தே தேயும்

மிகப்பழைய கிறித்தவ திருப்புகழ் பாடல்

தே தேயும் அல்லது திருச்சபையின் நன்றி கீதம் (இலத்தீன்: Te Deum laudamus; ஆங்கில மொழி: Thee, O God, we praise) என்பது மிகப்பழைய கத்தோலிக்க கிறித்தவப் பாடல் ஒன்றைக்குறிக்கும். இது கத்தோலிக்க திருச்சபையில் அதன் திருப்புகழ்மாலையின் போதும், கடவுளுக்கு நன்றி கூறும் தருணங்களான புதிய திருத்தந்தை தேர்வாகும் போதோ, ஆயர் அருட்பொழிவுவின் போதோ, புனிதர் பட்டமளிப்பு நிகழ்வின் போதோ, துறவற வார்த்தைப்பாட்டின் போதோ, அமைதி உடண்படிக்கை ஏற்படும் போதோ பாடப்படும். இது குறிப்பாக திருப்பலியின் முடிவிலோ அல்லது வழிபாட்டின் முடிவிலோ பாடப்படும்.[1] இது பாடப்படும் போது, ஆலய மணிகள் ஒலிப்பது வழக்கம். இப்பாடல் ஆங்கிலிக்க ஒன்றியம் மற்றும் சில லூதரனிய திருச்சபைகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. திருவருகைக் காலம், தவக் காலம், and பாஸ்கா முப்பெரும் நாட்கள் ஆகிய நாட்களில் இப்பாடல் பாடுவதில்லை[2] இதனை வெளிப்படையாக இறைமக்களோடு சேர்ந்து ஆண்டு நிறைவு நாளில் பாடுபவர்களுக்கு நிறைவுப் பலன் உண்டு.[3]

ஆலய தே தேயும் சன்னல் கண்ணாடி, கலைஞர்: கிறிஸ்டோபர் வால்ஸ்

இப்பாடலுக்கு ஹேடன், மோட்சார்ட், வேர்டி, டுவோராக், ஜார்ஜ் ஃபிரிடெரிக் ஹாண்டெல் முதலிய பலர் இசையமைத்துள்ளனர்.

பாடல்

தொகு


இலத்தீனில் தமிழில்

Te Deum laudamus:
te Dominum confitemur.
Te aeternum Patrem
omnis terra veneratur.
Tibi omnes Angeli;
tibi caeli et universae Potestates;
Tibi Cherubim et Seraphim
incessabili voce proclamant:
Sanctus, Sanctus, Sanctus,
Dominus Deus Sabaoth.
Pleni sunt caeli et terra
maiestatis gloriae tuae.
Te gloriosus Apostolorum chorus,
Te Prophetarum laudabilis numerus,
Te Martyrum candidatus laudat exercitus.
Te per orbem terrarum
sancta confitetur Ecclesia,
Patrem immensae maiestatis:
Venerandum tuum verum et unicum Filium;
Sanctum quoque Paraclitum Spiritum.
Tu Rex gloriae, Christe.
Tu Patris sempiternus es Filius.
Tu ad liberandum suscepturus hominem,
non horruisti Virginis uterum.
Tu, devicto mortis aculeo,
aperuisti credentibus regna caelorum.
Tu ad dexteram Dei sedes, in gloria Patris.
Iudex crederis esse venturus.
Te ergo quaesumus, tuis famulis subveni:
quos pretioso sanguine redemisti.
Aeterna fac cum sanctis tuis in gloria numerari.

[கீழ்வருவது பின்நாட்களின்
திருப்பாடல்களிலிருந்து சேர்க்கப்பட்டது:]

Salvum fac populum tuum,
Domine, et benedic hereditati tuae.
Et rege eos, et extolle illos usque in aeternum.
Per singulos dies benedicimus te;
Et laudamus Nomen tuum in saeculum, et in saeculum saeculi.
Dignare, Domine, die isto sine peccato nos custodire.
Miserere nostri Domine, miserere nostri.
Fiat misericordia tua,
Domine, super nos, quemadmodum speravimus in te.
In te, Domine, speravi:
non confundar in aeternum.

இறைவா உம்மை வாழ்த்துகின்றோம்
ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம்
நித்திய தந்தாய் உமை என்றும்
இத்தரை எல்லாம் வணங்கிடுமே.
விண்ணும் விண்ணக தூதர்களும்
விண்ணின் மாண்புறு ஆற்றல்களும்
செரபீம் கெரபீம் யாவருமே
சேர்ந்துமக் கென்றும் பண்ணிசைப்பர்.
தூயவர் தூயவர் தூயவராம்
நாயகன் மூவுலகாள் இறைவன்
மாட்சிமை மிக்க உம் மகத்துவத்தால்
வானமும் வையமும் நிறைந்துள்ளன.
அப்போஸ்தலரின் அருள் அணியும்
இறைவாக்கினரின் புகழ் அணியும்
மறைசாட்சியரின் வெண்குழுவும்
நிறைவாய் உம்மைப் போற்றிடுமே.
இத்தரை எங்கும் திருச்சபையும்
பக்தியாய் உம்மை ஏற்றிடுமே
பகருதற்குரிய மாண்புடையோய்
தகைசால் தந்தாய் தாள் பணிந்தோம்.
உம் ஒரே திருமகன் இயேசுவையும்
எம் இறையெனப் புகழ்ந்தேற்றுகிறோம்
தேற்றரவெமக்குத் தருபவராம்
தூய உம் ஆவியைத் துதிக்கின்றோம்.
வேந்தே மாண்புயர் கிறிஸ்துவே, நீர்
தந்தையின் நித்திய மகனாவீர்
மண்ணுயிர் மீட்க மனங்கொண்டு
கன்னியின் வயிற்றில் கருவானீர்.
சாவின் கொடுக்கை முறித்தழித்து
பாவிகள் எமக்கு வான் திறந்தீர்
இறுதி நாளில் நடுத்தீர்க்க வருவீர்
என யாம் ஏற்கின்றோம்.
உம் திருஇரத்தம் மீட்ட எம்மை
அன்பாய் காத்திட வேண்டுகின்றோம்
முடியா மகிமையில் புனிதருடன்
அடியார் எம்மையும் சேர்த்திடுவீர்.

[கீழ்வருவது பின்நாட்களின்
திருப்பாடல்களிலிருந்து சேர்க்கப்பட்டது:]

உம்மவர் நாங்கள் எமை மீட்பீர்
உம் உடைமைக்கே வாழ்வளிப்பீர்
எம்மை ஆண்டு இறைமக்களாய்
என்றும் சிறப்புறச் செய்திடுவீர்.
எந்நாளும் உம்மை வாழ்த்துகிறோம்
என்றும் உம் பெயர் போற்றுகிறோம்
இறைவா இந்நாள் எம்பாவக்
கறைகள் போக்கிக் காத்திடுவீர்
கனிவாய் இறங்கும் ஆண்டவரே
கனிவாய் இரங்கும் எம்மீதே
உம்மையே நம்பினோம் ஆண்டவரே
எம்மீதிரக்கம் கொள்வீரே.
உம்துணை நம்பினோம் ஆண்டவரே
என்றும் கலக்கம் அடையோமே
உம்துணை நம்பினோம் ஆண்டவரே
என்றும் கலக்கம் அடையோமே

மேற்கோள்கள்

தொகு
  1. "The Te Deum (cont.)". Musical Musings: Prayers and Liturgical Texts — The Te Deum. CanticaNOVA Publications. பார்க்கப்பட்ட நாள் 2007-07-07.
  2. "Holy Innocents". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். அணுகப்பட்டது 2010-04-14. 
  3. "Te Deum". Archived from the original on 2012-01-08. பார்க்கப்பட்ட நாள் 2011-12-31.


வார்ப்புரு:கத்தோலிக்க வழிபாட்டுப் பாடல்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தே_தேயும்&oldid=3559234" இலிருந்து மீள்விக்கப்பட்டது