தேவேந்திர குலத்தார்

தமிழ்நாட்டில் வாழும் இனக்குழுவினர்

தேவேந்திர குலத்தான்[1] எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இச்சமூகத்தினர் பள்ளர் இனத்தின் ஒரு பிரிவினராக கருதப்படுகின்றனர். தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், இவர்கள் பட்டியல் பிரிவில் (எண் 17) உள்ளனர்.[2] எனவே தேவேந்திர குல வேளாளர் எனும் பெயரால் அழைக்கப்படுகின்றார்கள்.[3]

தேவேந்திர குலத்தான்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
பள்ளர், குடும்பன்

சொற்பிறப்பு

இவர்கள் தங்களை தேவேந்திரன் வழி வந்தவர்கள் என்கிறார்கள். அதன் காரணமாக இவர்கள் தேவேந்திர குலத்தான் என்று பெயர் பெற்றனர்.[4]

தொழில்

இச்சமூகத்தினர் பொதுவாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பண்ணாடிகளில் சிலர் அரசு அல்லது தனியார் வேலைகளில் பணியாற்றுகின்றனர். ஒரு சிலர் வியாபாரத்திலும் ஈடுபடுகின்றனர்.[5]

மக்கள் தொகை

1991 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி 50,709 பேர் உள்ளனர் அதில் ஆண்கள் 25, 285 பேரும், பெண்கள் 25425 பேரும் உள்ளனர் [6]

வாழும் பகுதிகள்

இவர்கள் தமிழகத்தில், குறிப்பாக மேற்கு மாவட்டகளில் சேலம், தருமபுரி, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில், அதிக அளவில் வசிக்கின்றனர்.[7]

மேற்கோள்கள்

  1. Pulparampil, John. Nation Building and Local Leadership: A Study from South India (in ஆங்கிலம்). p. 118. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781545718315.
  2. "http://socialjustice.nic.in/writereaddata/UploadFile/Scan-0017.jpg". {{cite web}}: External link in |title= (help)CS1 maint: url-status (link)
  3. C.P.சரவணன், C.P.சரவணன் (20 அக்டோபர் 2019). தேவேந்திர குல வேளார்கள் பட்டியல் வெளியேற்ற தாமதத்திற்கு காரணம் மத்திய அரசா? மாநில அரசா? (in ஆங்கிலம்). தினமணி.
  4. Nagendra Kr Singh, Nagendra Kr Singh (2006). Global Encyclopaedia of the South Indian Dalit's Ethnography (in ஆங்கிலம்). Global Vision Pub House. they are the descendants of Devendra (the King of the Gods) and, so, were named Devendrakulathan
  5. Singh, Kumar Suresh (1992). People of India:India's communities,Volume 4 (in ஆங்கிலம்). Anthropological Survey of India. p. 793. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0195633547.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. Nagendra Kr Singh, Nagendra Kr Singh (2006). Global Encyclopaedia of the South Indian Dalit's Ethnography (in ஆங்கிலம்). Global Vision Pub House.
  7. ‎Vina Mazumdar, Leela Kasturi (1990). Women Workers in India: Studies in Employment and Status (in ஆங்கிலம்). Chanakya Publications,. In the Salem - Coimbatore - Dharamapuri region they refer to themselves as Devendra Kulam , Kuttan or Kulathan .{{cite book}}: CS1 maint: extra punctuation (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவேந்திர_குலத்தார்&oldid=3847588" இலிருந்து மீள்விக்கப்பட்டது