தோர்கர் மாவட்டம்
தோர்கர் மாவட்டம் (Torghar District) (பஷ்தூ: تور غر ولسوالۍ, உருது: ضلع تورغر, பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். [2]இம்மாவட்டம் மன்செரா மாவட்டத்தின் 3 தாலுகாக்களைக் கொண்டு 2019ம் ஆண்டில் நிறுவப்பட்டது.[3]இதன் நிர்வாகத் தலைமையிடம் ஜூத்பா நகரம் ஆகும். இம்மாவட்டம் மாகாணத் தலைநகரான பெசாவர் நகரத்திற்கு வடகிழக்கே 292 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது மலைகளால் சூழ்ந்த மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் வடக்கில் சிந்து ஆறு மற்றும் பரந்தோ ஆறுகள் கூடுகிறது. இது கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதிக்கு மேற்கில் உள்ளது. 2005 பாகிஸ்தான் நிலநடுக்கத்தின் போது இம்மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
தோர்கர்
ضلع تورغر | |
---|---|
மாவட்டம் | |
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் தோர்கர் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்) | |
ஆள்கூறுகள்: 34°36′49″N 72°47′18″E / 34.613573°N 72.788200°E | |
நாடு | பாக்கித்தான் |
மாகாணம் | கைபர் பக்துன்வா மாகாணம் |
நிறுவிய ஆண்டு | 2011 |
தலைமையிடம் | ஜுத்பா |
அரசு | |
• வகை | மாவட்ட நிர்வாகம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 497 km2 (192 sq mi) |
மக்கள்தொகை (2017)[1] | |
• மொத்தம் | 1,71,349 |
• அடர்த்தி | 340/km2 (890/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
தாலுகாக்கள் | 3 |
இணையதளம் | torghar |
மாவட்ட நிர்வாகம்
தொகு497 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தோர்கர் மாவட்டம் இரண்டு தாலுகாக்கள் கொண்டது. அவைகள்: ஜூத்பா தாலுகா மற்றும் காந்தேர் தாலுகா ஆகும். இது 16 ஒன்றியக் குழுக்களைக் கொண்டுள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கள் தொகை 171,349 ஆகும். அதில் ஆண்கள் 86,059 மற்றும் பெண்கள் 85,274 உள்ளனர். எழுத்தறிவு 23.86% கொண்டுள்ளது. 100% விழுக்காடு மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் மதச்சிறுபான்மையோர் 22 பேர் மட்டுமே உள்ளனர்.[1]பஷ்தூ மொழி 96.34%, இண்டிகோ மொழி 1.54% பேசுகின்றனர்.
மாகாணச் சட்டமன்றத் தொகுதிகள்
தொகுகைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றததிற்கு இம்மாவட்டத்திற்கு ஒரு சட்டமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "District Wise Results / Tables (Census - 2017)". www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics.
- ↑ "KP govt creates new Kohistan district - Newspaper - DAWN.COM". 16 January 2014.
- ↑ Tor Ghar: Kala Dhaka becomes 25th K-P district The Express Tribune. 28 January 2011. Retrieved 12 November 2011.