தைவான் தொலைக்காட்சி நாடகம்
தைவான் தொலைக்காட்சி நாடகம் அல்லது தாய்வான் நாடகம் என்பது தைவான் நாட்டில் மாண்டரின் மொழியில் தயாரிக்கப்படும் ஒரு தொலைக்காட்சி பொழுதுபோக்கு அம்சம் ஆகும். இங்கு தயாரிக்கப்படும் தொடர்கள் இளைஞர்களைக் கவரும் விதமாக காதல், விளையாட்டு, இளமை பருவம் போன்ற வகையான தொடர்களை 10 முதல் 14 வரையான அத்தியாயங்களுடன் 1 மணி நேர அளவில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது. "தைவானிய நாடகம்" என்ற சொல் பொதுவாக தைவானின் குறுந்தொடர்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.[1]
தைவானிய நாடகங்கள் பொதுவாக மற்ற தொலைக்காட்சி நாடகங்களை விட காதல் மீது அதிக கவனம் செலுத்துகின்றன. அதோடு குற்ற நாடகம், காவல் நாடகம், வழக்கறிஞர் நாடகம் மற்றும் மருத்துவர் நாடகம் போன்ற வகை நாடகங்களும் எடுக்கப்படுகின்றது. தைவானிய நாடகங்கள் பல நெடுந்தொடர்கள் மற்றும் பிரைம் டைம் நாடகங்களைக் காட்டிலும் குறைவான வன்முறை மற்றும் பாலியல் உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கின்றன. பல பிரபலமான தைவானிய நாடகங்கள் ஜப்பானிய மங்காவை அடிப்படையாகக் கொண்டவை, குறிப்பாக ஷாஜோ மங்காவைப் பயன்படுத்துகின்றன, இருப்பினும் சில சீனென் மங்காக்கள் நாடகங்களாகவும் எடுக்கப்படுகின்றது.தைவானிய நாடகங்களில் உள்ள நடிகர்கள் மற்றும் நடிகைகள் - குறிப்பாக "idol நாடகங்கள்" - பாப் பாடகர்கள் மற்றும் ராக் இசைக்கலைஞர்களாக இருப்பது பொதுவானது.
தைவானிய நாடகங்கள் பல கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பிரபலமானது. சீனா, வியட்நாம், ஹாங்காங் மற்றும் மக்காவ், ஜப்பான், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் மிகவும் பிரபலமாக உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Best Taiwanese Drama Series of All Times" (in en). filmdaily.co/news இம் மூலத்தில் இருந்து 2021-01-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210119124443/https://filmdaily.co/news/best-taiwanese-drama-series/.