தேவர் பில்லத்தி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தேவர் பில்லத்தி (T. பில்லத்தி), தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் வட்டாரத்தில் மல்லல் ஊராட்சியில் அமைந்துள்ளது. இந்த ஊர் சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். சில வருடங்களுக்கு முன்பு இந்த ஊரில் சுமார் நாற்பது வீடுகள் வரை இருந்தன. ஆனால், இப்பொழுது இருபது வீடுகள் மட்டுமே உள்ளன. இவ்வூரில் வசிப்பவர்கள் அனைவரும் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவ்வூர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பெயரால் தேவர் பில்லத்தி என அழைக்கப்படுகிறது.