venom Therapy: A Systematic Review and Meta-Analysis". PLOS ONE 10 (5): e0126971. doi:10.1371/journal.pone.0126971. பப்மெட்:25996493.
- ↑ Cuende, E.; Fraguas, J.; Pena, J.E.; Pena, F.; Garcia, J.C.; Gonzalez, M. (1999). "Beekeeper's Arthropathy". The Journal of Rheumatology 26 (12): 2684–2690. doi:10.1016/j.reuma.2018.02.012. பப்மெட்:29530760. https://archive.org/details/sim_journal-of-rheumatology_1999-12_26_12/page/2684.
- ↑ 17.0 17.1 Vazquez-Revuelta, Madrigal-Burgaleta (2018). "Death due to Live Bee Acupuncture Apitherapy". The Journal of Investigational Allergology and Clinical Immunology (Esmon) 28 (1): 45–46. doi:10.18176/jiaci.0202. பப்மெட்:29461208. http://www.jiaci.org/revistas/vol28issue1_6-2.pdf. பார்த்த நாள்: 21 March 2018.
- ↑ Lagerquist, Jeff. "Woman's death after bee sting therapy shows practice is 'unsafe': study". CTV News. Bell Media. பார்க்கப்பட்ட நாள் 21 March 2018.