தொல்காப்பியம் எச்சவியல் செய்திகள்
தமிழின் இலக்கணம் கூறும் தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்று பகுப்பாக உள்ளது. ஒவ்வொரு பகுப்பிலும் 9 உட்பிரிவுகள் உள்ளன. எச்சவியல் சொல்லதிகாரத்தில் ஒன்பதாவது உட்பிரிவு.
முதலாவது கிளவியாக்கம் என்னும் இயல் வாக்கிய அமைப்பை விளக்குகிறது. அடுத்து வரும் வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு ஆகிய மூன்றும் பெயர் எழுவாயாக நின்று பயனிலை கொள்ளும்போது வேறுபடும் வேற்றுமைப் பாங்கினை உணர்த்துகின்றன. அடுத்து சொல் நான்காக வகைப்படுத்தப்பட்டு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல் பகுப்புகளில் விளக்கப்படுகின்றன.
ஒன்பதாவதாக உள்ள இந்த இயலில் மொழியானது செய்யுள், வழக்கு என்று பாகுபடுத்தப்பட்டு விளக்கப்படுகிறது. மேலும் முந்தைய 8 இயல்களில் அடங்கி வராத செய்திகளும் கூறப்படுகின்றன.
விளக்கங்கள் இவ்வியலின் நூற்பா வரிசையெண்ணுடன் அமைக்கப்பட்டுள்ளன.
மேற்கோள்கள் பெரும்பான்மை தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணரைத் தழுவித் தரப்பட்டுள்ளன. சேனாவரையர் காட்டும் இடம்பெற்றுள்ளது.
குறிப்பு
- தொல்காப்பியரே எண்ணிட்டுப் பகுத்துக் காட்டியனவற்றிற்கு வரிசை எண்ணிட்டும், ஏனைய விரிவுகளுக்கு உடுக்குறி இட்டும் விளக்கப்பட்டுள்ளன.
செய்யுள் ஈட்டச்சொல்
தொகுஆகியவற்றைச் செய்யுள் ஈட்டிக்கொள்ளும்
1) இயற்சொல் என்பது செந்தமிழ் நிலத்து வழக்கினை ஒட்டிப் பொருள் பொருள் பயக்கும்
2) திரிசொல் என்பது 2 வகை
- ஒருபொருள் குறித்த வேறுசொல்
- வேறுபொருள் குறித்த ஒருசொல்
3) திசைச்சொல் செந்தமிழ் சேர்ந்த 12 நிலத்தினும் பொருள்குறிப்பினை உடையவை
4) வடசொல் என்பது வட-எழுத்தை நீக்கித் தமிழில் எழுதப்படுவது
5) வடசொல் சிதைந்தும் வரும்
6) வலித்தல், மெலித்தல், விரித்தல், தொகுத்தல், நீட்டல், குறுக்கல் – ஆகியவை நான்குவகைச் சொல்லிலும் செய்யுளில் நாட்டப்படும்
செய்யுளில் தொடர் அமைதி
தொகு7) மொழிபுணர் இயல்பு 4 வகை.
- நிரல்நிறை, சுண்ணம், அடிமறி, மொழிமாற்று என்பன அவை
8) பெயரிலும், வினையிலும் சொற்களைத் தனித்தனியை நிறுத்திப் பொருள்கொள்ள வைப்பது நிரல்நிறை
9) ஈரடி எட்டுச் சீர்களில் சொற்களைத் துணித்து வேண்டிய இடத்தில் ஒட்டிக்கொள்ளுமாறு செய்யுள் இயற்றுதல்
10) சீர்நிலை திரியாமல் அடிகள் இடம்-மாறும்படி அமைத்தல் அடிமறி
11) அடிமறியில் ஈற்றடியை எங்கு நிறுத்தினும் பொருள் மாறுபடாது
12) சொற்களை இடம் மாற்றி இணைத்துப் பொருள் கொள்வது மொழிமாற்று
சொல், இலக்கணப் பார்வை
தொகுபிரிக்கப்படக் கூடாத பெயர்கள் -14-
- தமன், தமள், தமர்
- நமன், நமள், நமர்
- நுமன், நுமள், துமர்
- எமன், எமள், எமர்
ஒருசொல் அடுக்கு (அடுக்குத்தொடர்) 3 வகை -15-
- ஏஎஎஎ வம்பன் மொழிந்தனன் – இசைநிறை (செய்யுளில் மட்டும் வரும்)
- ஒக்கும் ஒக்கும், மற்றோ மற்றோ, - அசைநிலை
- பாம்பு பாம்பு, தீத்தீ – பொருளொடு புணர்தல்
தொகைச்சொல்
தொகுதொகைமொழி 6 வகை -16-
- வேற்றுமைத்தொகை
- உவமைத்தொகை
- வினைத்தொகை
- பண்புத்தொகை
- உம்மைத்தொகை
- அன்மொழித்தொகை
வேற்றுமைத்தொகை -17-
- நிலம் கடந்தான் (நிலத்தைக் கடந்தான்)
- தாய் மூவர் (தாயுடன் மூவர்)
- கருப்புவேலி (கரும்புக்கு வேலி)
- வரைவீழ் அருவி (வரையிலிருந்து வீழ் அருவி)
- யானைக்கோடு (யானையது கோடு)
- குன்றக் கூகை (குன்றின்கண் கூகை)
வினைத்தொகை -18-
- புலிப் பாய்த்துள் (புலி போலப் பாய்தல்) – வினை-உவமை
- மழை வண்கை (மழை போல வண்கை) – பயன்-உவமை
- துடி நடு (துடி போல இடுப்பு) – மெய்-உவமை (வடிவ-உவமை)
- முத்த முறுவல் (முத்துப் போன்ற சிரிப்பு) – உருவு-உவமை (நிறம்)
வினைத்தொகை -19-
- கொல்யானை
பண்புத்தொகை -20-
- கருங்குதிரை - வண்ணம்
- வட்டப்பலகை – வடிவம்
- குறுங்கோலு – அளவு
- தீங்கரும்பு – சுவை
- தண்ணீர் – அன்ன பிற (குணம்)
- வேழக்கரும்பு – என்ன கிளவியும் (வேழமாகிய கரும்பு) (ஒரு பொருளைக் குறிக்கும் இருசொல்)
உம்மைத்தொகை -21-
- உவாப் பதினான்கு – இரு பெயர்க்கண் தொக்கது (உவாவும் பதினான்கும்)
- புலி வில் கெண்டை – பலபெயர்க்கண் தொக்கது (புலியும் வில்லும் கெண்டையும்)
- தூணிப்பதக்கு – அளவு பற்றித் தொக்கது (தூணியும் பதக்கும்)
- பதினைந்து - எண்ணியல் பற்றித் தொக்கது (பத்தும் ஐந்தும்)
- தொடியரை – நிறைப்பெயர்ப் பற்றித் தொக்கது (தொடியும் அரையும்)
- பன்னிருவர் – எண்ணியற்பெயர் பற்றித் தொக்கது (பதின்மரும் இருவரும்)
அன்மொழித்தொகை -22-
- வெள்ளாடை வந்தான் – பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை (வெள்ளை ஆடை உடுத்தவன்)
- தகரஞாழல் வந்தாள் – உம்மைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை (தகரமும் ஞாழலும் கூந்தலில் பூசிய பெண்)
- பொற்றாலி வந்தாள் – வேற்றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை) (பொன்னாலான தாலி அணிந்தவள்)
- அறற்கூந்தல் வந்தாள் – உவமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழிதொகை (ஆற்று அறல் போன்ற கூந்தலை உடையவள்)
- திரிதாடி வந்தான் – வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை (திரிந்த, திரியும் தாடி உடையவன்)
தொகைச்சொல்லில் பொருள் நிற்குமிடம் -23-
- வேங்கைப் பூ என்னும்போது இந்தப் பூ வேங்கை என முன்மொழிமேல் பொருள் நின்றது
- அடைகடல் என்னும்போது பின்மொழிமேல் பொருள் நின்றது (கடல் அடைந்த நிலம்)
- குரைகடல் என்னும்போது குரைத்தல் மேலும், கடல் மேலும் பொருள் நிற்றலால் இத்தொடரில் ஒருமொழிலும் பொருள் நின்றது.
- அன்மொழித்தொகையில் இருசொல்மீதும் பொருள் நிற்பதில்லை.
தொகைச்சொல் ஒருசொல் நடை கொள்ளும் -24-
உயர்திணையில் வரும் உம்மைத்தொகை பலசொல் நடைத்து. -25-
- கபில பரணர் (கபிலரும் பரணரும்)
சொல் வேறு, குறிப்பு வேறு
தொகுகுறிப்புரை -26-
- நான் செல்லும்பொது மலை வந்தது – முள் குத்திற்று – இவை வாரா மரபினை வந்ததாகக் கூறல்.
- நிலம் வல்லென்றது – நிலத்தின் இயல்பு கெட்டியாதல். இதனை அது செய்த்தாகக் கூறல் ‘என்னா மரபின எனக் கூறுதல்’
அடுக்குத்தொடர்
தொகுஇசைப்பொருளை நான்குமுறை அடுக்கலாம் -27-
- பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ
விரைசொல்லை மூன்றுமுறை அடுக்கலாம் -28-
- தீத் தீத் தீ
இரண்டுமுறை அடுக்குவன -29, 30-
- கண்டீரோ கண்டீரோ
- கொண்டீரோ கொண்டீரோ
- சென்றதே சென்றதே
- போயிற்றே போயிற்றே – தொடக்கத்தன.
- கேட்டை கேட்டை
- நின்றை நின்றை
- காத்தை காத்தை
- கண்டை கண்டை
இறப்பு, நிகழ்வு, எதிர்வு எனக் காலம் மூன்று
தன்மை முன்னிலை படர்க்கை என இடம் மூன்று
வினைமுற்று, வினைக்குறிப்பு என முற்று இரண்டு -31-
வினைமுற்று இந்த இரண்டு வகையில் அமையும் -32-
அடுக்கும் இந்த இருவகையில் அமையும் -33-
- உண்டான் தின்றான் ஓடினான் பாடினான் வந்தான்.
- சொல்வலன் சோர்விலன் அஞ்சான்
எச்சம்
தொகுஎச்சம் 10 வகை -34-
- பிரிநிலை எச்சம்
- வினையெச்சம்
- பெயரெச்சம்
- ஒழியிசை எச்சம்
- எதிர்மறை எச்சம்
- உம்-எச்சம்
- என-எச்சம்
- சொல்லெச்சம்
- குறிப்பெச்சம்
- இசையெச்சம்
பிரிநிலை எச்சம் 2 வகை -35-
- அவனே வந்தான் – பிரிநிலை எகாரம்
- அவனோ வந்தான் – பிரிநிலை ஓகாரம்
வினையெச்சம் 2 வகை -36-
- உழுது வந்தான் – தெரிநிலை வினைமுற்று கொண்டு முடிந்தது
- உழுது வருதல், உழுது வந்தவன் – குறிப்பு வினைமுற்று கொண்டு முடிந்தது
பெயரெச்சம் பெயர் கொண்டு முடியும் -37-
- உண்ணும் சாத்தன், உழுத எருது
ஒழியிசை எச்சம் -38-
- கூரியதோர் வாள்மன் – வாள் ஒழிக்கும் என்னும் இசைப்பு எஞ்சி நின்றது
- வருகதில் கொண்கன் – வரட்டும் பார்த்துக்கொள்கிறேன்
- கொளலோ கொண்டான் – வாங்கியது மட்டுமா செய்தான்
எதிர்மறை எச்சம் -39-
- யானோ கொண்டேன் – நான் கொள்ளவில்லை என்பது பொருள்.
உம்மை எச்சம் -40-
- சாத்தனும் வந்தான் என்றால் கொற்றன் முனபே வந்தான் என்னும் பொருள் தொக்கி நின்றது.
செஞ்சொல் உம்மை எச்சம் -41-
- உழுது உண்பான் – உழுது சோறு உண்பான் (சோறு என்னும் செஞ்சொல் தொக்கு நின்றது
என என்னும் எச்சம் வினை கொண்டு முடியும் -42-
- கொள்ளெனக் கொண்டான்
ஏனைய எச்சங்களுக்கு முடிபு வரையறை இல்லை -43-
குறிப்பு எச்சம் -44-
- விண்ணென விசைத்தது வில் – ‘விண்’ என்பது குறிப்புச்சொல்
சொல்லெச்சம் -45-
- பசித்தேன் என்றவழி, பழஞ்சோறு தா என்பது சொல்லெச்சம்.
மறைக்கும் சொல்
தொகுஅவையல் கிளவி (பலர்முன் சொல்லக்கூடாத சொல்) -46-
- கால்மேல் நீர் பெய்தும் (= மலம் கழுவு)
மறைக்கும்போது மரூஉச்சொல்லைப் பயன்படுத்துக -47-
- ஆட்டுப் பிழுக்கை, ஆப்பீ – இவை மரூஉச்சொற்கள்
மூவிடச்சொல், வரையறை
தொகுஈ, தா, கொடு – இந்த மூன்னறு இரத்தலைக் குறிக்கும் சொற்கள் -48-
தாழ்ந்தவன் உயர்ந்தவனிடம் ‘ஈ’ என்பான் -49-
ஒத்தவனிடம் ‘தா’ என்பான் -50-
உயர்ந்தவன் நாழ்ந்தவனிடம் ‘கொடு’ என்பான் -51-
கொடு என்னும் சொல்லை அவனுக்குக் கொடு என்று படர்க்கைப் பொருளில்தான் பயன்படுத்த வேண்டும். என்றாலும் தனைப் பிறன் பொல் பாவித்துக் கூறும்போது எனக்குக் கொடு என்றும் வரும் -52-
இலக்கணத்தில் கட்டுப்படாத மொழி வரவு
தொகுஇலக்கணத்தில் கட்டுப்படாத வரவுகள் ஏற்கப்படும் -53-
- பெயர் சூட்டல் – ஓர் எருதை நம்பி என்றும், ஒரு கிளியை நங்கை என்றும் அழைத்தல்
- திசைச்சொல் – ஒருவனைப் புலியான் என்றும், பூசையான் என்னும் வழங்குதல்
- தொன்னெறியான் வரும் பழமொழி – யாற்றுள் செத்த எருமை ஈர்த்தல் ஊர்க் குயவர்க்குக் கடன்
- மெய்ந்நெறி மயக்கம் – சுடுகாட்டை நன்காடு எனல், செத்தாரைத் துஞ்சினார் எனல்
- மந்திரம் – திரிதிரி சவாகா, கன்று கொண்டு கறவையும் வந்திக்க சுவாகா (இளம்பூரணர் காட்டு)
செய்யாய் என்னும் முன்னிலைக் கிளவி ஏவலாகவும் வரும் -54-
- உண்ணாய்
முன்னிலை ஈறு -55-
- ஈ ஈறு – புக்கீ, உண்டீ, உரைத்தீ, சென்றீ
2. மே ஈறு – அட்டிலோளைத் தொட்டனை நின்மே கடிசொல் இல்லை காலத்துப் படினே -56-
- சம்பு, சட்டி போன்ற ச-முன்மொழி வரவு
குறைசொற்களை அறிந்து நிறைசொற்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும் -57-
- மரை இதழ் புரையும் அஞ் செஞ் சீறடி – தாமரை என்பது மரை என நின்றது – தலைக்குறை
- வெரிநின் ஓதி வெருக் கண்டன்ன – ஓந்தி என்பது ஓதி என நின்றது – இடைக்குறை
- நீல் உண் துகிலிகை கடுப்ப – நீலம் என்பது நீல் என நின்றது – கடைக்குறை
வேற்றுமை உருபு அல்லாத இடைச்செற்களைப் பெயரை வேறுபடுத்தும் வேற்றுமைச்சொல் என்றே கொள்ளுதல் வேண்டும் -58-
உரிச்சொற்களிலும் பொருளை வேறுபடுத்தும் வேற்றுமைச்சொல் உண்டு -59-
வினையெச்சத்தில் திரிபு நிகழும் -60-
- ஞாயிறு பட்டு வந்தான் – ஞாயிறு பட(மறைய) வந்தான் என்பது ‘பட’ என்னும் ‘செய்து’ என்னும் எச்சம்
- ‘ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால்’ என்னும் திருக்குறளில் குன்றியக்கால் என்பது குன்றிக்கால் என வந்தது
- கோழி கூவப் பொழுது விடிந்தது – இதில் கூவி என வரவேண்டிய செய்து என்னும் எச்சம் கூவ என, செய என்னும் எச்சமாக வந்தது.
- மோயினள் உயிர்த்தகாலை – இதில் மோயினள் என்பது முற்றெச்சம்
உரையிடத்து உடனிலைப் பொருளை உணர்ந்துகொள்ள வேண்டும் -61-
- இந்த நாழிக்கு இந்த நாழி பெரிது
சில சொற்களை முன்னத்தால் உணர்ந்தகொள்ள வேண்டும் (முன்னம் = உய்த்துணர்வு) -62-
- குழை கொண்டு கோழி எறியும் வாழ்க்கையர் – என்னும்போது செல்வ வளம் மிக்கவர் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
ஒரு பொருள்மேல் இரண்டு தொடர் வந்தால் வெவ்வேறாகப் பிரித்துப் பார்க்கக் கூடாது -63-
- வையைக்கு இறைவன், கூடலர் கோ வந்தான்.
ஒருமை சுட்டிய பெயர் பன்மையை உணர்த்தும் -64-
- ஏவல் இளையர் தாய் வயிறு கரிப்ப – இதில் இளையர் என்னும் பன்மை தாய் என்னும் ஒருமையைப் பன்மையாக்கிக் காட்டிற்று.
ஆற்றுப்படை நூலில் ஒருமை பன்மை மயக்கம் நிகழ்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும் -65-
சொற்களைச் செய்யுளில் வருபவை என்றும், வழக்கில் வருபவை என்றும் பாகுபடுத்தி பிழையின்றி உணர்ந்துகொள்ள வேண்டும் -66-
கருவிநூல்
தொகு- தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1963
- தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை, ஆறுமுகநாவலர் பதிப்பு, 1934
- தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு, டாக்டர் P.S. சுப்பிரமணிய சாஸ்திரி எழுதியது, பிரமோத ஆண்டு, 1932
- தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1962
- தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடனார் விருத்தி உரையும் பழைய உரையும், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1964
- தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1963
- தொல்காப்பியம் மூலம்
- தொல்காப்பியம் மூலம் பரணிடப்பட்டது 2011-07-24 at the வந்தவழி இயந்திரம்