தோலும் தம்மும் (இசைக்கருவிகள்)

தோல் மற்றும் தமாவ் என்ற இரண்டு நாட்டுப்புற இசைக்கருவிகளைக் குறிக்க மொத்தமாக பயன்படுத்தப்படு

தோலும் தம்மும் அல்லது தோல் டமௌன் என்பது உத்தரகாண்ட் மற்றும் கீழ் இமாச்சலப் பிரதேசத்தின் இசைக்கப்படும் தோல் மற்றும் தமாவ் என்ற இரண்டு நாட்டுப்புற இசைக்கருவிகளைக் குறிக்க மொத்தமாக பயன்படுத்தப்படும் சொல் ஆகும்,இந்த இசைக்கருவிகள் தனித்தனியாக இசைக்கப்பட்டாலும் திருவிழாக்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு  சந்தர்ப்பங்களில் எப்போதுமே ஒன்றாகதான் இசைக்கப்படுகின்றன; [1] இவ்விரண்டு இசைக்கருவிகளும் கிராமவாசிகளின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன, அவர்கள் பெரும்பாலும் பிராந்தியத்தின் தொலைதூர பள்ளத்தாக்குகளில் வாழ்கிறார்கள், மேலும் ஒவ்வொரு முக்கிய நிகழ்வும் அவர்களின் இசையுடன் சேர்ந்துள்ளது, இக்கருவிகளை இசைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. [2] பிறப்பு மற்றும் ஞானஸ்நானம் கொண்டாடுவது முதல் அனைத்து மத விழாக்கள், பாண்டவ லீலா போன்ற நாட்டுப்புற நாடகங்கள், அறுவடை திருநாள் மற்றும் இறப்பு சடங்குகள் என ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் ஏற்ற குறிப்பிட்ட தாள வடிவங்களை பட்டியலிட்டுள்ள தோல் சாகரின் பண்டைய வாய்மொழிக் கட்டுரையின்படி அவை இசைக்கப்படுகின்றன. [3] பாரம்பரியமாக, அவை அவுஜி, பஜ்கி, தாஸ் அல்லது தோலி போன்ற குறிப்பிட்ட இனத்தை சார்ந்த மக்களாலேயே இசைக்கப்படுகிறது. மேலும் அந்தந்த விழாக்களுக்கு ஏற்ப இக்கருவிகள் இணைந்து இசைக்கப்படும் தாள லயங்கள் மாறுபடும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Andrew Alter: Controlling Time in Epic Performances: An Examination of Mahābhārata Performance in the Central Himalayas and Indonesia. Ethnomusicology Forum, Vol. 20, No. 1 ( 20th Celebratory Edition ) April 2011, pp. 57-78
  2. Asian Music, Volume 29. Society for Asian Music, 1998 Quote: "They provide auspicious music at ritual occasions...Auji caste members are the primary musicians who play the most commonly found pair of drums called the dhol-damau."
  3. Alter, Andrew (2003). "Dhol Sagar: Aspects of Drum Knowledge amongst Musicians in Garhwal, North India". European Bulletin of Himalayan Research 24: 63–76.