தேவேந்தர் சிங் ராணா
தேவேந்தர் சிங் ராணா (Devender Singh Rana)(1965-31 அக்டோபர் 2024) சம்மு-காசுமீரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் சம்மு மாவட்டத்தில் உள்ள சம்மு காசுமீர் சட்டமன்றத் தொகுதியான நாக்ரோட்டா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவரா ராணா முன்னர் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டின் சம்மு மாகாணத் தலைவராக இருந்தார்.
தேவேந்தர் சிங் ராணா | |
---|---|
சம்மு காசுமீர் சட்டப் பேரவை | |
பதவியில் 8 அக்டோபர் 2024 – 31 அக்டோபர் 2024 | |
தொகுதி | நாக்ரோட்டா சட்டமன்றத் தொகுதி |
பதவியில் 23 திசம்பர் 2014 – 21 நவம்பர் 2018 | |
முன்னையவர் | ஜூகல் கிசோர் சர்மா |
தொகுதி | நாக்ரோட்டா சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1965 |
இறப்பு | 31 அக்டோபர் 2024 பரீதாபாது, அரியானா, இந்தியா | (அகவை 58–59)
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி (2021 முதல்) |
பிற அரசியல் தொடர்புகள் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி (2014–2021) |
உறவினர் | ஜிதேந்திர சிங் (சசோதரர்) |
வேலை | அரசியல்வாதி |
இளமை
தொகுதோடா மாவட்டத்தின் செனாப் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள மல்கோரி கிராமத்தைச் சேர்ந்த ராணா, சம்மு-காசுமீரின் சம்மு மாவட்டத்தில் உள்ள காந்திநகரில் குடியேறினார். இவரது தொகுதி சம்முவின் நக்ரோட்டா சட்டமன்றத் தொகுதி ஆகும். இவர் ராஜீந்தர் சிங் ராணாவின் மகனும், மூத்த பாஜக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜிதேந்திர சிங்கின் சகோதரரும் ஆவார்.[1] 1986ஆம் ஆண்டில் குருசேத்ராவில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் குடிமைப் பொறியியலில் பட்டம் பெற்றுள்ளார்.[2]
தொழில்
தொகு2014 சம்மு-காசுமீர் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நக்ரோட்டா சட்டமன்றத் தொகுதியிலிருந்து முதல் முறையாகச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[3] இவர் இத்தேர்தலில் 23,678 வாக்குகளைப் பெற்று தனது நெருங்கிய போட்டியாளரான பாரதிய ஜனதா கட்சி நந்த் கிசோரை 4,048 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[4] 2024 சட்டமன்றத் தேர்தலில் ராணா நக்ரோட்டா தொகுதியில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[5][6]
மரணம்
தொகுஉடல் நலமின்மைக் காரணமாக பரிதாபாத்தில் உள்ள மாதா அமிர்தானந்தமயி மருத்துவமனையில், 2024 அக்டோபர் 31 அன்று ராணா இறந்தார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 PTI (2024-10-31). "J&K BJP MLA Devender Singh Rana passes away at 59" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/jammu-and-kashmir/jk-bjp-mla-devender-singh-rana-passes-away-at-59/article68818121.ece.
- ↑ "Devender Singh Rana(JKNC):Constituency- NAGROTA(JAMMU) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 16 September 2024.
- ↑ "Devender Singh Rana wins from Nagrota". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 16 September 2024.
- ↑ "National Conference's Davinder Singh Rana wins Nagrota Assembly seat". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/national-conferences-davinder-singh-rana-wins-nagrota-assembly-seat/articleshow/45616710.cms?from=mdr.
- ↑ India (PTI), Press Trust of (12 September 2024). "JK Polls: BJP's Devender Rana Files Nomination from Nagrota Seat". Kashmir Life (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 16 September 2024.
- ↑ "Jammu and Kashmir Election: BJP's Devender Rana wins with highest margin, PDP's Rafiq Ahmad Naik with lowest". https://economictimes.indiatimes.com/news/elections/assembly-elections/jammu-kashmir/jammu-and-kashmir-election-bjps-devender-rana-wins-with-highest-margin-pdps-rafiq-ahmad-naik-with-lowest/articleshow/114050781.cms?from=mdr.