தேவிநேனி நேரு

இந்திய அரசியல்வாதி

தேவிநேனி நேரு (Devineni Nehru) (பிறப்பு தேவிநேனி ராஜசேகர் ; 22 ஜூன் 1954 - 17 ஏப்ரல் 2017) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள காங்கிபாடு சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய சட்டமன்ற உறுப்பினராவார்.

தேவிநேனி நேரு
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2004–2009
முன்னையவர்எலமஞ்சிலி நாகேசுவர ராவ்
பதவியில்
1983–1999
முன்னையவர்கெனேரு ரங்காராவ்
பின்னவர்எலமஞ்சிலி நாகேசுவர ராவ்
தொகுதிகாங்கிபாடு சட்டமன்றத் தொகுதி
தொழில்நுட்பக் கல்வி அமைச்சர்
பதவியில்
12 டிசம்பர் 1994 – 1 செப்டம்பர் 1995
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
தேவிநேனி ராஜசேகர்[1]

(1954-06-22)22 சூன் 1954
காங்கிபாடு, கிருஷ்ணா மாவட்டம்
இறப்பு17 ஏப்ரல் 2017(2017-04-17) (அகவை 62)
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி (1982-1995, 2016-2017)
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு (1996-2016)
பிள்ளைகள்தேவிநேனி அவினாசு (மகன்)

வாழ்க்கை

தொகு

நேரு, 1954 ஜூன் 22 அன்று விசயவாடாவில் பிறந்தார். விஜயவாடாவில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் இல்ட்சுமி என்பவரை மணந்தார். இவர்களுக்கு கிராந்தி என்ற மகளும், தேவிநேனி அவினாசு என்ற மகனும் உள்ளனர். [2]

தொழில்

தொகு

மறைந்த முதல்வர் என். டி. ராமராவின் தெலுங்கு தேசம் கட்சியின் அமைச்சரவையில் ராஜசேகர் (1994-96) அமைச்சராகப் பணியாற்றினார். ராஜசேகர் காங்கிபாடு சட்டமன்றத் தொகுதியில் இருந்து ஐந்து முறை (1983, 1985, 1989, 1994 மற்றும் 2004) எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். 2004இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து வெற்றி பெற்றார். 2009 தேர்தலில் 190 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2009 தேர்தலில் 190 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஆந்திர மாநிலப் பிரிவினைக்குப் பிறகு நடந்த 2014 தேர்தலிலும் தோற்றார். பின்னர் மீண்டும் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். [3]

இவர் 17 ஏப்ரல் 2017 அன்று ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பால் இறந்தார். [4][5][6][7]

மேற்கோள்கள்

தொகு
  1. IANS. "Former Andhra minister Devineni Nehru dies of cardiac arrest". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 17 April 2017.
  2. Devineni Avinash
  3. "Nehru to join TDP today". https://www.thehindu.com/news/cities/Vijayawada/Nehru-to-join-TDP-today/article14639259.ece. பார்த்த நாள்: 2021-11-30. 
  4. "Reason Behind Devineni Nehru aka Rajasekhar". பார்க்கப்பட்ட நாள் 17 April 2017.
  5. "Devineni Nehru is dead - Today's Paper - The Hindu".
  6. Staff Reporter (2017-04-18). "Devineni Nehru is dead" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/todays-paper/devineni-nehru-is-dead/article18089720.ece. 
  7. "Thousands attend funeral of Devineni Nehru | Vijayawada News - Times of India".
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவிநேனி_நேரு&oldid=3823472" இலிருந்து மீள்விக்கப்பட்டது