நஃபே சிங் ரத்தி

இந்திய அரசியல்வாதி

நஃபே சிங் ரத்தி ( Nafe Singh Rathee ) (இறப்பு, பிப்ரவரி 25, 2024) அரியானாவைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர்அரியானாவின் இந்திய தேசிய லோக் தளத்தின் மாநிலத் தலைவராக இருந்தார்.[1] பகதூர்கர் தொகுதியிலிருந்து 9ஆவது மற்றும் 10ஆவது அரியானா சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார்.[2]

நஃபே சிங் ரத்தி
மாநிலத் தலைவர்
இந்திய தேசிய லோக் தளம்
அரியானா
பதவியில்
3 ஜனவரி 2020 – 25 பெப்ரவரி 2024
அரியானா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1996–2005
முன்னையவர்சூரஜ் மல்
பின்னவர்ராஜின்ந்தர் சிங்
தொகுதிபகதூர்கர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅரியானா, இந்தியா
இறப்பு25 பிப்ரவரி 2024
ஜாஜ்ஜர், அரியானா
அரசியல் கட்சி இந்திய தேசிய லோக் தளம்
வேலைஅரசியல்வாதி

பகதூர்கர் நகராட்சியில் இரண்டு முறை தலைவராகவும் இருந்தார். மேலும், அகில இந்திய மல்யுத்த சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.

இறப்பு தொகு

25 பிப்ரவரி 2024 அன்று இவர் தனது தானுந்தில் பயணம் செய்தபோது, ஜாஜ்ஜரிலுள்ள பகதூர்கர் என்ற இடத்தில், அடையாளம் தெரியாத சிலர் இவர் மீது துப்பாக்கியால் சுட்டதில் இவர் இறந்தார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Nafe Singh Rathi appointed Haryana INLD chief". 3 January 2020 – via Business Standard.
  2. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2000 TO THE LEGISLATIVE ASSEMBLY OF HARYANA" (PDF). eci.nic.in.
  3. "Latest News, Breaking News Today - Entertainment, Cricket, Business, Politics - IndiaToday". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நஃபே_சிங்_ரத்தி&oldid=3898692" இலிருந்து மீள்விக்கப்பட்டது