தோசில் அசைடு
தோசில் அசைடு (Tosyl azide) என்பது C7H7N3O2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் வினையாக்கியாகும்.[1] பாரா-தொலுயீன் சல்போனைல் அசைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
4-மெத்தில்பென்சீன்-1-சல்போனைல் அசைடு | |
வேறு பெயர்கள்
பாரா-தொலுயீன்சல்போனைல் அசைடு; பாரா-தோசில் அசைடு; பாரா-தொலுயீன்சல்போனசைடு;
| |
இனங்காட்டிகள் | |
941-55-9 | |
ChemSpider | 13072 |
EC number | 213-381-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 13661 |
| |
UNII | 97F7BLE97S |
பண்புகள் | |
C7H7N3O2S | |
வாய்ப்பாட்டு எடை | 197.21 g·mol−1 |
தோற்றம் | எண்ணெய் தன்மை கொண்ட நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.286 கி/செ.மீ3 |
உருகுநிலை | 21 முதல் 22 °C (70 முதல் 72 °F; 294 முதல் 295 K) |
கொதிநிலை | 110 முதல் 115 °C (230 முதல் 239 °F; 383 முதல் 388 K) 0.001 மி.மீ. பாதரசத்தில் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பயன்கள்
தொகுஅசைடு மற்றும் ஈரசோ வேதி வினைக்குழுக்களை ஒரு சேர்மத்தில் அறிமுகப்படுத்த தோசில் அசைடு பயன்படுத்தப்படுகிறது.[1] நைட்ரீன் சேர்மத்திற்கு மூலமாகவும் [3+2] வளையக் கூட்டுவினைகளுக்கு அடி மூலக்கூறாகவும் பயன்படுத்தப்படுகிறது.[1]
தயாரிப்பு
தொகுதோசில் குளோரைடுடன் நீரிய அசிட்டோனில் கரைக்கப்பட்ட சோடியம் அசைடை வினைபுரியச் செய்து தோசில் அசைடை தயாரிக்கலாம்.[2]
பாதுகாப்பு
தொகுதோசில் அசைடு மிகவும் உறுதியான நிலைப்புத்தன்மை கொண்ட அசைடு சேர்மங்களில் ஒன்றாகும், ஆனால் இது இன்னும் ஒரு சாத்தியமான வெடிபொருளாக கருதப்படுகிறது. எனவே இதை கவனமாக சேமிக்க வேண்டும். 100 பாகை செல்சியசு அல்லது அதற்கு மேல் சூடாக்கப்படும் அனைத்து வினைகளுக்கும் மேலே குறிப்பிட்ட எச்சரிக்கை முக்கியமானது. வெடிப்புச் சிதைவின் ஆரம்ப வெப்பநிலை சுமார் 120 °செல்சியசு வெப்பநிலையாகும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "p -Toluenesulfonyl Azide". Encyclopedia of Reagents for Organic Synthesis. (2008). DOI:10.1002/047084289X.rt141.pub2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-93623-7.
- ↑ Curphey, T. J. (1981). "Preparation of p-Toluenesulfonyl Azide. A Cautionary Note". Organic Preparations and Procedures International 13 (2): 112–115. doi:10.1080/00304948109356105.