தேபேந்திரநாத் தாகூர்

தேபேந்திரநாத் தாகூர் (Debendranath Tagore 15 மே 1817 - 19 சனவரி 1905) இந்து மெய்யியலாளர்கள், மத சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தவர். இவர் பிரம்ம சமாஜத்தில் (பிராமண சமூகம்) முக்கிய பங்களித்து இந்துமத சீர்திருத்தவாதியாக வகுத்தவர். 1848 ஆம் ஆண்டில் துவங்கிய பிரம்மோ மதத்தில் நிறுவியவர்களில் ஒருவராவார்.

தேபேந்திரநாத் தாகூர்
பிறப்பு(1817-05-15)15 மே 1817
கொல்கத்தா, வங்காளம், பிரித்தானிய இந்தியா[1]
இறப்பு19 சனவரி 1905(1905-01-19) (அகவை 87)
கொல்கத்தா, வங்காளம், பிரித்தானிய இந்தியா
தேசியம்பிரித்தானிய இந்தியர்
பணிமத சீர்திருத்தவாதி
அரசியல் இயக்கம்வங்காள மறுமலர்ச்சி
பிள்ளைகள்9 மகன்கள்
5 மகள்கள்

இவர் 15 மே 1817 அன்று கொல்கத்தாவில் பிறந்தார். இவரது தந்தையார் தொழிலதிபரான துவார்க்கநாத் தாகூர். இந்து மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர். உபநிடத்தை நன்றாக பயின்றவர். இவரது இயக்கமான தத்துவபோதினி சபாவும் பிரம்மோ சபாவும் இணைந்து பிரம்மோ சமாஜ் 1848ஆம் ஆண்டில் துவங்கியது.

தாகூர் பாரி(தாகூர்களின் வீடு) தொகு

தேபேந்திரநாத் தாகூர் வடமேற்கு கொல்கத்தாவில் ஜோராசங்கோ தாகூர் பாரி எனக் கூறப்படுகின்ற தாகூர்களின் வீட்டில் பிறந்தார். பின்னர் ஜோராசங்கோ தாகூர் பாரி ரபீந்திர பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. 300 ஆண்டுகளாக கொல்கத்தாவில் தாகூர் குடும்பம் ஒரு முன்னணி குடும்பமாக திகழ்ந்தது. இக்குடும்பத்தில் நிறைய நபர்கள் வணிகம், சமுகம், மத சீர்திருத்தம், இலக்கியம், கலை மற்றும் இசை ஆகிய துறைகளில் முக்கிய பங்களித்துள்ளனர்.

பிள்ளைகள் தொகு

தேபேந்திரநாத் தாகூர் சாரதா தேவியை (1830 - 1875) மணந்து பதினைந்து பிள்ளைகளைப் பெற்றார்.[2].

துவிஜியேந்திரநாத் தாகூர் (1840-1926) இசையமைப்பாளர், அறிஞராவார். வங்காள மொழியில் சுருக்கெழுத்துகளும் இசைக்குறியீடுகளும் துவங்கியவர்.

சத்யேந்திரநாத் தாகூர் (1842-1923) முதல் இந்திய அரசமைப்புச் சேவகராக இணைந்தவர்.

ஹேமேந்திரநாத் தாகூர் (1844-1884) விஞ்ஞானியான இவர் இக்குடும்பத்தில் முக்கிய பங்களித்தவர். தற்போது ஆதிதர்ம மதமாக கருதப்படும் நவீன பிரம்மோத்துவத்தில் பொறுப்பேற்றவர்.

ஜோதிரிந்திரநாத் தாகூர் (1849-1925) கலை மற்றும் இசை ஆகிய துறைகளில் முக்கிய பங்களித்த அறிஞராவார்.

ரபீந்திரநாத் தாகூர் (1861-1941) இளைய மகனான இவர் தேசிய கீதத்தை இயற்றியவர். இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்றவர். விசுவபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவியவர்.

பிரேந்திரநாத், புன்யேந்திரநாத், புதேந்திரநாத் மற்றும் சோமேந்திரநாத் ஆகியோர் மற்ற மகன்களாவர்.

சவுதாமினி, சுகுமாரி, சரத்குமாரி, சுவர்ணகுமாரி மற்றும் பர்னகுமாரி ஆகியோர் மகள்களாவர்.

இயற்றிய நூல்கள் தொகு

வங்காள மொழியில்

 • பங்கள பாஷய் சன்ஸ்கிருத வியாகரன் (1838)
 • பிரம்மோதர்மா (1849)
 • ஆத்மதத்துவவித்யா (1852)
 • பிரம்மோதர்மா மத் ஓ பிஸ்வாஸ் (1860)
 • பஸ்சிம் பிரதேஷார் துர்பிக்‌ஷ உபஷம் சஹஜ்ய சங்கரஹர்தே பிரம்மோ சமஜே பக்ரிதா (1861)
 • பிரம்மோதர்மா பியாகியன், பகுதி 1 (1861)
 • கலிகதா பிரம்மோசமஜே பக்ரிதா (1862)
 • பிரம்மோ பிபஹ பிரனளி (1864)
 • பிரம்மோ சமஜே பஞ்சபிங்சதி பத்சரேர் பரிக்‌ஷித பிரித்தந்தா (1864)
 • பிரம்மோ தர்மர் அனுஸ்தன்-பதட்டி (1865)
 • போவானிபூர் பிரம்மவித்யாலயர் உபதேஷ் (1865-66)
 • பிரம்மோதர்மா பியாகியன், பகுதி 2 (1866)
 • மாசிக் பிரம்மோ சமஜே உபதேஷ் (1882)
 • பிரம்மோதர்மா பியாகியன் (1885)
 • ஞான் ஓ தர்மர் உன்னதி (1893)
 • பரலோக் ஓ முக்தி (1895)
 • அத்யோஜிவாணி (1898)
 • பத்ரவளி (கடிதங்களின் தொகுப்புகள் 1850-87ல் இயற்றப்பட்டது)

ஆங்கிலத்தில்

 • மெய்ப்பிக்கப்பட்ட வேதாந்தக் கோட்பாடுகள் (1845)
 • சுயசரிதை (வங்களமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது. ஆத்மஜிவானி, சத்யேந்திரநாத் தாகூர், 1914)

சான்றுகள் தொகு

 1. Chaudhuri, Narayan (2010) [1973]. Maharshi Debendranath Tagore. Makers of Indian Literature (2nd ). New Delhi: Sahitya Akademi. பக். 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-260-3010-1. 
 2. "Sarada Devi (1830-1875), mother of Rabindranath". Archived from the original on 2019-01-14. பார்க்கப்பட்ட நாள் 2019-02-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேபேந்திரநாத்_தாகூர்&oldid=3559401" இலிருந்து மீள்விக்கப்பட்டது