தொல் ஏரி (Thol Lake) அல்லது தொல் பறவைகள் சரணாலயம் எனப்படும் இது,[1] இந்தியாவின், குசராத்து மாநிலத்தில் அமைந்துள்ள செயற்கை நன்னீர் ஏரியாகும். பாசனத்திற்காக 1912 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஏரி, 1988 ஆம் ஆண்டு தொல் பறவைகள் சரணாலயம் என அறிவிக்கப்பட்டது; சதுப்பு நிலங்களால் சூழப்பட்ட தொல் ஏரி, 60% நீர் பறவைகள் உட்பட சுமார் 150 வகையான பறவைகளின் வசிப்பிடமாக உள்ளது. மேலும், ஏரி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில், பூநாரைகள், சாரசு கொக்குகள் போன்ற இடம்பெயரும் பறவைகளின் இனப்பெருக்க கூடுகள் பெருமளவில் காணப்படுகிறது.[2]

தொல் ஏரி
Thol Lake
தொல் பறவைகள் சரணாலயம்
Thol Bird Sanctuary
தொல் ஏரியில் பூநாரைகள்
அமைவிடம்கலோல் அருகிலுள்ள, தொல் கிராமம் குசராத்து.
ஆள்கூறுகள்23°22.50′N 72°37.50′E / 23.37500°N 72.62500°E / 23.37500; 72.62500
ஏரி வகைஏரிச் சூழல்மண்டலம்
வடிநிலப் பரப்பு15,500 எக்டேர்கள் (38,000 ஏக்கர்கள்)
வடிநில நாடுகள் இந்தியா
மேற்பரப்பளவு699 எக்டேர்கள் (1,730 ஏக்கர்கள்)
நீர்க் கனவளவு84 மில்லியன் கன சதுர மீட்டர்கள் (3.0×10^9 cu ft)

அமைவிடம் தொகு

மேசனா மாவட்டம், தொல் நாட்டுப்புறப் பகுதியில் அமைந்துள்ள இந்த ஏரி, அகமதாபாத் நகரத்திலிருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில் உள்ளது. ஏரி மற்றும் அதை சுற்றியுள்ள 7 ச.கி.மீ பரப்பளவையும் 1988 ஆம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.[3]

புகலிடம் தொகு

தொல் ஏரிக்கு புகலிட பறவைகள் ஏராளமாக வருகை தருகின்ற, கொக்குகள், நாரைகள், நீர் வாத்துகள், கரண்டி வாயன், செந்நாரை, விசிலடிச்சான், பெருங்கொக்கு, வெண்கொக்கு போன்ற சுமார் 100 வகையான பறவையினங்கள் இங்கு காணப்படுகின்றன. மேலும், சிவப்பு கழுத்தும் நீண்ட கால்களையும் கொண்ட இந்திய சாரசு கொக்கு எனும் பறவையினம் இவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மழைக்காலம் முடிந்தபின்னர் நவம்பர், மற்றும் பிப்ரவரி வரையான காலம் இந்த சரணாலயத்திற்கு இடப்பெயர்வுக்கு ஏற்றக் காலமாகும்.[3]

சான்றாதாரங்கள் தொகு

  1. "Thol Sanctuary, Ahmedabad, Gujarat". Archived from the original on 2015-05-12. பார்க்கப்பட்ட நாள் 2016-10-20.
  2. "Official Website of Thol Lake". www.thollake.com (ஆங்கிலம்). © 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-10-20. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. 3.0 3.1 "Thol Lake Bird Sanctuary, Ahmedabad". www.nativeplanet.com (ஆங்கிலம்). © 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-10-22. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொல்_ஏரி&oldid=3616493" இலிருந்து மீள்விக்கப்பட்டது