தேவநல்லூர் கோமதி அம்மன் உடனுறை சோமநாதர் கோயில்

தேவநல்லூர் கோமதி அம்மன் உடனுறை சோமநாதர் கோயில் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டம், தேவநல்லூர் என்ற ஊரில் உள்ள சிவன் கோயில் ஆகும்.[1] இக்கோயிலானது திருநெல்வேலியில் இருந்து களக்காடு செல்லும் சாலையில் தாமிரபரணி ஆற்றின் துணை ஆறான பச்சையாற்றின் கரையில் அமைந்துள்ளது. இத்தலம் இராமர் சிவனை வழிபட்டு பேறுபெற்ற பஞ்சலிங்க தலங்கலில் ஒன்றாக கருதப்படுகிறது.[2]

தொன்மம்

தொகு

800 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை வீரமார்த்தாண்டன் என்னும் மன்னன் ஆண்டுவந்தான். ஒரு சமயம் அவன் வேட்டைக்குச் சென்றபோது, வேட்டை நாய் ஒன்று முயலைத் துரத்திச் என்றது. ஓடிக்கொண்டிருந்த முயல் ஒரு மரத்தின் அடியில் சென்றதும், திடீரென நாயை எதிர்த்து நின்று, நாயை விரட்டியது. மறு நாள் வேட்டைக்குச் சென்றபோதும் இதேபோன்று முயல் அந்த இடத்தில் நாயை விரட்டிய நிகழ்வு நடந்தது.

இதைக் கண்டு ஆச்சரியமுற்ற மன்னன். மரத்தின் அருகே குழிதோண்டிப் பார்க்குமாறு தன் வீரர்களுக்கு கட்டளை இட்டான். அப்போது அக்கே ஒரு சிவலிங்கம் கிடைத்தது. இறைவனின் பெருமையை வியந்து பச்சையாறின் கரையில் சோமநாதருக்கு கோயில் கட்டினான் என்ற கதை உள்ளது.[2]

இறைவன் இறைவி

தொகு

சோமநாதர் கோயிலில் இறைவன் சிவலிங்கமாக காட்சியளிக்கிறார். இறைவியின் திருவுருவம் மிகுந்த நுணுக்கமாக வடிக்கப்பட்டுள்ளது. அம்மனின் முகத்தில் புன்னகையுடன் காட்சியளிப்பவராக உள்ளார். இருவரும் கிழக்கு நோக்கி காட்சியளிக்கின்றனர்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "திருமணத் தடை நீக்கும் சோமநாதர்". தினமணி. 2023-சூலை-14. Archived from the original on 2013-08-19. பார்க்கப்பட்ட நாள் 16 சனவரி 2024. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. 2.0 2.1 2.2 "திருமணத் தடை நீக்கும் தேவநல்லூர் ஸ்ரீசோமநாதர்". இந்து தமிழ். 2023-சூன்-13. பார்க்கப்பட்ட நாள் 16 சனவரி 2024. {{cite web}}: Check date values in: |date= (help)