தோல் (வாத்தியம்)

இந்திய இசைக் கருவி

தோல் ( Dhol) என்பது இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும், பிராந்திய மாறுபாடுகளுடன், ஒரே மாதிரியான இரட்டைத் தலை நூதன முரசு வகைகளில் ஏதேனும் ஒன்றைக் குறிக்கலாம்[1]. இந்தியா, வங்காளதேசம் மற்றும் பாக்கித்தான் போன்ற நாடுகளில் முதன்மையாக பஞ்சாப், அரியானா, தில்லி, காஷ்மீர், சிந்து, பிரம்மபுத்திரா ஆற்றுப் பள்ளத்தாக்கு, உத்தராகண்டம், மேற்கு வங்காளம், ஒடிசா, குசராத்து, மகாராட்டிரம், கொங்கண் மண்டலம், கோவா, கருநாடகம், இராசத்தான், பீகார் சார்க்கண்டு மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற வடக்குப் பகுதிகள் அடங்கும். இது மேற்கு நோக்கி கிழக்கு ஆப்கானித்தான் வரை நீண்டுள்ளது. இதன் தொடர்புடைய கருவி டோலக் அல்லது தோல்கி ஆகும். இந்தியா மற்றும் பாக்கித்தானின் பஞ்சாப் பகுதியில் இது அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

தோல்
தோல்
தோல்
வகைப்பாடுசவ்வு மூலம் ஒலியை உருவாக்கும் கருவி
தொடர்புள்ள கருவிகள்
மேலதிக கட்டுரைகள்

தோல் வாசிப்பவர் "தோலி" என்று அழைக்கப்படுவார்.

கட்டுமானம் தொகு

 
புனேவில் தோல் இசைக்கலைஞர்
 
காந்தார இசைக் கலைஞர்கள் தோல் இசைக்கருவியை வாசிக்கிறார்கள்

தோல் இரண்டு மரக் குச்சிகளைப் பயன்படுத்தி இசைக்கப்படுகிறது. இசைக்கருவியின் ஒரு பக்கத்தை வாசிக்கப் பயன்படுத்தப்படும் குச்சி பஞ்சாபியில் "டாக்கா" என்று அழைக்கப்படுகிறது. பாரம்பரியமாக தோல் வீரர், தாலி (ஓக் அல்லது மஹோகனி) எனப்படும் கடின மரத்திலிருந்து அந்த கோணத்தில் இயற்கையாகவே வளைந்திருக்கும் ஒரு கிளையைத் தேடி, அதை பயன்படுத்துவார்.[2] ஆட்டின் தோல் காகிதம் போல மெல்லியதாக இருப்பதால் துளையிடாமல் இருக்க வளைந்த குச்சி பயன்படுத்தப்படுகிறது.[3] 'திக்லி' என்று அழைக்கப்படும் மற்ற குச்சி மிகவும் மெல்லியதாகவும், நெகிழ்வாகவும் இருக்கும். .

பருத்தியாலான ஒரு துண்டினை பட்டையாகச் சுற்றி மாலை போல பட்டையாக இசைக்கலைஞரின் கழுத்தில் தொங்கவிடப்படும்.[4] மர பீப்பாயின் மேற்பரப்பு சில சந்தர்ப்பங்களில் பொறிக்கப்பட்ட வடிவங்கள் மற்றும் சில நேரங்களில் வண்ணப்பூச்சுகளால் அலங்கரிக்கப்படும்.

பிரிவினைக்கு முந்தைய காலத்தில், குறிப்பிட்ட செயல்பாடுகளுடன் தொடர்புடைய பஞ்சாபி தோலில் பலவகையான தாளங்கள் இசைக்கப்பட்டன..[5] இருப்பினும், சில கலாச்சார நடைமுறைகளின் வீழ்ச்சி அல்லது மறைந்துவிட்டதால், சமீபத்திய தலைமுறை தோல்-கலைஞர்கள் இவற்றில் பலவற்றுடன் பரிச்சயமில்லாமல் உள்ளனர். அதே நேரத்தில், பஞ்சாபில் நாட்டுப்புற அரங்கேற்றப்பட்ட பாங்க்ரா நடனத்தின் வளர்ச்சி அந்த நடனத்திற்கு குறிப்பாக பல புதிய தாளங்களை உருவாக்க தூண்டியது.

 
A man depicted playing dhol

இதனையும் பார்க்கவும் தொகு

சான்றுகள் தொகு

  1. "Music to the years: Musical instruments from the Indus Valley Civilisation". Hindustan Times (in ஆங்கிலம்). 2016-08-14. பார்க்கப்பட்ட நாள் 2018-12-22.
  2. Schreffler, Gibb Stuart (September 2010). "The Ḍhol, Presently". Signs of Separation: Ḍhol in Punjabi Culture (PhD). University of California, Santa Barbara. pp. 452–454.
  3. Schreffler, Gibb Stuart (September 2010). "The Ḍhol, Presently". Signs of Separation: Ḍhol in Punjabi Culture (PhD). University of California, Santa Barbara. p. 460.
  4. Schreffler, Gibb Stuart (September 2010). "The Ḍhol, Presently". Signs of Separation: Ḍhol in Punjabi Culture (PhD). University of California, Santa Barbara. pp. 444, 470.
  5. Schreffler, Gibb Stuart (September 2010). "Uses of the Ḍhol and its Repertoire". Signs of Separation: Ḍhol in Punjabi Culture (PhD). University of California, Santa Barbara.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோல்_(வாத்தியம்)&oldid=3655971" இலிருந்து மீள்விக்கப்பட்டது