தேவீரஅள்ளி நடுபழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்
தேவீரஅள்ளி நடுபழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், தேவீரஅள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1]
அருள்மிகு நடுபழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கிருஷ்ணகிரி |
அமைவிடம்: | பண்ணந்தூர் மெயின்ரோடு, தேவீரஅள்ளி, போச்சம்பள்ளி வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | பர்கூர் |
மக்களவைத் தொகுதி: | கிருஷ்ணகிரி |
கோயில் தகவல் | |
மூலவர்: | தண்டாயுதபாணிசுவாமி |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
கோயில் சிறப்பு
தொகுஇக்கோயிலானது பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலைப்போலவே சிறு குன்றின் மீது அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு இந்தப்பெயரை கிருபானந்த வாரியார் சூட்டினார். இக்கோயிலுக்கு பழனி மலையின் சாயலுடன் மலைப்படிகள் இளைப்பாறும் மண்டபங்கள் அமைந்துள்ளன.
கோயில் அமைப்பு
தொகுமரையின் தொடக்கத்தில் கருங்கல்லாலான தோரண வாயிலானது மண்டபம் போன்று அமைக்கப்பட்டுள்ளது. மலையடிவாரத்தில் தேர் நிறுத்தப்பட்டுள்ளது. மலைப்படிகளில் ஏறும்போது இடையில் இடும்பனின் சுதைச் சிற்பம் மற்றும் இளைப்பாறும் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் மகா மண்டபத்தின் முன்புறம் மயில் உருவமும், பலிபீடமும் அமைக்கப்பட்டுள்ளது. மகாமண்டபத்தையடுத்து அர்த்த மண்டபமும், கருவறையும் அமைந்துள்ளது. கருவறையில் வேலுடன் நின்ற கோலத்தில் தண்டாயுதபாணி உள்ளார். இக்கோயிலில் தண்டாயுதபாணிசுவாமி சன்னதியும், விநாயகர் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
தொகுஇக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. பங்குனி மாதம் 15 நாட்கள் முக்கிய திருவிழாவாக தேர்த் திருவிழா நடைபெறுகிறது. தைப்பூசத்தன்று நடைபெறும் திருவிழாவின்போது பக்கர்கள் காவடி எடுத்தும் அலகு குத்தியும் நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
அமைவிடம்
தொகுஇக்கோயிலானது கிருஷ்ணகிரி தரும்புரி நெடுஞ்சாலையில் உள்ள காரிமங்கலத்தில் இருந்து பண்ணந்தூர் செல்லும் வழியில் தேவீர அள்ளி அமைந்துள்ளது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. pp. 84–86.
{{cite book}}
: Check date values in:|year=
(help)