தொல்லியல் அருங்காட்சியகம், காசுராகோ

தொல்லியல் அருங்காட்சியகம், காசுராகோ, இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் சட்டர்ப்பூர் மாவட்டத்தில் உள்ளது. இது மகோபாவுக்கு வடக்கே 54 கிலோமீட்டர் தொலைவிலும், சட்டர்ப்பூருக்குக் கிழக்கே 45 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. இங்கே புகழ்பெற்ற மத்திய காலக் கோயில்கள் அமைந்துள்ளன.

1910 ஆம் ஆண்டில், அக் காலத்தில் பிரித்தானிய அரசின் உள்ளூர் அலுவலராக இருந்த டபிள்யூ. ஏ. சார்டைன் என்பவரின் முயற்சியால், அழிந்த நிலையில் இருந்த காசிராகோக் கோயில்களில் இருந்து எடுக்கப்பட்ட சிற்பங்கள், கட்டிடக் கூறுகள் என்பவை மாதங்கேசுவரர் கோயிலுக்குப் பக்கத்தில் சுற்றி வேலியிடப்பட்ட இடமொன்றினுள் வைத்துப் பாதுகாக்கப்பட்டன. 1952 ஆம் ஆண்டில் இந்திய தொல்லியக் ஆய்வகம் பொறுப்பேற்கும்வரை இந்தத் திறந்தவெளி அருங்காட்சியகம், சார்டைன் அருங்காட்சியகம் என்றே அழைக்கப்பட்டது. தற்போது இந்த அடைப்பு மேலதிக அரும்பொருட்களை வைப்பதற்குப் பயன்படுத்தப்படுவதுடன் பொதுமக்கள் இதற்குள் அனுமதிக்கப்படுவதில்லை.

திறந்தவெளி அருங்காட்சியகத்தில் இருந்து தெரிந்து எடுத்த அரும்பொருட்களைக் கொண்டு தற்போதுள்ள அருங்காட்சியகம் 1967 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்து, பௌத்த, சமண மதங்களைச் சேர்ந்த பல சிற்பங்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ள 5 காட்சிக்கூடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு