தேவிந்தர் குப்தா

தேவிந்தர் குப்தா (Devinder Gupta)பிறப்பு: 4 ஏப்ரல் 1943) என்பவர் இந்திய நீதிபதி மற்றும் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார்.[1]

குப்தா இமாச்சலப் பிரதேசம் சிம்லாவைச் சேர்ந்தவர். இளங்கலைச் சட்டம் படிப்பு முடித்த பிறகு இவர் 23 மார்ச் 1967-ல் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். ஆரம்பத்தில் இவர் இமாச்சலப் பிரதேசத்தின் மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களில் பயிற்சி பெற்றார். 1990ஆம் ஆண்டு சூன் 25-ல், குப்தா இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதன்பிறகு 1994ல் தில்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். குப்தா பல்வேறு காலங்களில் தில்லி உயர்நீதிமன்றத்தில் தற்காலிக தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.[2] தில்லி மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.[3] நீதிபதி குப்தா 10 மார்ச் 2003 அன்று ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்று 2005 ஏப்ரல் 4 அன்று பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Justice Devinder Gupta appointed Chief Justice of Andhra HC". Zee News (in ஆங்கிலம்). 2003-03-03. பார்க்கப்பட்ட நாள் 2021-03-12.
  2. "Hon". www.supremecourtcaselaw.com. Archived from the original on 2011-07-20. பார்க்கப்பட்ட நாள் 2021-03-12.
  3. "DGCJ". tshc.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-03-12.
  4. "Former Judges". delhihighcourt.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-03-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவிந்தர்_குப்தா&oldid=3994804" இலிருந்து மீள்விக்கப்பட்டது