தேன் வளைக்கரடி

கிரீக் குடும்பத்தைச் சேர்ந்த சிற்றினம்
தேன் வளைக்கரடி
புதைப்படிவ காலம்:middle Pliocene – Recent
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Melivorina[1]
பேரினம்:
Melivora

(ஸ்ரோ, 1780)
இனம்:
M. capensis
புவியியல் பரவல்

தேன் வளைக்கரடி (honey badger)[2] என்பது கீரிக் குடும்பத்தைச் சேர்ந்த சிற்றினம் ஆகும். இது தென்மேற்கு ஆசியா, இந்தியத் துணைக்கண்டம், ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றது. தேன் வளைக்கரடியானது ஏனைய வளைக்கரடி இனங்கள் போன்ற தோற்றத்தில் இருக்காது; மரநாயின் உடல் தோற்றத்தைக் கொண்டு காணப்படுகின்றது. இதன் பரவல் எல்லை மற்றும் சுற்றாடல் இசைவாக்கம் என்பவற்றால் இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது முதன்மையாக ஊனுண்ணி வகையாக காணப்படுவதோடு, இதன் தடிப்பான தோல் மற்றும் இதன் மூர்க்கமான தற்காப்பு திறன்களினால் சில கொன்றுண்ணிகளையே கொண்டு காணப்படுகின்றது.

இந்திய துணைகண்டத்தில் இவ்விலங்கு மிகவும் அரிதாக காணப்படுகிறது. கர்நாடக மாநிலம் கனகபுரா தாலுகாவின் தொட்டாலஹல்லி என்ற கிராமத்தில் கிணற்றில் இருந்து காப்பாற்றப்பட்டு மைசூர் மிருகக்காட்சி சாலைக்கு மாற்றப்பட்டது, ஆனால் சில நாடகளிலேயே இறந்துவிட்டது. 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் உள்ளது புகைப்பட ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது[3].

குறிப்புகள்

தொகு
  1. Steve Jackson. "Honey Badger..." Archived from the original on 25 மே 2011. பார்க்கப்பட்ட நாள் 6 July 2011.
  2. "ratel, n.2". The Oxford English Dictionary Online. (March 2009). Oxford University Press. அணுகப்பட்டது 9 November 2010. 
  3. http://www.thehindu.com/news/national/karnataka/they-went-to-document-leopards-but-found-a-ratel/article5668448.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேன்_வளைக்கரடி&oldid=4176382" இலிருந்து மீள்விக்கப்பட்டது