தொம்மலூரு

பெங்களூரில் ஒரு பகுதி

தொம்மலூரு கிழக்கு பெங்களூரில் உள்ள பகுதி.

தொம்மலூரு
—  "தோம்பலூர்"  —
தொம்மலூரு
அமைவிடம்: தொம்மலூரு, பெங்களூர்
ஆள்கூறு 24°33′N 89°27′E / 24.55°N 89.45°E / 24.55; 89.45
நாடு  இந்தியா
மாநிலம் கருநாடகம்
மாவட்டம் பெங்களூர் நகர்ப்புறம்
ஆளுநர் தவார் சந்த் கெலாட்
முதலமைச்சர் கே. சித்தராமையா
மக்களவைத் தொகுதி தொம்மலூரு
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

பெயர்காரணம்

தொகு

அங்குள்ள சொக்கநாத சுவாமி கோயில் கல்வெட்டில் தமிழில் தோம்பலூர் என்று எழுதப்பட்டுள்ளது, அது சோழர்களால் கட்டப்பட்ட கோயில் ஆகும். தோம்பல் எனும் மலரை வைத்து இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம்.[1] கொசுவைக் குறிக்கும் தெலுகு மொழிச்சொல்லான தோமலு என்பதில் இருந்து வந்த பெயர் தொம்மலூர் எனச்சிலர் கூறி வருகிறார்கள்.

அமைவிடம்

தொகு

இது பெங்களூர் பழைய விமான நிலைய சாலையில், பழைய விமான நிலையத்திற்கு மிக அருகில் உள்ளது. இந்த பகுதியில் பல தகவல் தொழினுட்ப நிறுவனங்கள் நிறைந்துள்ளன.

நிர்வாகம்

தொகு

இதுவும் "நம்ம பெங்களூர் மாநகர பேரவை"யினால் ஆளப்படுகிறது. மேலும் "சாந்தி நகர்" சட்டசபை தொகுதியில் உள்ளது.

மக்கள்

தொகு

இங்கு பல்வேறு இன மக்கள் வாழ்கின்றனர். கணிசமான அளவில் வாழும் தமிழர்களின் சதவீதம் 36% ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Vedalaveni, Prakash (2012-09-12). "Ancient temple or mosquitoes". The Times of India (பெங்களூர்). http://mobilepaper.timesofindia.com/mobile.aspx?article=yes&pageid=10&sectid=edid=&edlabel=BGMIR&mydateHid=12-09-2012&pubname=Mirror+-+Bangalore&edname=&articleid=Ar01001&publabel=MM. பார்த்த நாள்: சூலை 08, 2013. [தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொம்மலூரு&oldid=3217578" இலிருந்து மீள்விக்கப்பட்டது