தோரியம் முக்குளோரைடு

வேதிச் சேர்மம்

தோரியம் முக்குளோரைடு (Thorium trichloride) என்பது ThCl3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தோரியம் டிரைகுளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படும் இந்த இருமச் சேர்மம் தோரியமும் குளோரினும் சேர்ந்து வினைபுரிவதால் உருவாகிறது. [1][2][3]

தோரியம் முக்குளோரைடு
Thorium trichloride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
முக்குளோரோதோரியம்
வேறு பெயர்கள்
தோரியம்(III) குளோரைடு
இனங்காட்டிகள்
15123-26-9
ChemSpider 123372
InChI
  • InChI=1S/3ClH.Th/h3*1H;/q;;;+3/p-3
    Key: LQPUBIDKGBFLMP-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 139894 (charge error)
  • Cl[Th](Cl)Cl
பண்புகள்
Cl3Th
வாய்ப்பாட்டு எடை 338.39 g·mol−1
தோற்றம் படிகங்கள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

தோரியம் டெட்ராகுளோரைடை தோரியம் உலோகத்துடன் சேர்த்து 800° செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்தினால் ஒடுக்க வினைநிகழ்ந்து தோரியம் முக்குளோரைடு உருவாகும்:[4]

3Th + ThCl4 -> 4ThCl3

இரண்டு தனிமங்களும் ஒன்றாகச் சேர்ந்து வினைபுரிந்தாலும் இது உருவாகிறது:[5]

2Th + 3Cl2 -> 2ThCl3

வேறு சில தயாரிப்பு முறைகளும் அஃப்றியப்படுகின்றன.[6]

இயற்பியல் பண்புகள்

தொகு

தோரியம் முக்குளோரைடு சேர்மம் யுரேனியம் முக்குளோரைடு படிகத்திட்டத்தில் படிகமாகிறது.

வேதியியல் பண்புகள்

தொகு

630 பாகை செல்சியசு வெப்பநிலையில் தோரியம் முக்குளோரைடு இருகுளோரைடாகவும் டெட்ராகுளோரைடாகவும் ப்ரிகையடைகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Lau, K. H.; Hildenbrand, D. L. (1990). "High-temperature equilibrium studies of the gaseous thorium chlorides". J. Chem. Phys. 92 (10): 6124. doi:10.1063/1.458335. Bibcode: 1990JChPh..92.6124L. https://webbook.nist.gov/cgi/formula?ID=C15123269&Mask=20. பார்த்த நாள்: 5 April 2024. 
  2. Buschbeck, Karl-Christian (1985). Gmelin Handbook of Inorganic Chemistry (in ஆங்கிலம்). Springer-Verlag. p. 34. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-93515-5. பார்க்கப்பட்ட நாள் 5 April 2024.
  3. Bagnall, Kenneth W.; Kanellakopulos, Basil (21 December 1984). Coordination Compounds (in ஆங்கிலம்). Springer Berlin Heidelberg. p. 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-93515-5. பார்க்கப்பட்ட நாள் 5 April 2024.
  4. Annual Summary Research Report of Chemistry, Engineering, Metallurgy, Physics and Reactor Divisions (in ஆங்கிலம்). Ames Laboratoty. 1965. p. 1-9. பார்க்கப்பட்ட நாள் 5 April 2024.
  5. Bulletin (in ஆங்கிலம்). U.S. Government Printing Office. 1962. p. 116. பார்க்கப்பட்ட நாள் 5 April 2024.
  6. Reactor Fuel Processing (in ஆங்கிலம்). U.S. Argonne National Laboratory. 1961. p. 42. பார்க்கப்பட்ட நாள் 5 April 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோரியம்_முக்குளோரைடு&oldid=4041250" இலிருந்து மீள்விக்கப்பட்டது