தொகரப்பள்ளி
தொகரப்பள்ளி (Thogarapalli) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம், பருகூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.
தொகரப்பள்ளி
துவறபள்ளி | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருட்டிணகிரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635 203 |
வரலாறு
தொகுதொகரப்பள்ளியில் இருந்து எட்டுக் கல் தொலைவில் தட்டக்கல் கிராமம் உள்ளது. இந்த ஊரில் கண்டெடுக்கப்பட்ட போசள மன்னர் வீர இராமநாதனின் 37வது ஆட்சி ஆண்டு காலத்தைச் சேர்ந்த கல்வெட்டில் துவறபள்ளி என்ற ஊர்ப்பெயர் குறிக்கபட்டுள்ளது. இதில் துவறபள்ளி என்பதில் 'துவற' என்னும் சிறப்புக் கூறில் உள்ள உகரம் ஒகரமாக திரிந்து, வகரம் ககரமாகவும், வல்லின றகரம் இடையின ரகரமாகவும் திரிபு அடைந்து தொகரப்பள்ளி என்று தற்போது மாறியுள்ளது.[1]
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும், வட்டத் தலைநகரான பர்கூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 253 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். p. 115.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ "Thogarapalli Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-16.