தோல் கழலை நோய்
தோல் கழலை நோய் அல்லது லம்பி தோல் நோய் ( எல்.எஸ்.டி ) என்பது கால்நடைகளுக்கு ஏற்படும் ஒரு தொற்று நோயாகும், இது போக்ஸ்விரிடே குடும்பத்தைச் சேர்ந்த வைரசால் ஏற்படுகிறது, இது நீத்லிங் வைரஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நோய் காய்ச்சல், பெரிதாகிய மேலோட்டமான நிணநீர் சுரப்பி மற்றும் தோல் மற்றும் சளி சவ்வுகளில் (சுவாச மற்றும் இரைப்பைக் குழாய்கள் உட்பட) பல கட்டிகள் (விட்டம் 2–5 செ.மீ ) என்று வகைப்படுத்தப்படுகிறது. [1] பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு கால்களில் வீக்கம் உண்டாகி அதனால் அவை நொண்டக்கூடும். பாதிக்கப்பட்ட விலங்குகளின் தோல் நிரந்தரமாக சேதம் அடைவதால், இந்த வைரசால் முக்கியமான பொருளாதார இழப்பு ஏற்படுகின்றது. இதனால் இறந்த கால்நடையின் தோலின் வணிக மதிப்பு குறைந்துபோகிறது. கூடுதலாக, இந்த நோய் தாக்கப்பட்ட மாடுகளானது பெரும்பாலும் நாள்பட்ட பலவீனம், பால் உற்பத்தி குறைதல், வளர்ச்சி குறைதல், சினை பிடிக்காமை, கருக்கலைதல் சில நேரங்களில் மரணம் போன்றவற்றுக்கு காரணமாகிறது. இந்நோயானது பெரும்பாலும் கொசு, ஈக்கள் மூலம் பரவக்கூடியது.
கட்டுப்பாடு
தொகுமுதலில் இந்நோய் பாதித்த மாடுகளை பிற மாடுகளிடமிருந்து தனிமைப் படுத்தி, உடனடியாக கால்நடை மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும். இந்த வைரஸ் நோய்க்கு அடுத்து வரும் பாக்டீரியல் நோயால் மாடுகளின் இறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே பாக்டீரியல் நோயை கட்டுப்படுத்த ஊசி மருந்துகளை மூன்று நாட்களுக்கு செலுத்த வேண்டும். கிருமிநாசினி கொண்ட களிம்பு மருந்துகளை கட்டிகள் மீது தடவ வேண்டும்.
வரலாறு
தொகுலம்பி தோல் நோய் முதன்முதலில் 1929 ஆம் ஆண்டில் சாம்பியாவில் ஒரு கொள்ளைநோயாகக் காணப்பட்டது. ஆரம்பத்தில், இது விஷம் அல்லது பூச்சி கடித்தன் விளைவாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா குடியரசில் 1943 மற்றும் 1945 க்கு இடையில் கூடுதலாக காணப்பட்டன. 1949 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் சுமார் 8 மில்லியன் கால்நடைகள் பான்சூடிக் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டன, இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. கென்யா, சூடான், தான்சானியா, சோமாலியா, கேமரூன் ஆகிய நாடுகளில் கால்நடைகளை பாதிக்கும் தோல் கழலை நோய் 1950 கள் மற்றும் 1980 களுக்கு இடையில் ஆப்பிரிக்கா முழுவதும் பரவியது. கடந்த தசாப்தத்தில், மத்திய கிழக்கு, ஐரோப்பிய மற்றும் மேற்கு ஆசிய பிராந்தியங்களில் தோல் கழலை நோய் பாதிப்புகள் கண்டறியப்பட்டன.[2] இந்திலையில் 2019 ஆம் ஆண்டு இந்நோய் இந்தியாவின், கேரளத்தில் கண்டறிப்ப்பட்டது.[3]
குறிப்புகள்
தொகு- ↑ Şevik, Murat; Avci, Oğuzhan; Doğan, Müge; İnce, Ömer Barış (2016). "Serum Biochemistry of Lumpy Skin Disease Virus-Infected Cattle" (in en). BioMed Research International 2016: 6257984. doi:10.1155/2016/6257984. பன்னாட்டுத் தர தொடர் எண்:2314-6133. பப்மெட்:27294125.
- ↑ http://www.oie.int/fileadmin/Home/eng/Health_standards/tahm/2.04.13_LSD.pdf
- ↑ இந்தியாவில் முதல்முறையாக கேரளாவில் கால்நடைகளை தாக்கும் தோல் கழலை நோய் கண்டுபிடிப்பு: உலக கால்நடை சுகாதார அமைப்புக்கு மத்திய அரசு அறிக்கை, சுப.ஜனநாயகச்செல்வம், இந்து தமிழ், 2019 நவம்பர், 30
வெளி இணைப்புகள்
தொகு- OIE இல் உலகளவில் லம்பி தோல் நோயின் தற்போதைய நிலை பரணிடப்பட்டது 2016-08-13 at the வந்தவழி இயந்திரம் . WAHID இடைமுகம் - OIE உலக விலங்கு சுகாதார தகவல் தரவுத்தளம்
- நோய் அட்டை பரணிடப்பட்டது 2014-10-10 at the வந்தவழி இயந்திரம்