த்ரி மிஸ்டேக்ஸ் ஆப் மை லைப்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
தி 3 மிஸ்டேக்ஸ் ஆஃப் மை லைஃப் சேத்தன் பகத் என்ற இந்திய ஆங்கில எழுத்தாளர் எழுதிய மூன்றாவது நாவல் ஆகும். இந்த நூல் 2008 ஆம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்டது மற்றும் முதலாவதாக 4,20,000 பிரதிகள் அச்சிடப்பட்டது. இந்த நாவல் மூன்று நண்பர்களின் வாழ்க்கையைப் பற்றியது. மேற்கு இந்தியாவில் உள்ள அகமதாபாத் நகரம் இக்கதையின் நிகழ்விடமாக இருக்கின்றது. சேத்தன் பகத் எழுதிய நாவல்களில் அதிகமாக விற்பனையான மூன்றாவது நூல் இதுவாகும்.
நூலாசிரியர் | சேத்தன் பகத் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | ஆங்கிலம் |
வகை | நாவல் |
வெளியீட்டாளர் | ரூபா பதிப்பகம் |
ISBN | 978-81-291-3551-3 |
மொழிபெயர்ப்பு
தொகுஇந்த நூல் குஜராத்தி மொழியில் அஹமதாபாத் & மும்பையில் உள்ள MBD என்ற முன்னணி குஜராத்தி புத்தக வெளியீட்டாளரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு டைமண்ட் பாக்கெட் புக்ஸ் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. [1] பிரெஞ்சு மொழிபெயர்ப்பு மார்ச் 2010 இல் செர்சே மிடி பப்ளிஷரால் Les 3 erreurs de ma vie என வெளியிடப்பட்டது. 2011 ஆம் ஆண்டு திலீப ஜெயக்கொடியால் சிங்களத்தில் துன் தகத்தீருகன் கரபு கெனெக் மான் என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.[சான்று தேவை]</link>
திரைப்பட தழுவல்கள்
தொகுநாவலின் திரைப்பட வடிவம் காய் போ சே! அபிஷேக் கபூர் இயக்கத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத், அமித் சாத் மற்றும் ராஜ்குமார் ராவ் ஆகியோர் நடிப்பில் பிப்ரவரி 2013 இல் வெளியானது. இந்தப் படமும் புத்தகமும் குஜராத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டவை என்பதால் காய் போ சே என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. .
மேற்கோள்கள்
தொகு- ↑ "चेतन भगत की पुस्तकों के हिंदी संस्करणों ने मचाई धूम- 2008100554287800 | India - Oneindia Hindi". Thatshindi.oneindia.in. 5 October 2008. Archived from the original on 2 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 18 May 2013.