தேவ் திப்பா

இந்தியாவிலுள்ள ஒரு மலைச்சிகரம்

தேவ் திப்பா (Deo Tibba) என்பது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் 5,985 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு மலையாகும். [1] தேவ் என்றால் 'கடவுள்' (தேவன்), திப்பா என்றால் 'மலை' எனவும் பொருள். [2] இது பிர் பாஞ்சல் மலைத்தொடரில் ஜகட்சுக் கிராமத்திற்கு மேல் மணாலியின் தென்மேற்கில் அமைந்துள்ளது. இது முதன்முதலில் தளபதி புரூசின் வழிகாட்டியான பூரர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அதன் முகடுகளில் ஒன்று அம்தா கண்வாயிலிருந்து ஏறக்கூடியதாக இருப்பதாகத் தெரிவித்தார். [3] இந்த சிகரத்தின் உச்சிக்கு செல்லும் பாதை ஒரு சவாலான நிலப்பரப்பைக் கொண்டுள்ள. மலையேறும் ஒருவர் செங்குத்தான பனிப்பாதைகள், பிளவுகள் கொண்ட பனிப்பாறைகள், சறுக்கும் பாறைகள் ஆகியவற்றைக் கடக்க வேண்டும். [4] ஸ்டோக் காங்ரியுடன் ஒப்பிடும் போது இது மிகவும் உயரம் குறைவாக இருப்பதால், மலையேறும் ஆர்வமுவர்களுக்கு இது சில சமயங்களில் ஒரு தொடக்க சிகரமாக தவறாகப் புரிந்து கொள்ளப்படுறது. உள்ளூர் மற்றும் சர்வதேச அணிகள் இந்த சிகரத்தை இந்திராசன் (6221 மீ) சிகரத்துடன் அடிக்கடி முயற்சி செய்கின்றன. இவை இரண்டும் உயரமான துகாங்கன் கோல் வழியாக இணைக்கப்படுகின்றன

உள்ளூர் மக்களின் நம்பிக்கைகளின்படி, தேவ் திப்பா என்பது கடவுள்கள் கூடும் இடமாகும். இந்து புராணங்களின்படி, குவி வடிவ சிகரமான இது தெய்வங்கள் அமர்ந்திருக்கும் இடமாக கருதப்படுகிறது.

சான்றுகள் தொகு

  1. Deo Tibba – Climbing, Hiking & Mountaineering
  2. "Deo Tibba Trek - In the Abode of Gods | Do-It-Yourself Trek by Indiahikes". Indiahikes (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2020-10-01. பார்க்கப்பட்ட நாள் 2020-09-22.
  3. "DEO TIBBA : Himalayan Journal vol.17/12". www.himalayanclub.org. பார்க்கப்பட்ட நாள் 2020-09-22.
  4. "Mt. Deo Tibba Expedition - 6001 M Peak Near Manali - Bikat Adventures". www.bikatadventures.com. பார்க்கப்பட்ட நாள் 2020-09-22.


"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவ்_திப்பா&oldid=3588399" இலிருந்து மீள்விக்கப்பட்டது