த பாதர் (ஆங்கிலம்: The Father) 2020 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு நாடகத் திரைப்படமாகும். புளோரியன் செல்லரால் எழுதி இயக்கப்பட்டுள்ளது. இது அவரது 2012 நாடகம் ல பெர் இனைத் தழுவி இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு பிரெஞ்சு-பிரித்தானிய கூட்டுத் தயாரிப்பாகும். அந்தோணி ஹோப்கின்ஸ், ஒலிவியா கோல்மன், மார்க் காடிசு, இமோகென் பூட்சு, ரூபசு செவெல் மற்றும் ஒலிவியா வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

த பாதர்
The Father
இயக்கம்புளோரியன் செல்லர்
தயாரிப்பு
  • டேவிட் பார்பிட்
  • சான்-லுயிசு லிவி
  • பிலிப் கார்கசொன்
  • கிறிசுடாப் சுபடோன்
  • சைமன் பிரண்ட்
திரைக்கதை
  • புளோரியன் செல்லர்
  • கிறிசுதோபர் ஹாம்ப்டன்
இசைலுடோவிகோ ஐனவுடி
நடிப்பு
ஒளிப்பதிவுபென் சுமிதார்ட்
படத்தொகுப்புயோர்கோசு லாம்ப்ரினாசு
விநியோகம்
வெளியீடு27 சனவரி 2020 (2020-01-27)(சன்டான்சு)
7 ஏப்ரல் 2021 (பிரான்சு)
23 ஏப்ரல் 2021 (இந்தியா)
11 சூன் 2021 (ஐக்கிய இரச்சியம்)
ஓட்டம்97 நிமிடங்கள்[1]
நாடு
  • பிரான்சு
  • ஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு< $20 மில்லியன்[2]
மொத்த வருவாய்$3.2 மில்லியன்[3]

சன்டான்சு திரைப்படத் திருவிழாவில் 27 சனவரி 2020 அன்று வெளியிடப்பட்டது. மறதிநோய் பற்றிய திரைப்படத்தில் அருமையாக நடித்ததற்காக ஹாப்கின்சு மற்றும் கோல்மன் ஆகியோர் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டனர். 93ஆவது அகாதமி விருதுகளில் மொத்தம் ஆறு விருதுகளிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் (ஹாப்கின்சு), மற்றும் சிறந்த துணை நடிகை (கோல்மன்) அகாதமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்லது. 78ஆவது கோல்டன் குளோப் விருதுகளில், நான்கு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்லது. பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகளில் ஆறு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்லது.

மேற்கோள்கள்

தொகு
  1. "The Father". Sundance Film Festival. Archived from the original on 2021-03-27. பார்க்கப்பட்ட நாள் சனவரி 22, 2020.
  2. "Nine Nominations for Ma Rainey's Black Bottom Lead All Films as the Chicago Indie Critics Announce Their Nominees for their Fifth Annual Awards". Chicago Indie Critics. திசம்பர் 28, 2020. Archived from the original on 3 சனவரி 2021. பார்க்கப்பட்ட நாள் சனவரி 22, 2021.
  3. "The Father (2021)". The Numbers. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 9, 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=த_பாதர்&oldid=3930582" இலிருந்து மீள்விக்கப்பட்டது