தோட்டக்காட்டு மாதவி அம்மா

இந்தியாவின் கேரள மாநில அரசியல்வாதி

தோட்டக்காட்டு மாதவி அம்மா (Thottakkattu Madhavi Amma) இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பிரித்தானிய இந்தியாவின் கொச்சியில் முதலாவது மன்னர் அரசின் சட்டமன்றத்தை உருவாக்கிய உறுப்பினர்களில் இவர் முக்கியமானவராவார். கொச்சின் திவான் பெசுகர் மற்றும் கவிஞர் தோட்டக்காட்டு இக்காவம்மா தம்பதியினருக்கு தோட்டக்காட்டு மாதவி அம்மா மகளாகப் பிறந்தார், [1] இந்தியாவில் சட்டமன்றத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் உறுப்பினர் தோட்டக்காட்டு மாதவி அம்மா என்ற சிறப்பு இவருக்கு உண்டு. [2] சமூக சீர்திருத்தவாதியான மன்னத்து பத்மநாபனை இவர் திருமணம் செய்து கொண்டார்.

குடும்பம்

தொகு

மாதவி அம்மாவுக்கு முதல் திருமணம் வல்லபனுன்னி எராடியுடன் நடந்தது. இந்த தம்பதியருக்கு நாராயண மேனன் மற்றும் வல்லபனுன்னி மேனன் என்ற இரண்டு மகன்கள் பிறந்தனர். திருமணத்திற்கு பின்னர் பத்து ஆண்டுகளுக்கு உட்பட்ட காலத்திலேயே எராடி காலமானார். பல ஆண்டுகள் தனியாக வாழ்ந்த மாதவி அம்மா, நாயர் சமூகசேவை சங்கத்தின் நிறுவனரும் சமூக சீர்திருத்தவாதியுமான மன்னத்து பத்மநாபனை சந்தித்து திருமணம் செய்துகொண்டார். மன்னத்து பத்மநாபனுக்கும் இது மறுமணமாகும். இதன் பொருட்டு மாதவி அம்மா கொச்சியிலிருந்து திருவாங்கூருக்கு இடம்பெயர வேண்டியிருந்தது. கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பெருன்னாவின் அருகில் அமைந்துள்ள சங்கனாச்சேரிக்கு மாதவி அம்மா குடியேறினார். மூத்த மகன் நாராயண மேனன் திருவிதாங்கூரில் ஆறுமன அம்மவீட்டைச் சேர்ந்த பவானி தங்கச்சியை மணந்து கொண்டார். வல்லபனுன்னி மேனனும் திருவிதாங்கூரிலேயே திருமணம் செய்து கொண்டு அலுவாவில் குடியேறினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Bharatha Kesari Mannath Padmanabhan". 2008-02-13. Archived from the original on 2008-02-13. பார்க்கப்பட்ட நாள் 2020-04-30.
  2. History of Kochi பரணிடப்பட்டது 3 மே 2006 at the வந்தவழி இயந்திரம்