தேவி கட்கா (Devi Khadka) தற்போது பிரதிநிதிகள் சபையில் உள்ள தோலகாவைச் சேர்ந்த நேபாள கம்யூனிஸ்ட் அரசியல்வாதி ஆவார்.[1]

தேவி கட்கா
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2008
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1979
குடியுரிமைநேபாளி
தேசியம்நேபாளி
அரசியல் கட்சிநேபாள பொதுவுடைமைக் கட்சி
துணைவர்ராஜ் குமார் சிரேஸ்டா
வாழிடம்தோலகா மாவட்டம்
வேலைPolitician

வாழ்க்கை மற்றும் தொழில் தொகு

தோலகாவின் உள்ளூர்வாசியான தேவி கட்கா,நேபாள உள்நாட்டுப் போரில் பங்கேற்றவர். குறிப்பாக ஆளும் முடியாட்சி அரசாங்கத்திற்கு எதிராக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) பிரிவில் தேவி கட்கா சேர்ந்தார்.ஏழைகளை ஒடுக்குதல், தன் தந்தையின் உடைமைகளை அபகரித்தல் மற்றும் அவரது சகோதரர் ரித் பட்கூர் கட்கா ஆகியோரை பாதுகாப்புப் படையினர் கொன்றதை மேற்கோள் காட்டி[2] 1990 ஆம் ஆண்டு மக்கள் இயக்கத்தில் முழுமையான முடியாட்சியை தாராளமயமாக்க வலியுறுத்திய போராட்டத்தில் பங்கேற்றார்.  இவர் 1996 ஆம் ஆண்டில்  மாவோயிஸ்டுகள் இயக்கத்தில் சேர்ந்தார்.1990 ஆம் ஆண்டு மக்கள் இயக்கத்தில் முழுமையான முடியாட்சியை தாராளமயமாக்க போராட்டத்தில் பங்கேற்றார். உள்நாட்டுப் போர் வெடித்தவுடன் மக்கள் குடியரசை அறிமுகப்படுத்தத் தொடங்கினார்.[3]

உள்நாட்டுப் போரின் போது, கட்கா மாவோயிஸ்டுடன் தொடர்புடைய அனைத்து நேபாள பெண்கள் சங்கத்தின் (புரட்சிகர) நிறுவனத் தலைவராக பணியாற்றினார். 1997 ஆம் ஆண்டில். இவரைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டபோது தப்பி ஓடி  ஒரு மாதம் மறைந்து வாழ்ந்து வந்தார். பின்னர் நான்கு மாதங்கள் காவல்துறையின் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இக்காலகட்டத்தில் இவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். 1999 ஆம் ஆண்டில், இவர் தோலகா, சிந்துபால்சோக், ஒகல்தூங்கா மற்றும் சோலுகும்பு ஆகிய பகுதிகளில் இராணுவத் தளபதியாக பணியாற்றினார். இறுதியில் 2002 ஆம் ஆண்டில் இவர் தோலகாவின் மாவோயிஸ்ட் பொதுவுடைமை இயக்க மாவட்டச் செயலாளரானார்.

கட்கா உள்நாட்டுப் போர் முடிவடைந்து 2008 ஆம் ஆண்டில் நேபாள அரசியலமைப்புப் பேரவை நிறுவப்பட்டதிலிருந்து தோலகாவின் மாவோயிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். இவர் 2011 ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை, இயல் திட்டமிடல் துறையில் மாநில அமைச்சராக பணியாற்றினார்.[4] 2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து, தோலகாவில் அடிமட்டத்தில் கட்சியின் உறவுகளை வலுப்படுத்த ஜனபரிஷத் நிழல் அரசாங்கத்தை நிறுவுவதில் மாவோயிஸ்ட் முயற்சிகளை கட்கா முன்னெடுத்துச் சென்றார்.[5] முன்னாள் மாநில அமைச்சர் மற்றும் சிபிஎன் (மாவோயிஸ்ட் மையம்) தலைவர் தேவி கட்கா உள்பட 40 தனிநபர்கள் மீது தோலகா மாவட்ட நீதிமன்றத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கொலை வழக்கு சர்ச்சை தொகு

கட்கா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அவற்றில் சில பினவருமாறு, உள்ளாட்சித் தேர்தலின் முதல்கட்டத்திற்கு முன்னதாக கவுரிசங்கர் கிராம சபையின் குல் பகதூர் தமாங் ஒருவரைக் கொன்றது தொடர்பாக மாவட்ட அரசு வழக்கறிஞர் கைலாஷ் தஹால் இந்த கொலை வழக்கைத் தாக்கல் செய்தார்.கவுரிசங்கர் கிராம கவுன்சில் வார்டு எண் 1 இற்கான சிபிஎன்-யுஎம்எல் வேட்பாளர் கோர் தமாங்கின் மகன் தமாங், சிபிஎன் (எம்சி) வீரர்களால் கொல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது.தமாங்கின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் 9 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில், கட்கா, கட்சியின் மத்திய செயலக உறுப்பினர் கங்கா கார்கி மற்றும் மாவட்ட பொறுப்பாளர் பிஷால் கட்கா ஆகியோரை போலீசார் கைது செய்யவில்லை.[6] ஐக்கிய மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் கட்சியின் தோலகா நாடாளுமன்ற உறுப்பினரான சாந்தி பக்ரின், 2002 ஆம் ஆண்டில் கட்கா மாவட்டச் செயலாளராக இருந்தபோது தனது கணவர் புத்தி மான் பக்ரினை மாவோயிஸ்டுகள் கொன்றது குறித்து பேசியுள்ளார்.[7]

மேற்கோள்கள் தொகு

  1. "EC officially announces hung Parliament" (in en-US). The Himalayan Times. 9 February 2018. https://thehimalayantimes.com/nepal/election-commission-officially-announces-hung-parliament/. 
  2. "War movie leaves Maoist MPs sobbing – The Himalayan Times" (in en-US). The Himalayan Times. 26 November 2007. https://thehimalayantimes.com/nepal/war-movie-leaves-maoist-mps-sobbing/. 
  3. "A tale of two MPs – Nepali Times". archive.nepalitimes.com. பார்க்கப்பட்ட நாள் 7 October 2018.
  4. "Nepali Times | The Brief » Blog Archive  » New Maoist team". archive.nepalitimes.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 7 October 2018.
  5. "Maoist Centre Dolakha forms people’s council" (in en-US). The Himalayan Times. 3 September 2017. https://thehimalayantimes.com/nepal/cpn-maoist-centre-dolakha-forms-peoples-council/. 
  6. "Jugu incident: Murder case filed against 40 people including ex-state minister". kathmandupost.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-09-20.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  7. "A tale of two MPs- Nepali Times". archive.nepalitimes.com. பார்க்கப்பட்ட நாள் 2021-09-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவி_கட்கா&oldid=3480600" இலிருந்து மீள்விக்கப்பட்டது