தேவூர், நாகப்பட்டினம்
தேவூர், இந்தியாவின் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டம், கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம், தேவூர் ஊராட்சியில் அமைந்த கிராமங்களில் ஒன்றாகும். இதன் அஞ்சல் சுட்டு எண் 611 109 ஆகும். இவ்வூர் நாகப்பட்டினத்திலிருந்து, வலிவலம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. தேவூர் மாவட்டத் தலைமையிடமான நாகப்பட்டினத்திற்கு மேற்கே 16 கிலோ மீட்டர் தொலைவிலும், வட்டத் தலைமையிடமான கீழ்வேளூரிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இதனருகே அமைந்த நகரங்கள்: திருவாரூர் 13 கிலோ மீட்டர், திருத்துறைப்பூண்டி 26 கிலோ மீட்டர் மற்றும் காரைக்கால் 29 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இவ்வூர் [[நாகப்பட்டினம்|நாகப்பட்டினத்திலிருந்து வலிவலம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.[1]
வழிபாட்டுத் தலம்
தொகுமக்கள் தொகை பரம்பல்
தொகு2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 1,211 வீடுகள் கொண்ட தேவூர் கிராமத்தின் மக்கள் தொகை 4622 ஆகும். அதில் ஆண்கள் 2322 மற்றும் பெண்கள் 2300 ஆகவுள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 467 (10.10%) ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் 991 வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 88.45% ஆகும். இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,553 (33.60%) மற்றும் 4 ஆக உள்ளனர். [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ https://soki.in/thevur-kilvelur-nagapattinam Thevur Village, Kilvelur Taluka information]
- ↑ Thevur Population – Nagapattinam