அனுமான்காட் மாவட்டம்

இராசத்தானில் உள்ள மாவட்டம்

அனுமான்காட் மாவட்டம் (Hanumangarh District - (இந்தி: हनुमानगढ़ ज़िला), மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள இராஜஸ்தான் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் அனுமான்காட் ஆகும். இம்மாவட்டத்தில் சிந்துவெளி நாகரிக காலத்திய காளிபங்கான் தொல்லியல் களம் உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் பஞ்சாப் மற்றும் அரியானா மாநில எல்லைப்புறத்தில் அமைந்த இம்மாவட்டம் பிகானேர் கோட்டத்தில் உள்ளது.

மாவட்ட அமைவிடம்

தொகு

12,645 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அனுமான்காட் மாவட்டத்தின் வடக்கில் பஞ்சாப் மாநிலம், கிழக்கில் அரியானா மாநிலம், தெற்கில் சூரூ மாவட்டம், மேற்கில் ஸ்ரீ கங்காநகர் மாவட்டம் எல்லைகளாகக் கொண்டது. பருத்தி, வரகு, சோளம் முக்கிய விளைபொருட்களாகும்.

மாவட்ட நிர்வாகம்

தொகு

அனுமான்காட் அனுமான் கோலேன் காட், சங்காரியா, ரவத்சர், நோகர் பத்ரா, திப்பி மற்றும் பிலிபங்கா என ஏழு வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.

மக்கள் தொகையியல்

தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,774,692 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 80.25% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 19.75% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி 16.91% விகிதம் ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 931,184 ஆண்களும்; 843,508 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 906 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 9,656 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 184 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 67.13 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 77.41 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 55.84 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 234,226 ஆக உள்ளது. [1]

சமயம்

தொகு

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,433,067 (80.75 %) ஆகவும்; சீக்கிய சமய மக்கள் தொகை 216,997 (12.23 %) ஆகவும்; இசுலாமிய சமய மக்கள் தொகை 118,673 (6.69 %) ஆகவும்; சீக்கிய சமய மக்கள் தொகை 216,997 (12.23 %) ஆகவும்; கிறித்தவ, சமண சமய, பௌத்த சமய மக்கள் தொகை மிகக் குறைவாகவும் உள்ளது.

மொழிகள்

தொகு

இராஜஸ்தான் மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், பஞ்சாபி, உருது மற்றும் இராச்சசுத்தானி, மார்வாரி போன்ற வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு



"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுமான்காட்_மாவட்டம்&oldid=3618373" இலிருந்து மீள்விக்கப்பட்டது