தோவரிமலை எழுத்துப்பறை

கேரளத்தில் உள்ள குகைப் பாறை

தோவரிமலா எழுத்துபாரா (Thovarimala Ezhuthupara) என்பது இந்தியாவின், கேரளத்தின், வயநாடு மாவட்டத்தில் தொலைதூரத்தில் அமைந்துள்ள ஒரு பாறைக் குகை ஆகும். தேவரிமலையில் கிமு 1000 காலத்தில் இருந்து, அதற்கு முந்தைய காலத்தைய கல் செதுக்கு ஓவியங்களானது சுமார் 500 மீட்டர் உயரத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இங்கு உள்ள இயற்கையான குகைகச் சுவர்களில் கற்கால பாறைச் செதுக்கல்களை காணலாம். தோவரிமலையில் உள்ள அரிய வரலாற்று புதையல், பழங்காலத்திலிருந்தே வயநாடு பகுதியில் மனித வாழ்விடங்கள் இருந்தற்கான ஆய்வில் ஒளியை பாய்ச்சுகின்றன. என்றாலும் இது இன்னும் தொல்லியல் துறை போன்ற நிறுவனங்களின் பாதுகாப்பை பெறவில்லை. இதற்கு ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள எடக்கல் குகைகள் தொல்லியல் துறையின் பாதுகாப்பைப் பெற்றுள்ளது. குகையின் மேல் பக்கத்தில் காணப்படும் இந்த சிற்பங்களில் சில வடிவங்களை அடையாளம் காண இயலுகிறது, ஒரு அம்பு மற்றும் ஒரு செதுக்குதலில் பெண் பிறப்புறுப்பு உறுப்பை ஒத்த உருவம் உள்ளது. சமீபத்தில் இந்த குகையில் மேலும் எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. எழுத்துப்பாரா என்ற சொல்லுக்கு "கல்லில் எழுதப்பட்டவை" என்று பொருள்.

போக்குவரத்து

தொகு

இந்த கிராமத்துக்கு சுல்தான் பத்தேரியிலிருந்து செல்லலாம். பெரிய மலைச் சாலை மனந்தவாடியை கண்ணூர் மற்றும் தலசேரியுடன் இணைக்கிறது. தாமரஸ்ஸரி மலைப்பாதை கோழிக்கோட்டை கல்பெட்டாவுடன் இணைக்கிறது. குட்டியாடி மலைப்பாதை வட்டகரத்தை கல்பேட்டா மற்றும் மனந்தவாடியுடன் இணைக்கிறது. பால்ச்சுரம் மலைப்பாதை கண்ணூர் மற்றும் இரிட்டியை மனந்தவாடியுடன் இணைக்கிறது. நிலம்பூரிலிருந்து உதகை செல்லும் சாலையும் வயநாட்டுடன் மேப்பாடி கிராமம் வழியாக இணைக்கப்பட்டுள்ளது.

அருகிலுள்ள தொடருந்து நிலையம் மைசூரில் உள்ளது மற்றும் அருகிலுள்ள வானூர்தி நிலையங்கள் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் -120   கி.மீ, பெங்களூரு சர்வதேச விமான நிலையம் -290   கி.மீ, மற்றும் கண்ணூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், 58   கி.மீ. ஆகும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோவரிமலை_எழுத்துப்பறை&oldid=3036352" இலிருந்து மீள்விக்கப்பட்டது