நஜ்மா அக்தர்
நஜ்மா அக்தர் (Najma Akhtar)(பிறப்பு 1953) என்பவர் இந்தியக் கல்வியாளர் மற்றும் நிர்வாகி ஆவார். இவர் ஏப்ரல் 2019 முதல், ஜாமியா மில்லியா இஸ்லாமியா இந்தியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்து வருகிறார். இப்பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி வகித்த முதல் பெண்மணியும் இவர்தான்.[1]
கல்வி
தொகுஅக்தர் 1953-ல் பிறந்தார்.[2] இவர் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் படித்தார். இங்கு இவர் தங்கப் பதக்கம் வென்று தேசிய அறிவியல் திறமைக்கான உதவித்தொகையைப் பெற்றார்.[3] குருச்சேத்திரப் பல்கலைக்கழகத்தில் கல்வியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[1][2][4] இங்கிலாந்தில் உள்ள வார்விக் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் குறித்து கற்க பொதுநலவாய நிதியுதவியினைப் பெற்றார்.[4] மேலும் பாரிஸில் (பிரான்ஸ்) உள்ள பன்னாட்டுக் கல்வித் திட்டமிடல் நிறுவனத்திலும் பயிற்சி பெற்றார்.
தொழில்
தொகுஅக்தர் 130 நாடுகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளுக்கான தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் மேலாண்மைப் பல்கலைக்கழகத்தில் பதினைந்து ஆண்டுகள் பணியாற்றினார்.[3] அலகாபாத்தில் முதல் மாநில அளவிலான மேலாண்மை நிறுவனத்தை நிறுவிய இவர், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டுப்பாட்டாளராகவும், கல்வித் திட்டங்களின் இயக்குநராகவும் இருந்தார்.[3] ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் மற்றும் டானிடா ஆகியவற்றின் ஆலோசகராக இருந்துள்ளார்.[3][5]
ஏப்ரல் 2019-ல், மனிதவள மேம்பாட்டு அமைச்சக பரிந்துரையில் இந்தியக் குடியரதுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலின் பேரில் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் துணைவேந்தராக ஐந்தாண்டுக் காலத்திற்கு நியமிக்கப்பட்டார்.[1][5] அக்தர் பாலின சமத்துவத்திற்கான வழக்கறிஞராக இருந்து வருகிறார்.<[3] மேலும் பலதரப்பட்ட கலாச்சார பின்னணிகளைக் கொண்ட முன்னணி குழுக்களுக்குப் பெயர் பெற்றவர்.[2][6] தனது பதவிக்காலத்தில் ஜாமியாவில் மருத்துவக் கல்லூரியை நிறுவுவதே தனது இலக்கு என்றார்.[7] பல்கலைக்கழகத்தின் 99 ஆண்டுக்கால வரலாற்றில் முதல் பெண் துணைவேந்தராக இவர் நியமிக்கப்பட்டது குறித்து, "எனது நோக்கம் கண்ணாடி கூரையை உடைப்பது அல்ல, ஆனால் நான் நிச்சயமாகக் கண்ணாடி கூரைக்கு எதிரானவள். அதே கல்வித் தகுதியும் அனுபவமும் இருந்தால் அது ஏன் இருக்கிறது?'' எனத் தெரிவித்தார் நஜ்மா.[7]
2022ஆம் ஆண்டில், இந்திய அரசால் அக்தருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[8] 19 சனவரி 2023 அன்று, இவருக்கு கர்னல் என்ற கௌரவப் பதவி வழங்கப்பட்டது.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Amandeep Shukla (12 April 2019). "Professor Najma Akhtar appointed Jamia Millia's first woman vice-chancellor". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 13 April 2019.
- ↑ 2.0 2.1 2.2 "Who is Najma Akhtar, Jamia's first woman V-C?". Okhla Times. 11 April 2019. பார்க்கப்பட்ட நாள் 3 May 2019.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 "Jamia gets its first woman vice-chancellor". The New Indian Express. 11 April 2019. பார்க்கப்பட்ட நாள் 3 May 2019.
- ↑ 4.0 4.1 "Academician Najma Akhtar Appointed First Woman Vice-Chancellor of Jamia Millia Islamia". News18.com. 11 April 2019. பார்க்கப்பட்ட நாள் 3 May 2019.
- ↑ 5.0 5.1 Kunju, Shihabudeen (11 April 2019). "Jamia Gets Its First Woman Vice-Chancellor". NDTV. பார்க்கப்பட்ட நாள் 3 May 2019.
- ↑ "Prof. Najma Akhtar appointed as first lady VC of Jamia Millia Islamia". The Indian Awaaz. 12 April 2019. பார்க்கப்பட்ட நாள் 3 May 2019.
- ↑ 7.0 7.1 "amia Millia's first woman VC Najma Akhtar didn't aim to break glass ceiling but was against its very existence". Hindustan Timesdate=13 April 2019. பார்க்கப்பட்ட நாள் 3 May 2019.
- ↑ "Jamia's First Female VC Najma Akhtar Selected for Padma Shri". News18 (in ஆங்கிலம்). 2022-01-26. பார்க்கப்பட்ட நாள் 2022-03-21.
- ↑ "JMI Vice Chancellor Prof. Najma Akhtar conferred Honorary Colonel rank in NCC" (PDF). jmi.ac.in. பார்க்கப்பட்ட நாள் 13 February 2023.