தோட்டப்பாளையம் தாரகேஸ்வரர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

தோட்டப்பாளையம் தாரகேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம், தோட்டப்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு தாரகேஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:வேலூர்
அமைவிடம்:தாரகேஸ்வரர் கோவில் தெரு, வேலூர், தோட்டப்பாளையம், வேலூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:வேலூர்
மக்களவைத் தொகுதி:வேலூர்
கோயில் தகவல்
மூலவர்:தாரகேஸ்வரர் ,
தாயார்:அபயாம்பிகை
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் தாரகேஸ்வரர், அபயாம்பிகை சன்னதிகளும், விநாயகர், ஆறுமுகர், நால்வர், சுப்பரமணியர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் தேர் உள்ளது. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் மூன்று கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)