நஜ்மா பர்வீன்
நஜ்மா பர்வீன் (Najma Parveen)(பிறப்பு 20 டிசம்பர் 1990) என்பவர் பாக்கித்தானிய விரைவோட்ட வீராங்கனை ஆவார். இவர் 2016 மற்றும் 2020 கோடைக்கால ஒலிம்பிக்கில் பாக்கித்தானை பிரதிநிதித்துவப்படுத்தினார். சூலை 2021 நிலவரப்படி, இவர் 200 மீ, 400 மீ மற்றும் 400 மீ தடை ஓட்டங்களில் தேசிய சாதனை படைத்தவர் ஆவார்.
தனிநபர் தகவல் | |||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 20 திசம்பர் 1990 பாக்கித்தான் | ||||||||||||||||||||||
உயரம் | 5 அடி 5 அங் (1.65 m) | ||||||||||||||||||||||
எடை | 56 கிலோகிராம்கள் (123 lb) | ||||||||||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||||||||||
நாடு | பாக்கித்தான் | ||||||||||||||||||||||
விளையாட்டு | தடகள வீராங்கனை | ||||||||||||||||||||||
நிகழ்வு(கள்) | விரைவோட்டம் | ||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
தொழில்
தொகுபர்வீன் நாட்டின் சாதனை விளையாட்டு வீரர்களின் ஒருவராக உள்ளார்.[1]
தேசிய போட்டிகள்
தொகுபர்வீன் அனைத்து தேசிய போட்டிகளிலும் பாக்கித்தானின் தண்ணீர் மற்றும் சக்தி மேம்பாட்டு முகமையினை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். 2019ல் பெசாவரில் நடந்த 33வது தேசிய விளையாட்டுப் போட்டியில் 200 மீட்டர் விரைவோட்டத்தில்ல் புதிய சாதனையை நிகழ்த்தினார். ஒரு மாதம் கழித்து இவர் நேபாளத்தில் நடைபெற்ற போட்டியில் இதை மீண்டும் முறியடித்து சாதனைப் படைத்தார்.
பன்னாட்டு போட்டிகள்
தொகுபர்வீன் 2016 கோடைக்கால ஒலிம்பிக்கில் பெண்கள் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டார். இதில் இவர் 26.11 வினாடிகளில் கடந்தார். எனவே அரையிறுதிக்குத் தகுதி பெறவில்லை.[2][3] 2020 கோடைக்கால ஒலிம்பிக்கில் இதே நிகழ்வில் இவர் போட்டியிட்டார். பருவத்தில் சிறந்ததாக இருந்தாலும், தனது தகுதிச்சுற்றில் கடைசி இடத்தைப் பிடித்தார்.
தேசிய சாதனைகள்
தொகுநிகழ்வு | நேரம் | போட்டி | தேதி |
---|---|---|---|
200 மீ | 23.86[4] | 33வது தேசிய விளையாட்டு, பெசாவர் | 2019 |
23.69[5] | 13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டி, காத்மாண்டு, நேபாளம் | டிசம்பர் 2019 | |
400 மீ | 53.63[4] | 33வது தேசிய விளையாட்டு, பெசாவர் | 2019 |
400 மீ தடை ஓட்டம் | 1:01.41[4] | 33வது தேசிய விளையாட்டு, பெசாவர் | 2019 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Pakistan Sports Board, Islamabad". sports.gov.pk. பார்க்கப்பட்ட நாள் 2021-07-13.
- ↑ "Najima Parveen". Rio 2016. Archived from the original on August 6, 2016. பார்க்கப்பட்ட நாள் September 3, 2016.
- ↑ "Women's 200m - Standings". Rio 2016. Archived from the original on August 18, 2016. பார்க்கப்பட்ட நாள் September 3, 2016.
- ↑ 4.0 4.1 4.2 "National Games 2019". nationalgames2019.pk. பார்க்கப்பட்ட நாள் 2021-07-13.
- ↑ "Athletics Federation of Pakistan". www.afp.com.pk. பார்க்கப்பட்ட நாள் 2021-07-13.
வெளி இணைப்புகள்
தொகு- பாக்கித்தான் விளையாட்டு வாரியத்தின் சுயவிவரம் (அதிகாரப்பூர்வ இணையதளம்)