தொம்மலூரு சொக்கநாதசுவாமி கோயில்

பெங்களூரில் உள்ள இந்து கோயில்

தொம்மலூர் சொக்கநாதசுவாமி கோயில் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் உள்ள தொம்லூரில் உள்ள கோயிலாகும். சொக்கநாதசுவாமி அல்லது சொக்க பெருமாள் (இந்து கடவுள் விஷ்ணு ) என்று அழைக்கப்படும் தெய்வத்திற்கு இக்கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்நகரிலுள்ள, கி.பி. 10 ஆம் நூற்றாண்டின் சோழர் காலத்தைச் சேர்ந்த பழமையான கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.[1]

வரலாறு

தொகு

சொக்கநாதசுவாமி கோயில் பெங்களூரில் உள்ள பழமையான கோயிலாக கருதப்படுகிறது. இக்கோயிலின் வளாகத்தில் பல குறிப்பிடத்தக்க சிற்பங்கள் மற்றும் அலங்கார அம்சங்கள் உள்ளன. இக்கோயிலானது கிழக்கு நோக்கி உள்ளது.[2] ஒரு கதவின் சட்டத்தில் உள்ள கி.பி.1270 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு தமிழ் கல்வெட்டு அழகியர் என்பவர் அக்கதவின் சட்டங்களை நன்கொடையாக அளித்ததாகத் தெரிவிக்கிறது. அங்குள்ள[2] மற்றொரு கல்வெட்டின் மூலமாக ஒரு தலைக்கட்டு அளித்த நன்கொடையைப் பற்றி அறிய முடிகிறது. கி.பி.1270ஆம் நாளைச் சேர்ந்த மற்றொரு கல்வெட்டு போய்சள வீர ராமநாதர் அக்கோயிலுக்கு அளித்த நன்கொடையைப் பற்றிக் கூறுகிறது. விஜயநகர பாணியில் அமைந்த நவரங்கங்கள் அக்கோயிலில் காணப்படுகின்றன.

தமிழ் கல்வெட்டுகள்

தொகு

சொக்கநாதசுவாமி கோயிலில் ஏராளமான தமிழ் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டுகளில் டோம்லூர் என்பதானது டோம்பலூர் அல்லது தேசிமாணிக்கப்பட்டணம் என்று குறிக்கப்பட்டுள்ளது. சக்ரவர்த்தி பொசலவீரரமநாத தேவர் கல்வெட்டுகள் அங்கு காணப்படுகின்றன. அவர் கோயில் நிர்வாகத்திற்கு கூறிய செய்திகள் அவற்றில் காணப்படுகின்றன. மேலும் சில கல்வெட்டுகள் விஜயநகர பேரரசின் இரண்டாம் தேவராயர் கோயிலுக்குச் செலுத்திய செய்த வரி மற்றும் சுங்கச்சாவடிகளைப் பற்றிய பதிவுகளைக் கொண்டுள்ளன. இதில் டோம்பலூரைச் சுற்றியுள்ள வீடுகள், கிணறுகள், நிலங்கள் சொக்கப்பெருமாளுக்கு கொடையாக வழங்கப்பட்டுள்ள செய்தி காணப்படுகிறது. கி.பி.1270ஆம் ஆண்டைச் சார்ந்த மற்றொரு தமிழ் கல்வெட்டு அழகியார் என்பவரால் இரு கதவுகள் நன்கொடையாக அளிக்கப்பட்டப் பற்றி எடுத்துரைக்கிறது. தமிழில் உள்ள மற்றொரு கல்வெட்டு தலைகட்டு மற்றும் அவரது மனைவி இருவரும் ஜலப்பள்ளி கிராமத்திலிருந்து நிலத்தையும், விண்ணமங்கலம் குளத்தையும் கொடையாக அக்கோயில் தெய்வத்திற்கு வழங்கியதைக் குறிப்பிடுகிறது.

கி.பி 1290 ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்று டொமலூரின் வருவாயிலிருந்து போய்சள வீரராமனந்தா அளித்த நன்கொடையைப் பற்றிக் குறிப்பிடுகிறது.[3][4][5][6][7][8]

தற்போதைய நிலை

தொகு

இந்த கோயில் பல முறை விரிவாக புதுப்பிக்கப்பட்டுள்ளது, கருவறை மற்றும் இரண்டு அர்த்தமண்டபங்கள் மட்டுமே பழங்காலக் கட்டுமானத்தைக் கொண்டு அமைந்துள்ளன.[9] நேபாளத்தில் உள்ள கந்தகி ஆற்றிலிருந்து கொண்டுவரப்பட்ட சாலிக்கிராமக் கற்களைக் கொண்டு கோயிலின் கருவறையில் விஷ்ணு, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்கோயிலைப் பற்றி பலரும் அறிந்திருக்கவில்லை. டோம்லூர் நகரிலிருந்து பிரதான சாலையைவிட்டுத் தள்ளி சிறிய தெருவில் அமைந்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயில் புதுப்பிக்கப்பட்டது. கருவறையும் இரு அர்த்தமண்டபங்களும், தென் கர்நாடகப்பகுதியை உள்ளிட்ட பகுதிகளை அரசாண்ட சோழர் காலத்தைச் சேர்ந்தது என்ற பழம்பெருமையுடன் உள்ளன.[10]

கோயில் நேரம்

தொகு

தினசரி: காலை 6:00 - 11:00, மாலை: 5:45 - இரவு 8:30 மணி

புதன் கிழமை: காலை 6:00 - 11:30, மாலை: 5:45 - இரவு 8:30 மணி

சனிக்கிழமை: காலை 6:00 - மதியம் 12:30, மாலை: 5:45 - இரவு 9:00 மணி

குறிப்புகள்

தொகு
  1. "whatisindia".
  2. 2.0 2.1 "India9".
  3. Githa, U B (19 April 2004). "A Chola temple in Domlur!". Deccan Herald இம் மூலத்தில் இருந்து 4 ஜனவரி 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150104114438/http://archive.deccanherald.com/Deccanherald/apr192004/metro9.asp. பார்த்த நாள்: 4 January 2015. 
  4. Githa, U B. "Chokkanathaswamy Temple, a fine example of Chola architecture". Chitralakshana: All about Indian Art. Archived from the original on 23 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 17 January 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Sridhar, Lakshminarasimhan; Sridhar, Geetha. "Chokkanarayan Swamy Temple Domlur". Vishnu Temples of Karnataka. Archived from the original on 18 January 2015. பார்க்கப்பட்ட நாள் 16 January 2015.
  6. Rao, Priyanka S (19 May 2012). "Chokkanatha: The city’s oldest temple". The New Indian Express. http://www.newindianexpress.com/cities/bengaluru/article524984.ece. பார்த்த நாள்: 18 January 2015. 
  7. Harshitha, Samyuktha (10 December 2012). "The temple of the Cholas". Suttha Muttha. பார்க்கப்பட்ட நாள் 25 January 2015.
  8. Rizvi, Aliyeh (20 October 2014). "Good vibrations". Bangalore Mirror. http://www.bangaloremirror.com/columns/others/Good-vibrations/articleshow/44881818.cms. பார்த்த நாள்: 6 February 2015. 
  9. "History Of the Temple" இம் மூலத்தில் இருந்து 4 ஜனவரி 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150104114438/http://archive.deccanherald.com/Deccanherald/apr192004/metro9.asp. 
  10. Date with history: A visit to the 10th century Vishnu temple in Bengaluru, The Economic Times, 19 January2017