தைஜுல் இஸ்லாம்

பங்களாதேஷ் துடுப்பாட்டக்காரர்

தைஜுல் இஸ்லாம் (Taijul Islam (பிறப்பு:பெப்ரவரி 7, 1992) வங்காளதேசத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் வங்காளதேச அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். இடதுகை கழல் திருப்பப் பந்துவீச்சாளரான இவர் 2013 ஆம் ஆண்டில் வங்காளதேச அ அணிக்குத் தேர்வானார். 2014 ஆம் ஆண்டு வங்காளதேச அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியது. அந்தத் தொடரில் 5 இலக்குகளைக் கைப்பற்றினார். பின் அடுத்த ஆண்டில் சிம்பாப்வே அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அந்தத் தொடரில் 39 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 8 இலக்குகளைக் கைப்பற்றினார். பின் 2016 ஆம் ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். அந்தப் போட்டியில் ஹேட்ரிக் இலக்கினை வீழ்த்தினார். இதன்மூலம் அறிமுகப் போட்டியில் ஹேட்ரிக் இலக்கினை வீழ்த்திய முதல் வங்காளதேச வீரர் எனும் சாதனை படைத்தார்.

உள்ளூர்ப் போட்டிகள்

தொகு

தைஜுல், ராஜ்ஹாசி மற்றும் வடக்கு மாகாண அணி சார்பாக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார். மேலும் தூரந்தோ ராஜ்ஹாசி அணிக்காக வங்காளதேச பிரீமியர் லீக் தொடரில் விளையாடி வருகிறார். மேலும் தாகா பிரீமியர் லீக்கிக்ல் பிரைம் தோலேஷ்வர் அணிக்காக விளையாடி வருகிறார். 2010-2011 ஆம் ஆண்டுகளில் ராஜ்ஹாசி அணிக்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.[1] இந்தத் தொடரில் 14 இலக்குகளைக் கைப்பற்றினார்.

ராஜ்ஹாசி மாகாண அணிக்காக விளையாடுவதற்கு முன்பாக தனது சொந்த ஊரான நதூர் அணி சார்பாக விளையாடினார்.[2] 2009 ஆம் ஆண்டில்19 வயதிற்கு உட்பட்டோருக்கான வங்காளதேச அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியது. அதில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு தேர்வுத் துடுப்பாட்ட்ப் போட்டிகளில் இவர் விளையாடினார்.[3][4]

சர்வதேச போட்டிகள்

தொகு

2014 ஆம் ஆண்டில் வங்காளதேச அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. 2013-14 ஆம் ஆண்டுகளில் உள்லூர்ப் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் இவருக்கு 15 பேர் கொண்ட அணியில் இடம் கிடைத்தது.[5] பின் தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இடம் பெற்றிருந்த அப்துர் ரசாக் காயம் காரணமாக விலகியதால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.[6] கிங்ஸ்டவுனில் நடந்த முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 135 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் அறிமுகப் போட்டியில் 5 இலக்குகளைக் கைப்பற்றிய ஆறாவது வங்காளதேச வீரர் எனும் சாதனை படைத்தார்.[7]

அக்டோபர் 2014 இல் சிம்பாப்வே துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. மூன்று தேர்வுப் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் 16.5 ஓவர்கள் வீசி 39 ஓட்டங்களை விட்டுகொடுத்து 8 இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் 8 இலக்குகள் வீழ்த்திய முதல் வங்காளதேச பந்துவீச்சாளர் எனும் சாதனை படைத்தார். இதர்கு முன்பாக சகீப் அல் அசன் 2008 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக 36 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 7 இலக்குகளைக் கைப்பற்றியதே சாதனையாக இருந்தது.[8][9] மேலும் இலங்கையைச் சேர்ந்த ரங்கனா ஹெராத் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜானி பிரிக்ச் ஆகிய இரு இடதுகை பந்துவீச்சாளர்கள் மட்டுமே இதற்கு முன்பாக 8 இலக்குகளை எடுத்திருந்தனர்.[10] இந்தப்போட்டியின் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.[11]

சான்றுகள்

தொகு
  1. First-class matches played by Taijul Islam (21) – CricketArchive. Retrieved 27 October 2014.
  2. "Bangladesh / Players / Taijul Islam". ESPN Cricinfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 27 October 2014.
  3. Under-19 Test matches played by Taijul Islam (1) – CricketArchive. Retrieved 27 October 2014.
  4. Under-19 ODI matches played by Taijul Islam (3) – CricketArchive. Retrieved 27 October 2014.
  5. Mohammad Isam (10 May 2014). "Three newcomers in Bangladesh A squad" – ESPNcricinfo. Retrieved 27 October 2014.
  6. Mohammad Isam (22 August 2014). "Taijul Islam and Shuvagata Hom set for Test call-ups" – ESPNcricinfo. Retrieved 27 October 2014.
  7. "Bowling records: Test matches (Bangladesh)". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 September 2014.
  8. Alagappan Muthu (27 October 2014). "Bangladesh stumble after Taijul eight-for" – ESPNcricinfo. Retrieved 27 October 2014.
  9. "Statistics / Statsguru / Test matches / Bowling records" – ESPNcricinfo. Retrieved 27 October 2014.
  10. Statistics / Statsguru / Test matches / Bowling records – ESPNcricinfo. Retrieved 27 October 2014.
  11. Zimbabwe tour of Bangladesh, 1st Test: Bangladesh v Zimbabwe at Dhaka, Oct 25-27, 2014 – ESPNcricinfo. Retrieved 27 October 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தைஜுல்_இஸ்லாம்&oldid=3719197" இலிருந்து மீள்விக்கப்பட்டது