தொல்லியல் அருங்காட்சியகம், சண்டேரி

சண்டேரி தொல்லியல் அருங்காட்சியகம் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சண்டேரி என்னும் இடத்தில் உள்ளது. தில்லியையும் போபாலையும் இணைக்கும் தொடர்வண்டிப் பாதையில் லலித்பூரில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது. மிகவும் அறியப்பட்ட மத்திய கால நகரமான சண்டேரியின் சுற்றாடலில் பல பெரிய நினைவுச்சின்னங்களும், பாதுகாப்பு அரண்களும், பண்பாட்டு மரபுகளை விளக்கும் பல்வேறு பொருட்களும் காணப்படுகின்றன. இவ்விடம், மௌரியர், சுங்கர், நாகர், குப்தர், புசியபூதிகள், பிரதிகாரர் எனப் பல மரபினரால் ஆளப்பட்டதற்கான சான்றுகள் இங்கே மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளின் மூலம் கிடைத்துள்ளன.

இங்கே அமைந்துள்ள தொல்லியல் கள அருங்காட்சியகம் 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டது. இங்குள்ள பெரும்பாலான காட்சிப்பொருட்கள், இப்பகுதியில் அழிந்த நிலையில் உள்ள கோயில்களில் இருந்து கிடைத்த கட்டிடக் கூறுகள், சிற்பங்கள் போன்றவையாகும். இவை பெரும்பாலும் 10 ஆம் நூற்றாண்டுக்கும் 12 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை.

இவற்றையும் பார்க்க

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு