தொல்லியல் அருங்காட்சியகம், கலிபாங்கன்

தொல்லியல் அருங்காட்சியகம், கலிபாங்கன் இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் அனுமன்கர் மாவட்டத்தில் உள்ளது. 1961-69 காலப்பகுதியில் அரப்பா நாகரிகக் களமான கலிபாங்கனில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் மூலம் பெறப்பட்ட தொல்பொருட்களைக் காட்சிக்கு வைப்பதற்காக இந்த அருங்காட்சியகம் 1983 இல் அமைக்கப்பட்டது.

மட்பாண்டங்களும் பிற அரும்பொருட்களும் மூன்று காட்சிக் கூடங்களில் வைக்கப்பட்டுள்ளன. முதல் காட்சிக்கூடத்தில் அரப்பாவுக்கு முந்தியகாலப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. ஏனைய இரண்டும் அரப்பன் காலத்துப் பொருட்களைக் கொண்டுள்ளன. இங்குள்ள காட்சிப் பொருட்களில், அரப்பாக்கால முத்திரைகள், வளையல்கள், களிமண் பொருட்கள், களிமண் உருவங்கள், செங்கற்கள், அரைக்கும் கற்கள், கற்பந்துகள் என்பன அடங்குகின்றன. இவற்றுடன் அகழ்வுகள் மூலம் வெளிக்கொண்டுவரப்பட்ட அமைப்புக்களின் படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இவற்றையும் பார்க்கவும் தொகு

வெளியிணைப்புக்கள் தொகு