தோட்டப் பறவை
தோட்டப் பறவை | |
---|---|
ஆண் கருநீலத் தோட்டப் பறவை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Passeriformes
|
துணைவரிசை: | Passeri
|
குடும்பம்: | Ptilonorhynchidae GR Gray, 1841
|
இனம் | |
Ailuroedus |
தோட்டப் பறவை (Bower bird) என்பது டிலோனோரைன்சிடே குடும்பப் பறவை. இந்தப் பறவைகளின் ஆண் பறவைகள் தன் துணையை ஈர்க்க அலங்கார வளைவுகளை உருவாக்கும்.[1][2][3]
வருடத்தில் பெரும் பகுதி தனித்தே வாழும். ஆண் பறவைகள் இனப்பெருக்க காலம் வந்த உடன் காட்டில் தகுந்த ஒரிடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு நாணல் போன்ற குச்சிகளை சேகரித்து அலங்கார வளைவினைக் கட்டுகிறது. பின் நீலம் அல்லது பச்சை நிறப் பழச் சாற்றினை தன் எச்சிலோடு கலந்து மரப்பட்டைத் துண்டு ஒன்றினால் கட்டிய வளைவிற்கு சாயம் பூசுகிறது. பின்னர் வண்ண வண்ண மலர்கள், சிப்பிகள், மனிதர்கள் குப்பையில் தூக்கி எறியும் வண்ண மிகு கண்ணாடித் துண்டுகள், பிளாஸ்டிக் மூடிகள் போன்றவற்றைக் கொண்டுவந்து வளைவிற்குள்ளும் அதனைச் சுற்றிலுமும் பரப்பி வைக்கிறது. மேடையும் அலங்கார வளைவும் தயாரானபின் ஆண்பறவை தன் குரல் எழுப்பிப் பெண் பறவையை அழைக்கிறது. பெண் வந்து அவற்றைப் பார்க்கும் போது ஆசையும் வெட்கமும் உடலில் கூட ஆண் பறவை பலவிதமான உடல் அசைவுகளைக் காட்டி பெண்ணைக் கவர முயற்சி செய்கிறது. பின் பெண் பறவை கூடு கட்டி முட்டை இட்டுக் குஞ்சு பொரிக்கிறது.
கருநீலத் தோட்டப் பறவை பறவை குயில் போன்ற வண்ணமும் தோற்றமும் கொண்டது. ஆண் பறவை மின்னும் பச்சை கலந்த கரு நீல வண்ணம் கொண்டது. குயிலின் கண்கள் சிவப்பாக இருக்கும். ஆனால் இவற்றின் கரு விழியினைச் சுற்றி ஒரு நீலக் கோடு, கரு விழியிலே கரிய பாப்பாவைச் சுற்றி பச்சை கலந்த பழுப்பு நிறம் காணலாம். பெண் பறவை பெண் குயில் போன்றே புள்ளிகள் கொண்ட பழுப்பு வண்ணத்தில் இருக்கும். பெண்ணின் விழிகள் நீல நிறத்தில் இருக்கும்.
உசாத்துணை
தொகு- ↑ Borgia, Gerald (June 1986). "Sexual Selection in Bowerbirds". Scientific American 254 (6): 92–101. doi:10.1038/scientificamerican0686-92. Bibcode: 1986SciAm.254f..92B. https://archive.org/details/sim_scientific-american_1986-06_254_6/page/n93.
- ↑ "Problem Wildlife". Dse.vic.gov.au. 2013-02-27. Archived from the original on 2013-04-28. பார்க்கப்பட்ட நாள் 2013-03-27.
- ↑ "Spotted Bowerbird" (PDF). Archived from the original (PDF) on 2014-02-17. பார்க்கப்பட்ட நாள் 2013-03-27.