நக்னசித்தி
நக்னசித்தி என்பவள், கண்ணனின் எண்மனையாட்டிகளில் ஒருத்தியாகச் சொல்லப்படுகின்றாள். சத்தியை என்றும் அழைக்கப்படும் இவள், எண்மரில் ஆறாவது ஆவாள். இவள் வரலாறு, பாகவதம், விஷ்ணு புராணம், அரி வம்சம் முதலியவற்றில் சொல்லப்படுகின்றது.[1]
நக்னசித்தி, அயோத்தியிலிருந்து கோசல நாட்டை ஆண்ட மன்னன் நக்னசித்துவின் மகள் ஆவாள். சத்தியை, கோசலை[2][3] என்று இவளைப் பொதுவாக அழைக்கிறது பாகவதம் முதலான நூல்கள். மகாபாரதமும், "சத்தியை" என்ற எண்மனையாட்டியரில் ஒருத்தி பற்றிக் குறிப்பிடுகின்றது[4] இவளே தமிழ் மரபில் நப்பின்னையாக அறியப்படுகின்றாள்.
வாழ்க்கை
தொகுநக்னசித்து வளர்த்துவந்த அடங்காக் காளைகள் ஏழினை, மிக நுட்பமாக ஏறுதழுவல் மூலம் வென்று, கண்னன் சத்தியையைக் கரம்பிடித்தான்.[5][6]அவளது மனத்தன்னேற்புக்கு வந்து தோற்றுப்போன ஏனைய இளவரசர்கள், அவர்கள் துவாரகை திரும்பும் வழியில் தாக்கும் போதும், கண்ணனின் யாதவப்படையும், அருச்சுனனும் இணைந்து, அவர்களைத் தோற்கடித்தனர்.[5][6]
நக்னசித்திக்கு, வீரன், சந்திரன், அசுவசேனன், சித்திராகு, வேகவான், விருசன், ஆமன், சங்கு, வசு, குந்தி என பத்து மைந்தர்கள்.[7] "பத்திரவிந்தன்" முதலான பல மைந்தர் அவளுக்கு இருந்ததாக, விஷ்ணு புராணம் சொல்கின்றது.[2] கண்ணனின் மறைவுக்குப் பின், அவனது ஏனைய தேவியர் போலவே இவளும் உடன்கட்டையேறித் தன்னுயிரை மாய்த்துக் கொண்டாள்.[8] [9]
நப்பின்னை
தொகுதமிழ் வழக்கில், கண்ணன் ஏறு தழுவி வென்று மணந்ததாகச் சொல்லப்படும் நப்பின்னையே இவள் என்ற கருத்துக் காணப்படுகின்றது.[10][11] எனினும், நப்பின்னையை மிதிலை இளவரசியாகவும்,[12] சத்தியையை, அயோத்தி இளவரசியாகவும் சொல்வது பிரதான வேறுபாடாகும். மேலும், தமிழில் வழங்குவதுபோல், இவள் கண்ணனுக்கு யசோதை வழியில் முறைமைத்துனி என்பதற்கான சான்றுகள் வடமொழி இலக்கியங்களில் கிடைக்கவில்லை. எவ்வாறாயினும், நப்பின்னையை நிகர்க்கக் கூடிய ஒரேயொரு வடநாட்டுத் தொன்மம், நக்னசித்தி மாத்திரமே.[13]
மேலும் பார்க்க
தொகுஅடிக்குறிப்புகள்
தொகு- ↑ Mani, Vettam (1975). Puranic Encyclopaedia: a Comprehensive Dictionary with Special Reference to the Epic and Puranic Literature. Motilal Banarsidass Publishers. p. 62. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8426-0822-0.
- ↑ 2.0 2.1 Horace Hayman Wilson (1870). The Vishńu Puráńa: a system of Hindu mythology and tradition. Trübner. pp. 79–82, 107. பார்க்கப்பட்ட நாள் 22 February 2013.
- ↑ Prabhupada. "Bhagavata Purana 10.58". Bhaktivedanta Book Trust. Archived from the original on 2013-08-26. பார்க்கப்பட்ட நாள் 2015-09-01.
- ↑ Mani, Vettam (1975). Puranic Encyclopaedia: a Comprehensive Dictionary with Special Reference to the Epic and Puranic Literature. Motilal Banarsidass Publishers. p. 704. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8426-0822-0.
- ↑ 5.0 5.1 "Five Ques married by Krishna". Krishnabook.com. பார்க்கப்பட்ட நாள் 25 January 2013.
- ↑ 6.0 6.1 Prabhupada. "Bhagavata Purana 10.58.32". Bhaktivedanta Book Trust. Archived from the original on 2014-06-14. பார்க்கப்பட்ட நாள் 2015-09-01.
- ↑ Prabhupada. "Bhagavata Purana 10.61.13". Bhaktivedanta Book Trust. Archived from the original on 2010-10-21. பார்க்கப்பட்ட நாள் 2015-09-01.
- ↑ Prabhupada. "Bhagavata Purana 11.31.20". Bhaktivedanta Book Trust. Archived from the original on 2010-06-13. பார்க்கப்பட்ட நாள் 2015-09-01.
- ↑ Kisari Mohan Ganguli. "Mahabharata". Sacred-texts.com. பார்க்கப்பட்ட நாள் 18 March 2013.
- ↑ Sekharipuram Vaidyanatha Viswanatha (20009 "Hindu Culture in Ancient India" p.161
- ↑ Journal of the Institute of Asian Studies, Volume 16 (1996) p.126
- ↑ Journal of the Institute of Asian Studies, Volume 16 (1996) p.126
- ↑ Lynn Marie Ate (1978) "Periyāl̲vār's Tirumol̲i: A Bāla Kṛṣṇa Text from the Devotional Period in Tamil Literature, Volume 1"p.135