தொல்லியல் அருங்காட்சியகம், பழைய கோவா

தொல்லியல் அருங்காட்சியகம், பழைய கோவா இந்தியாவின் ஒன்றியப் பிரதேசமான கோவாவின், தென்கோவா மாவட்டத்தில் உள்ளது. 1964 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகம் 1981-82 காலப்பகுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அசிசியின் சாந்த பிரான்சிசு தேவாலயத்தின் பெண்துறவியர் மடப் பகுதியில் அமைந்துள்ள இது 8 காட்சிக்கூடங்களைக் கொண்டுள்ளது. இங்கே வரலாற்றுக்கு முந்திய காலத்துப் பொருட்கள் முதல், வரலாற்றுக்காலத் தொடக்கம், மத்தியகாலம் வரையிலான காலப்பகுதிகளைச் சேர்ந்த பொருட்கள் வரை உள்ளன. இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பு இங்குள்ள போத்துக்கீசர் காலத்து அரும்பொருட்கள் ஆகும். ஆளுனர்கள், வைஸ்ராய்கள் ஆகியோரின் உருவப்படங்கள், மரச் சிற்பங்கள், தூண்கள், போதிகைகள், தபால்தலைகள் என்பன இங்குள்ள போத்துக்கீசர் காலத்துப் பொருட்களுள் அடங்கும்.

இவற்றையும் காண்க

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு