தஞ்சை சந்தானகிருட்டிண கனகா (Thanjavur Santhanakrishna Kanaka) டி. எஸ். கனகா என்றும் அழைக்கப்படும் (பிறப்பு: 1932 மார்ச் 31-இறப்பு: 2018 நவம்பர் 14) இவர் ஆசியாவின் முதல் பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராவார். [1] [2] [3] மேலும், உலகின் முதல் சில பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவராகவும் இருந்தார். இவர் மூளையில் நாள்பட்ட மின்முனை உள்வைப்புகளை சரிசெய்த இந்தியாவின் முதல் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார் 1975 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஆழ்ந்த மூளைத் தூண்டுதலைச் செய்த முதல் நிபுணருமாவார். [4] பேராசிரியர் பாலசுப்பிரமணியம், பேராசிரியர் எஸ். கல்யாணராமன் ஆகியோருடன் இணைந்து இவர் 1960கள் மற்றும் 1970களில் செயல்பாட்டு நரம்பியல் அறுவை சிகிச்சைக்கு முன்னோடியாகவும் இருந்தார். ஸ்டீரியோடாக்டிக் அறுவை சிகிச்சை துறையில் இவரது ஆராய்ச்சி மற்றும் பங்களிப்புகளுக்கான அங்கீகாரத்தைப் பெற்றார். [5]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

சென்னையில் சந்தானகிருட்டிணன் மற்றும் பத்மாவதி ஆகியோருக்கு பிறந்த எட்டு குழந்தைகளில் கனகாவும் ஒருவர். [6] இவரது தந்தை பொது அறிவுறுத்தல் துணை இயக்குநராகவும், சென்னை ஆசிரியர் கல்லூரியின் முதல்வராகவும் இருந்துள்ளார். [7] ஆரம்பத்தில், கனகா ஆன்மீக படிப்புகளில் ஈர்க்கப்பட்டார். ஆனால் இவரது ஆர்வம் காரணமாக டிசம்பர் 1954 இல் தனது இளங்கலை மருத்துவத்தை முடித்து, மார்ச் 1963 இல் பொது அறுவை சிகிச்சையில் தனது முதுகலை மருத்துவத்தை அடைந்தார். [8] 1968 ஆம் ஆண்டில், இவர் நரம்பியல் அறுவை சிகிச்சையில் தனது முதுகலைப் பட்டம் (எம்.சி.எச்) பெற்றார் பின்னர் 1972 இல் பெருமூளை வாதத்தில் ஸ்டீரியோடிக் அறுவை சிகிச்சையின் மதிப்பீட்டில் ஆராய்ச்சியை முடித்தார். 20 ஆண்டுகளுக்கும் மேலான அறுவை சிகிச்சைகளில் ஈடுபட்ட பிறகு, கனகா மீண்டும் பள்ளிக்குச் சென்று 1983 இல் உயர் கல்வி பட்டயச் சான்றினை பெற்றார்.

தொழில்

தொகு

கனகா உலகின் முதல் பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவராவார். நவம்பர் 1959 இல் தகுதி பெற்ற டயானா பெக் (1902-1956), மற்றும் அசிமா அல்டினோக் ஆகியோருக்குப் பிறகு 1968 மார்ச்சில் நரம்பியல் அறுவை சிகிச்சையில் (எம்.சி.எச்) தகுதி பெற்றவர். 1960 இல் சென்னையில் ஸ்டீரியோடாக்ஸி தொடங்கியபோது, கனகா இந்திய நரம்பியல் நிபுணர் பி. இராமமூர்த்தியின் அறுவை சிகிச்சை குழுவில் உறுப்பினராக இருந்தார். இவர் இந்தியாவில் முதல் ஸ்டீரியோடாக்ஸிக் நடைமுறைகளை நிகழ்த்தினார். [5] [9] [10]

கனகா 1962-1963 சீன-இந்தியப் போரின்போது இந்திய ராணுவத்தில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றினார். [11] இவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை முக்கியமாக அரசாங்க பொது மருத்துவமனையுடன் தொடர்பிலிருந்தார். கனகா சென்னை மருத்துவக் கல்லூரி, [12] தொற்றுநோயியல் ஆராய்ச்சி மையம், அடையாறு புற்றுநோய் நிறுவனம், இந்து மிஷன் மருத்துவமனை மற்றும் பிற மருத்துவமனைகளிலும் கற்பித்தார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு சுகாதார வசதிகளை வழங்க இவர் திருமலை திருப்பதி தேவஸ்தானம் உட்பட பல அமைப்புகளுடன் பணியாற்றினார். [13]

1973 ஆம் ஆண்டில், இவர் ஒரு சர்வதேச பயணத்தைத் தொடங்கினார். முதலில் சப்பானின் டோக்கியோவுக்குப் பயணம் செய்தார். இது ஸ்டீரியோடாக்ஸிக் நடைமுறைகள் செய்யப்பட்ட உலகின் மூன்று இடங்களில் ஒன்றாகும். [6][14] இந்த நேரத்தில், கனகா ஒரு வருட கொழும்பு திட்ட பெல்லோஷிப்பை முடித்தார். அங்கு வலி மேலாண்மை மற்றும் உதரவிதான வேகக்கட்டுப்பாடு உள்ளிட்ட பிரெனிக் நரம்பு தூண்டுதல் மற்றும் உயிரியல் மருத்துவ சாதனங்களை ஆய்வு செய்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

கனகா வெற்றிகரமாக தனது அறுவைச்சிகிச்சையில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, இவரது தம்பி நோய்வாய்ப்பட்டு ஒன்பது வயதில் இறந்தார். [6] இந்த துயரம் கனகா திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க முடிவெடுத்தது. மாறாக நோயாளிகளுக்கு உதவுவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க மருத்துவத் தொழிலைத் தொடர்ந்தது.

கனகா ஒரு ஆணாதிக்கம் செலுத்தும் துறையில் ஒரு முன்னோடி பெண்ணாக மிகவும் பாகுபாட்டை எதிர்கொண்டார். [6]

கனகா அதிக முறை இரத்ததானம் வழங்கியதற்க்காக லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். 2004 ஆம் ஆண்டு நிலவரப்படி இவர் 139 முறை இரத்த தானம் செய்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. [8]

மேற்கோள்கள்

தொகு
  1. TNN (1 January 2002). "Exhibition on Indian women opens". The Times of India. Archived from the original on 2012-10-23. பார்க்கப்பட்ட நாள் 2012-12-17.
  2. "Wiping out heritage?". The Hindu. Archived from the original on 2003-07-04. பார்க்கப்பட்ட நாள் 2012-12-17.
  3. "Tamil Nadu / Tiruchi News : "Check newborns' brain health"". The Hindu. 2 April 2008. Archived from the original on 2008-04-08. பார்க்கப்பட்ட நாள் 2012-12-17.
  4. Kanaka T S. Back to the future: Glimpses into the past. Neurol India [serial online] 2016 [cited 2016 May 4];64:206-7. Available from: http://www.neurologyindia.com/text.asp?2016/64/2/206/177594
  5. 5.0 5.1 Nashold B.S. (1994). The History of Stereotactic Neurosurgery. Stereotactic Functional Neurosurgery, vol 62, Number 1-4, p.29–40. DOI:10.1159/000098595
  6. 6.0 6.1 6.2 6.3 "Interview: Dr T S Kanaka, Asia's First Female Neurosurgeon – indiamedicaltimes.com" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2019-04-30. பார்க்கப்பட்ட நாள் 2019-04-30.
  7. Srinivas Chari (2011). "Carry on, doctor!". Harmony Magazine. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2016-05-04.
  8. 8.0 8.1 "Obituary: Prof. Thanjavur Santhanakrishna Kanaka | Asian Medical Students & Residents Society for Neurosurgery". asianyns.org. பார்க்கப்பட்ட நாள் 2019-04-23.
  9. Sridhar K. "Bioline International Official Site". Bioline.org.br. பார்க்கப்பட்ட நாள் 2012-12-17.
  10. Neurosurgery in India, by A.P.Karapurkar and S.K.Pandya
  11. Asia's first female neurosurgeon Dr.TS Kanaka in Phoenix Pengal 1/3| News7 Tamil. Available from: , ,
  12. "The Hindu : Tamil Nadu News : 6 doctors presented with Sanjivi award". Hinduonnet.com. 12 July 2004. Archived from the original on 2008-03-27. பார்க்கப்பட்ட நாள் 2012-12-17.
  13. "SVIMS hosts meeting on epilepsy". The Hindu. 16 February 2009. பார்க்கப்பட்ட நாள் 2016-05-05.
  14. . 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=த._ச._கனகா&oldid=3750592" இலிருந்து மீள்விக்கப்பட்டது