நசீம் சகர்

ஈரான் நகரம்

நசிம்சார் (Nasimshahr, பாரசீக மொழி: نسيم شهر‎; முந்நையப் பெயர்: Akbarabad (பாரசீகம் : اکبر آباد), பிற பெயர்கள் : Akbarābād) என்ற நகரமானது, பதரேசுடன் கவுன்டியின் (Baharestan County) தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்நகரத்தில் 31,620 குடும்பங்கள் வாழ்ந்திருந்தன. அக்குடும்ப உறுப்பினர்களின் மக்கள் தொகை 135,824 ஆக இருந்தது. 2016 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, ஒட்டுமொத்த ஈரான் நகரங்களின் மக்கள் தொகை அடர்வில், இந்த நகரம் 48 வது இடத்தினைப் இருக்கிறது.[1] 1995 ஆம் ஆண்டில் இந்த நகரம், நகராட்சி அல்லது நகராண்மைக் கழகமாக என அறிவிக்கப்பட்டது. அதன் பிறகே நில ஆட்சிப் பணிகள் நடைபெற இங்கு அரசு அலுவலகங்கள் உருவாக்கப் பட்டன.

நசிம்சார்
نسيم شهر
நகரம்
நசிம்சார் is located in ஈரான்
நசிம்சார்
நசிம்சார்
ஆள்கூறுகள்: 35°33′52″N 51°09′53″E / 35.56444°N 51.16472°E / 35.56444; 51.16472
Country ஈரான்
Provinceதெகுரான் மாகாணம்
CountyBaharestan
BakhshCentral
மக்கள்தொகை
 (2016 Census)
 • நகர்ப்புறம்
2,00,393 [1]
நேர வலயம்ஒசநே+3:30 (IRST)
 • கோடை (பசேநே)ஒசநே+4:30 (IRDT)

மக்கள் தொகை

தொகு

பொதுவாக ஈரான் நாட்டில் நகரங்களில் மக்கள் குடியேற்றம், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, வேகமாக அதிகரித்து வருகின்றது என ஐக்கிய நாட்டு ஆய்வுகள் கூறுகின்றன.[2][3] இந்த நாட்டில் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்படுகின்றது. இந்த நகரத்தில் பல்வேறு மொழியிலானப் பாரம்பரிய குடும்பங்கள் வாழ்ந்தாலும், பெரும்பான்மையான ஈரானியக் குடும்பங்களில் பிறந்தவர்கள், பாரவேறு எந்த வகையான சமூக சீரமைப்புடன் தொடர்புடையவர்களை விடவும், அதக முக்கியத்துவத்தை, தமது குடும்ப வழித்தோன்றல்களுக்குக் கொடுக்கின்றனர். இதனால் அவர்கள் அருகருகே வாழ்ந்தாலும், தொலைவில் வாழ்ந்தாலும், சிறிய, பெரிய குடும்பங்களுக்கு இடையை உறவுப் பிணைப்புகள் உறுதியுடன் இருக்கின்றன. மேலும், அவரவர் நடத்தும் தொழில்களிலும் குடும்ப உறுப்பினர்கள் பின்னிப்பிணைந்து சமூகத்தில் நன்மதிப்பைப் பெறுகின்றனர்.[4] வங்கிகளிலும் கூட கடன் வசதித் தரும் போது, இந்த குடும்ப வரலாறுகளைக் கணக்கில் கொண்டு பணம் பெறுவது, எளிமையான நடைமுறைகளால் கட்டமைக்கப் பட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தொகை கணக்கெடுப்பின்படி நகரத்தின் மக்கள் தொகை 200,393 நபர்கள் இருந்தனர். இதற்கு முன் எடுக்கப்பட்ட அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2011 ஆம் ஆண்டு, 157,474 நபர்கள் இருந்தார்கள். தற்பொழுது உள்ள மக்கள் தொகை எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, இந்நகரத்தின் மக்கள்தொகை அடர்வு +27.25% அதிகரித்துள்ளது.

காட்சியகம்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 https://www.amar.org.ir/english
  2. Asia-Pacific Population Journal, United Nations. "A New Direction in Population Policy and Family Planning in the Islamic Republic of Iran". Archived from the original on 14 February 2009. பார்க்கப்பட்ட நாள் 14 April 2006.
  3. "Iran – population". Countrystudies.us. பார்க்கப்பட்ட நாள் 18 June 2011.
  4. http://countrystudies.us/iran/52.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=நசீம்_சகர்&oldid=3093589" இலிருந்து மீள்விக்கப்பட்டது