சுல்தான் பத்தேரி
சுல்தான் பத்தேரி இந்தியாவின் கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள ஊர். இது தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் எல்லையில் உள்ளது. திப்பு சுல்தான் இங்கே ஒரு கோட்டையைக் கட்டியதால் இந்த இடத்துக்கு சுல்தான் பத்தேரி என்ற பெயர் ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்துக்கு அருகில் உள்ள இவ்வூரில் தமிழர்கள் ஏராளமானோர் வாழ்கிறார்கள்.
சுல்தான் பத்தேரி | |||||||
— நகரம் — | |||||||
ஆள்கூறு | 11°40′N 76°17′E / 11.67°N 76.28°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாவட்டம் | வயநாடு மாவட்டம் (வயனாடு) | ||||||
மக்களவைத் தொகுதி | சுல்தான் பத்தேரி | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
27,473 (2001[update]) • 476/km2 (1,233/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 907 மீட்டர்கள் (2,976 அடி) | ||||||
குறியீடுகள்
|
காலநிலை
தொகுசுல்தான் பத்தேரி பகுதியில் சராசரி மழைவீழ்ச்சி 2322மிமீ.
மாத மழை அளவு
தொகுமாதம் | ஜன | ஃபெப் | மார் | ஏப் | மெ | ஜூன் | ஜூலை | ஆக | செப் | அக் | நவ | டிச |
மழை (மி.மீ) | 13.6 | 13.6 | 13.3 | 118.1 | 58.4 | 607.9 | 378.1 | 626 | 249.9 | 122.4 | 43.3 | 1 |
படத்தொகுப்பு
தொகு-
வயனாடு மலைச்சாலை
-
வயனாடு மலைச்சாலை இரவில்
-
தேயிலை
-
எடக்கல் குகை
-
சுல்தான் பத்தேரி முக்கிய சாலை
-
சுல்தான் பத்தேரி முக்கிய சாலை மூடுபனி பருவத்தில்
-
அம்புகுத்தி மலை
பழங்குடியினர்
தொகுகேரளத்தில் பழங்குடியினர் அதிகம் வாழும் மாவட்டங்களில் வயநாடும் ஒன்று. இங்கு பணியர், காட்டு நாய்க்கர்,குறுமர், ஊராளி ஆகிய பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். இங்கு வாழும் குறுமர் இன மக்கள் சொந்த நிலங்களைக் கொண்டுள்ளனர். கல்வியறிவும் பெற்றுள்ளனர். இங்கு பழங்குடியினர் அதிக எண்ணிக்கையில் வாழ்வதால், சுல்தான் பத்தேரி சட்டசபைத் தொகுதியை பழங்குடியின வேட்பாளர்களுக்கு ஒதுக்கியுள்ளனர்.
பெயர்க் காரணம்
தொகுபோர்த்துகீசிய மொழியில் உள்ள பத்தேறியா (Batteria) என்ற சொல்லில் இருந்தே இப்பெயர் பெற்றதாக கூறுகின்றனர். முன்னர் கணபதி வட்டம் என்று அறியப்பட்ட இவ்வூரில், ஆயுதக் கிடங்கை வைத்தான் திப்பு சுல்தான். எனவே, அதன் காரணமாக சுல்தான்ஸ் பாட்டரி என்ற பெயர் பெற்று, சுல்தான் பத்தேரி என மருவியது.
அருகில் உள்ள நகரங்கள்
தொகுபெங்களூரு | 240 |
மைசூர் | 115 |
கோழிக்கோடு | 98 |
ஊட்டி | 94 |
கல்பற்றா | 25 |
மானந்தவாடி | 45 |
பூக்கோடு தடாகம் | 42 |
எடக்கல் குகை | 12 |
செம்பிர பீக்கு | 42 |
முத்தங்கா | 12 |
காராப்புழை அணை | 16 |
சுசிப்பாறை அருவி | 28 |
குறுவ தீவு | 37 |
பட்சிபாதாளம் | 71 |
பைத்ருகா மியூசியம் | 10 |
சங்ஙலா மரம் | 41 |
கோறோம் பள்ளி | 38 |
பழசி குடீரம் | 42 |
ஜைன கோயில் | 0 |