தேன் வேட்டை

தேன் வேட்டை (Honey hunting) அல்லது தேன் அறுவடை என்பது காட்டுத் தேனீக் கூட்டங்களிலிருந்து தேன் சேகரிப்பதாகும். இது மிகவும் பழமையான மனித நடவடிக்கைகளில் ஒன்றாகும். ஆப்பிரிக்கா, ஆசியா, ஆத்திரேலியா மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் உள்ள பழங்குடியின சமூகங்களால் இன்னும் நடைமுறையில் உள்ளது. காட்டில் உள்ள தேன் கூடுகளிலிருந்து தேன் சேகரித்ததற்கான சில ஆரம்ப சான்றுகள் பாறை ஓவியம் மூலம் கிடைத்துள்ளன. இச்சான்றுகள் கி.மு. 8,000க்கு முந்தியது. ஐரோப்பாவின் நடுக்காலத்தில், காடு அல்லது பகுதி வனத் தேனீ கூடுகளிலிருந்து தேன் சேகரிப்பு வணிக அளவில் மேற்கொள்ளப்பட்டது.

காட்டுத் தேனீக் கூட்டங்களிலிருந்து தேன் சேகரிப்பது பொதுவாகத் தேனீக்களைப் புகையால் சாந்தப்படுத்தி, தேனி கூடுகள் அமைந்துள்ள மரங்கள் அல்லது பாறைகளை உடைத்து, பெரும்பாலும் தேனீ கூடுகளைச் சேதப்படுத்தி தேனை எடுக்கின்றனர்.

வாலேன்சியா அருகில் கியூவாசு டி லா அரானா என் பைகார்ப்பில் 8000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியம். தேன் தேடுபவர்

ஆப்பிரிக்கா

தொகு
 
கேமரூனில் தேன் வேட்டை

ஆப்பிரிக்காவில் தேன் வேட்டை பல பகுதிகளில் உள்ள பழங்குடி கலாச்சாரங்களின் ஒரு பகுதியாகும். இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்கிறது.

ஆசியா

தொகு

நேபாளம்

தொகு

நேபாளத்தில் தேன் வேட்டை பொதுவாகக் காட்டுத் தேன் வேட்டை என்று அழைக்கப்படுகிறது. இது நேபாளத்தில் கலாச்சார முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. குறிப்பாப் பூர்வீக குரூங் மற்றும் மாகர் சமூகங்களில் பாரம்பரியமாகத் தலைமுறைகள் வழியாகப் பரப்பப்பட்டது. மேலும் தேன் வேட்டைக்காரர்கள் மிகுந்த மரியாதையுடனும் போற்றுதலுடனும் கருதப்படுகிறார்கள். காட்டுத் தேன் மனநலவியல் பயன்பாடுகளுக்காக மதிப்பளிப்பது மட்டுமல்லாமல் பாரம்பரிய மருத்துவத்திலும் அதன் குணப்படுத்தும் பண்புகளுக்காகவும் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

நேபாளத்தின் தேன் வேட்டைக்காரர்கள் பற்றிய சார்பிலா படச் செய்தியாளர் டயான் சம்மர்ஸ் மற்றும் எரிக் வள்ளி ஆகியோரின் ஆவணப்படம்[1] மேற்கு-மத்திய நேபாளத்தின் குருங் பழங்குடியினர் காட்டுத் தேனைத் தேடி காட்டுக்குள் நுழைவதை ஆவணப்படுத்துகிறது.

மத்திய நேபாளத்தின் உயரமான இமயமலை அடிவாரத்தில் ஆண்டுக்கு இருமுறை ஆண் குழுக்கள் உலகின் மிகப்பெரிய தேனீயான ஏபிசு லேபரியோசாவின் தாயகமான பாறைகளைச் சுற்றிக் கூடுகின்றனர். தலைமுறை தலைமுறையாக, மனிதர்கள் இமயமலைப் பாறைத் தேனீயின் தேனை அறுவடை செய்ய இங்கு வருகிறார்கள்.

இது ஆகத்து 2008-ல் ஜிம்மி அண்ட் தி வைல்ட் ஹனி ஹண்டர்ஸ்-சன் என்ற தலைப்பில் பிபிசி2 ஆவணப்படத்திலும் ஆவணப்படுத்தப்பட்டது. ஆங்கிலேய விவசாயி ஒருவர் தேன் வேட்டையாடுவதற்காக இமயமலை அடிவாரத்தில் பயணம் செய்தார். உலகின் மிகப்பெரிய தேனீ, ஏ. லேபரியோசா, இங்கிலாந்தில் உள்ளதை விட இரண்டு மடங்கு பெரியது. இங்கு இவற்றின் பெரிய உடல்கள் குளிர்ந்த காலநிலைக்குக் காப்புக்காகத் தழுவின. ஆவணப்படம் 200 அடி கயிறு ஏணியில் ஏறி ஒரு கூடை மற்றும் ஒரு நீண்ட கம்பத்தைச் சமன் செய்து 2 மில்லியன் தேனீக்கள் வரை உள்ள ஒரு பெரிய தேன் கூட்டை உளியினால் வெட்டி கூடையில் சேகரிப்பதை உள்ளடக்கியது.

பல நூற்றாண்டுகளாக நேபாள நாட்டின் குருங் மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து காட்டுப் பாறைத் தேனைச் சேகரிக்கின்றனர். ஆண்ட்ரூ நியூவியின் புகைப்படங்கள் இந்த உயிரைப் பணயம் வைக்கும் இந்த அசாதாரண பாரம்பரியத்தைக் காட்சிப்படுத்தியது.[2]

வங்காளதேசம் & இந்தியா

தொகு

வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் மேற்கு வங்கம் ஆகியவற்றால் பகிர்ந்து கொள்ளப்படும் சுந்தரவனக் காடுகளில், கரையோரக் காடுகள் தேன் வேட்டைக்காரர்களின் செயல்பாட்டுப் பகுதியாகும். [3] இவர்கள் "மாவல்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த பகுதியில் பொதுவாகக் காணப்படும் புலிகளின் தாக்குதலில் பல தேன் வேட்டைக்காரர்கள் இறப்பதால் இது ஆபத்தான பகுதியாக உள்ளது. தேன் அறுவடை சடங்கு, சமூகத்திற்கு சமூகம் சற்று மாறுபடும். பூக்கள், பழங்கள் மற்றும் அரிசி ஆகியவற்றுடன் தேன் வேட்டைப் பிரார்த்தனை பலியுடன் தொடங்குகிறது. பின்னர் குன்றின் அடிப்பகுதியில் தீ மூட்டிப் புகை மூலம் தேனீக்களைத் தங்கள் தேன் கூட்டிலிருந்து விரட்டி தேனை எடுக்கின்றனர்.

இந்தோனேசியா

தொகு

ரியாவு மாகாணத்தில் பாரம்பரியமாகத் தேன் அறுவடை செய்யும் முறையானது மெனும்பை என்று அழைக்கப்படுகிறது. பெளலவன், தனா உலயாத் வனப்பகுதியில் உள்ள சியாலாங் மரத்தில் வசிக்கும் பெட்டாலங்கான் மக்களால் இந்த முறையில் திறமையாகத் தேன் அறுவடைச் செய்யப்படுகிறது. மெனும்பை பெளலவன் என்பது தேன் கூட்டிலிருந்து வாளி மற்றும் கயிற்றைப் பயன்படுத்தி தேனை எடுக்கும் ஒரு வழிமுறையாகும். தேனீக்கள் தேன் எடுப்பவரில் உடலில் கொட்டுவதைத் தடுக்க, தேன் எடுக்கும் போது மந்திரங்கள் மற்றும் பாசுரங்களை ஒலிக்கின்றனர். மெனும்பை பெளலவன் காட்டுத் தேனீக் கூட்டங்களில் பிற்பகல் வேளைகளில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.

ஐரோப்பா

தொகு

செயல்பாடு

தொகு
 
சுவார்செட்சில் உள்ள பழைய மரத்தில் தேனடைப் போன்ற துளை
 
தேன் வேட்டையாடுபவர் போல் உடையணிந்த ஒரு மேனிக்வின்

கற்காலத்தில், மக்கள் காட்டுத் தேனீக்களின் தேனைச் சேகரித்தனர். ஆனால் இது வணிக ரீதியாகச் செய்யப்படவில்லை. ஆரம்பக்கால இடைக்காலத்தில் இது ஒரு வர்த்தகமாக மாறியது. இச்செயல் செருமனிய மொழி பேசும் மத்திய ஐரோப்பாவில் அறியப்பட்டது. உதாரணமாக, ஜீட்லர், காடுகளில் உள்ள காட்டு, பகுதி வன அல்லது உள்நாட்டுத் தேனீக்களின் தேனைச் சேகரிப்பதை வேலையாகக் கொண்டிருந்தனர். நவீன தேனீ வளர்ப்பவர்கள் போலல்லாமல், இவர்கள் தேனீக்களை மனிதனால் உருவாக்கப்பட்ட மர தேனீப்பெட்டிகளை வைக்கவில்லை. மாறாக, சுமார் ஆறு மீட்டர் உயரமான பழமையான மரங்களில் தேன் பொந்துகளாகத் துளைகளை வெட்டி நுழைவாயிலின் மேல் பலகையைப் பொருத்தினர். தேனீக்கள் இங்கு கூடுகளை அமைப்பது முற்றிலும் இயற்கை சூழலைச் சார்ந்த நிகழ்வாக இருந்தது. இது ஒவ்வொரு ஆண்டும் மாறக்கூடும். காற்றினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் மரத்தின் உச்சி கிளைகளும் வெட்டப்பட்டன.

பரவல்

தொகு

மிகவும் மதிப்புமிக்க, மரத் தேனீ வளர்ப்பிற்கு எந்தவொரு முன்னிபந்தனையாக இல்லாவிட்டாலும், ஊசி இலைக் காடுகளில் தேனீ வளர்ப்பு நடைபெற்றது. இடைக்காலத்தில் தேன் வேட்டைக்கான முக்கிய இடங்களாக பிக்டெல் மலைகள் மற்றும் நியூரம்பெர்க் இம்பீரியல் வனப்பகுதிகள் இருந்தன. பவேரியாவில் கிராபென்ஸ்டாட் அருகே 959ஆம் ஆண்டிலேயே வன தேனீ வளர்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய பெர்லின் பகுதியில் கூட, அன்றைய மிகப் பெரிய க்ரூன்வால்டில், விரிவான தேன் சேகரிப்பு நடவடிக்கை இருந்துள்ளது.

நியூரம்பெர்க்கைச் சுற்றியுள்ள பகுதியில், பியூச்சில் உள்ள ஜீட்லர்ஸ்க்லாசு கோட்டை போன்ற முந்தைய செழிப்பான பகுதிகளில் தேன் வேட்டை பாரம்பரியம் பற்றிய பல குறிப்புகள் இன்னும் உள்ளன. நியூரம்பெர்க்கின் இஞ்சியணிச்சல் உற்பத்திக்குத் தேன் முக்கியமானது. நியூரம்பெர்க் ரெய்ச்சுவால்ட் ("புனித உரோமைப் பேரரசின் தேனீ தோட்டம்") தேனினை தாராளமாக வழங்கியது.

மேற்கோள்கள்

தொகு
  1. Expedition, Go For Nepal Treks &. "A Day with Honey Hunters in Nepal". Go For Nepal Treks & Expedition (in ஆங்கிலம்). Archived from the original on 2020-02-02. பார்க்கப்பட்ட நாள் 2020-02-02.
  2. "The ancient art of honey hunting in Nepal - in pictures". The Guardian. 27 February 2014. https://www.theguardian.com/travel/gallery/2014/feb/27/honey-hunters-nepal-in-pictures. 
  3. "A honey-collecting odyssey". 8 June 2003. http://news.bbc.co.uk/2/hi/programmes/from_our_own_correspondent/2969234.stm. 

https://hikingbees.com/blog/best-honey-hunting-destinations-in-nepal/

இலக்கியம் மற்றும் திரைப்படம்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேன்_வேட்டை&oldid=4109546" இலிருந்து மீள்விக்கப்பட்டது