தைவான் தமிழ்ச் சங்கம்

தைவான் தமிழ்ச் சங்கம் தமிழ் ஆர்வலர்களால் தைவானில் 2013-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவைக் கொண்டாடுகின்றனர். தமிழர்களின் பொங்கல் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் சித்திரங்கள் வரைந்துப் பார்வைக்கு வைக்கப்பட்டன. மேலும் கவிதை எழுதுதல், வாசித்தல், சீன மொழியில் திருக்குறள் ஒப்புவித்தல் போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டன. பறையாட்டம், பரதநாட்டியம், மழலைத் தமிழ்ப் பேச்சு, பலகுரல் நிகழ்ச்சி, திரையிசைப்பாடல்கள் பாடுவது, குழு நடனங்கள் போன்ற கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

திருக்குறள் மொழிபெயர்ப்பு

தொகு

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாமின் வேண்டுகோளுக்கிணங்கி, சீனக் கவிஞர் முனைவர். யூசி திருக்குறளை சீன மொழியில் மொழிபெயர்த்தார். தமிழ் வளர்ச்சி அறநிலையங்கள், செய்தித்துறையின் செயலாளர் முனைவர் ம. இராஜாராம் இ. ஆ. ப., மொழிபெயர்ப்பு இயக்குநர் முனைவர் ந. அருள், தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ம. திருமலை ஆகியவர்களின் முயற்சியினால் பாரதியார் மற்றும் பாரதிதாசனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளை முனைவர். யூசி சீன மொழியில் மொழிபெயர்த்துள்ளார். முனைவர். யூசியின் சீனக்கவிதைகள் சில தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. திருக்குறளை சீன மொழியில் மொழிபெயர்த்ததால் கவிஞர் யூசிக்கு, இந்த ஆண்டுக்கான (2014) திருவள்ளுர்வர் விருதினை தமிழக முதல்வர் ஜெயலலிதா அளித்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தைவான்_தமிழ்ச்_சங்கம்&oldid=4161306" இலிருந்து மீள்விக்கப்பட்டது